ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 28 May 2013

திருமண சான்றிதழ் மற்றும் சர்டிபிகேட் எதுவேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கலாம்

To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for 
Rs 1 and Rs 25.

நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)

Links to extract EC in English - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

Links to extract EC in Tamil - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

Links to extract Registered Documents -
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

Links to extract Marriage Certificate
http://www.tnreginet.net/english/smar.asp

Links to CHECK Registered Chit Companies - http://www.tnreginet.net/english/schit.asp

Links to CHECK Registered Society - http://www.tnreginet.net/english/society.asp

Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

Please SHARE if the info is worth enough...........


Sunday, 26 May 2013

தகவல் அறியும் உரிமை சட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்,
 
இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய அணைத்து சந்தேகங்களும் நிவர்த்தி படும் வகையில் இந்த கையேடு தமிழ் நாடு அரசின் சார்பாக வெளியிட பட்டுள்ளது. 
 
நம் சகோதரர்கள் அனைவரும் இந்த தகவல் அறியும் சட்டத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கி  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

Monday, 20 May 2013

மோடி பலூனை ஊதுவது யார்?


லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன?
ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.

நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011-ல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012-ல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.

குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.

குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?

நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்! முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா! 

நன்றி: சமஸ், | படம்: Reuters

Saturday, 18 May 2013

தாய் நலம்; சேய்...?


பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு தாய்க்கு, கருவுற்ற மூன்றாவது மாதம் முதலாகவே முறையான ஆலோசனை அளித்து, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு வழங்கும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் பல வகையாக, பல பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இவை நல்லமுறையில் செயல்படுத்தப்படவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் (பிறந்த 7 நாள்களுக்குள்) மரணமடைவது மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக இருக்கிறது. ஆயிரம் குழந்தைகளில் 32 பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன. அடுத்த நிலையில் உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அதிகம்.
தமிழ்நாட்டில் இத்தகைய மோசமான சூழ்நிலை இல்லை என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 11. ஆனாலும் நம்மைவிட கேரள மாநிலம் சிறப்பான இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஆயிரத்தில் 5 பச்சிளம் குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் இத்தகைய மரண எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று சமாதானமாகச் சொல்லப்பட்டாலும்கூட, இந்தியாவில் கருவுற்ற தாய்மார்களுக்குச் சரியான சத்துணவு, ஆலோசனை, சிகிச்சை, முறையான பேறுகால மருத்துவம் ஆகியன அளிக்கப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள்தான் இதற்கான முழுமுதல் காரணம்.
இத்தகைய மரணங்கள் வீட்டுக்குள் பிரசவம் நடைபெறுவதால்தான் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடைபெறும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் டாக்டர்கள் உடனடியாகக் கவனம் செலுத்துவதால் இத்தகைய மரணங்கள் பெருமளவு குறையும் என்றும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால், மகப்பேறு மருத்துவமனைகள் நகராட்சி அளவில் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துவரும் பணியை கிராம சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டார்கள். இந்தப் பணியில் தொய்வு இருக்கிறது என்பதைத்தான் இத்தகைய மரணங்கள் உணர்த்துகின்றன.
2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவது ஒடிசாவில் 42%, பிகாரில் 23%, அசாமில் 36%, உத்தரப்பிரதேசம் 18%, மத்தியப்பிரதேசம் 37%, ஜார்க்கண்ட் 7%, சத்தீஸ்கர் 30% என்பதாக இருந்தபோது, தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பது 79% ஆக இருந்தது. இருப்பினும் கேரளம் நம்மைவிட முந்திக்கொண்டது. அங்கே 99% பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு தமிழக அரசு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ.12,000 வழங்குகிறது. பிரசவத்துக்கு முன்பாக ரூ.4,000மும் பிரசவத்துக்குப் பிறகு இரு கட்டங்களில் தலா ரூ.4,000மும் வழங்கப்படுகிறது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் பச்சிளம் குழந்தைத் திருட்டு சம்பவங்களைப் பார்க்கும்போது, மருத்துவமனைப் பிரசவ எண்ணிக்கை குறைந்து போகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.
கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது அரசு மருத்துவமனையைத் தேடிவரக் காரணம், அரசு வழங்கும் நிதியுதவி மற்றும் வளைகாப்புப் பலன்கள், பெண்குழந்தை பிறந்தால் கிடைக்கும் அரசு நிதியுதவி ஆகியவற்றை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடுபோகும் என்றாலோ, எலிகள் கடிக்கும் என்றாலோ அவர்கள் அரசு மருத்துவமனையைத் தவிர்க்கவே முயலுவார்கள்.
ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000 பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் கேட்பதும், தராவிட்டால் குழந்தையை மாற்றிவிடுவோம் என்று மிரட்டுவதும் பல அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. ஒரு சில ஊழியர்களின் தவறுகள் பரவலாக ஏழை எளியவர்கள் மத்தியில் அரசு மருத்துவமனை என்றாலே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அவர்களுக்குத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வசதி இல்லை. ஆகவே மீண்டும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, முறையாக நிர்வாகம் செய்யப்பட்டால்தான் இந்த பயம் அகலும்.
தமிழ்நாட்டில் மருத்துவமனைப் பிரசவங்கள், கேரளத்தைப்போல 99% ஆக உயர வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளில் நிலவும் குழந்தைத் திருட்டு, லஞ்சம், எலி, நாய்கள் தொல்லை இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். தாய்மை உணர்வோடு பிரசவங்கள் அங்கே நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
உலக அளவில் மூன்றில் இரண்டு சிசு மரணம் பத்து நாடுகளில் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவும், சீனாவும்கூட இந்தப் பட்டியலில் இருப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரசவத்தில் குழந்தைகள் மரணமடைவதைத் தடுப்பது, தாய் சேய் நலத்தைப் பாதுகா

ப்பது போன்ற பிரச்னைகளைக்கூட முழுமையாகவும் முறையாகவும் செய்ய முடியாவிட்டால், பொருளாதார வல்லரசாக மாறுவதால் என்ன பயன் இருக்க முடியும்?

நன்றி:ALAVUDEEN

Saturday, 4 May 2013

இன்ஷா அல்லாஹ் அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்





லக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம்அடுத்த 20ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010இல் 1.6 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030இல் 2.2 மில்லியராக உயரலாம். (ஒரு மில்லியர் அல்லது பில்லியன் என்பது 100 கோடி ஆகும்.)
பியூ ஆய்வு மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இது அரசியல் சார்பற்றதுமதப் பாகுபாடு பாராட்டாததுபியூ அறக்கட்டளைதான் இதற்கு நிதியுதவி செய்துவருகிறது. இம்மையத்தின் மேலாளர்: Luis Lugo.



உலகமெங்கிலுமுள்ள பல்துறை அறிஞர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டின் ஆய்வு முடிவை முன்பே அறிவித்திருந்த இந்த மையம்இப்போது அடுத்த இரு தசாப்தங்களுக்கான ஆய்வின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளியிட்டுள்ளது.

அடுத்த இருபது ஆண்டுகளில்

எதிர்வரும் இரு தசாப்தங்களில் முஸ்லிம் அல்லாத மக்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி 0.7 விழுக்காடாக இருக்கும் நிலையில்முஸ்லிம் மக்களின் சராசரி வளர்ச்சி 1.5 விழுக்காடாக இருக்கும்.


2030ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை சுமார் 8.3 மில்லியராக (830 கோடி) இருக்கும் நிலையில்மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 26.4 விழுக்காடாக இருப்பர்.2010இல் உலக மக்கட்தொகை 6.9 மில்லியர் (690 கோடி) என்பதும் அதில் 23.4விழுக்காடு முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.


இருப்பினும்முஸ்லிம் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 1990-2010 தசாப்தங்களில்2.2 விழுக்காடாக
 இருந்ததுஇது 2010-2030 ஆகிய தசாப்தங்களில் 1.5 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 தசாப்தங்களில் மக்கட்தொகை

ஆண்டு
1990
2000
2010
2020
2030
மற்றவர்கள் (மில்லியர்)
4.2
4.8
5.3
5.8
6.1
முஸ்லிம்கள் (மில்லியர்)
1.1 (19.9%)
1.3 (21.6%)
1.6 (23.4%)
1.9 (24.9%)
2.2 (26.4%)
                

 
கண்டங்கள் வாரியாக முஸ்லிம் மக்கட் தொகை
           2010                    2030
கண்டங்கள்
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
உலகம்
161,93,14,000
100%
219,01,54,000
100%
ஆசியா மத்திய தரைக்கடல் பகுதி
100,55,07,000
62.1%
129,56,25,000
59.2%
மத்திய கிழக்குவட ஆப்ரிக்கா
32,18,69,000
19.9%
43,94,53,000
20.1%
ஆப்ரிக்கா &தெற்கு பாலைவனம்
24,25,44,000
15.0%
38,59,39,000
17.6%
ஐரோப்பா
4,41,38,000
2.7%
5,82,09,000
2.7%
அமெரிக்கா
52,56,000
0.3%
1,09,27,000
0.5%


ஐரோப்பா

அடுத்த 20 ஆண்டுகளில்இந்தோனேசியாவைவிட பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கட்தொகை உயரும்.

எகிப்தைவிட நைஜீரியாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகும்.

ஐரோப்பாவில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம் மக்கட்தொகை நெருங்கிவிடலாம். 2010இல் 6 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள்2030இல் 8.2 விழுக்காடாக உயர்வர். அதாவது ஐரோப்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கை (2010) 44.1 மில்லியனிலிருந்து (2030) 58.2 மில்லியனாக அதிகரிக்கும்.



நாடு
2010(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
2030
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
ஆஸ்திரியா
5.7%
9.3%
சுவிட்சர்லாந்து
4.9%
9.9%
பெல்ஜியம்
6%
10.2%
ஃபிரான்ஸ்
7.5%
10.3%
பிரிட்டன்
4.6%
8.2%

அதிகரித்த ஆயுள்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெரும்பாலும் 15-29ஆக இருக்கிறது. பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. சுகாதாரம் மேம்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. மனித ஆயுள் கூடியுள்ளது. இத்தியாதி காரணங்களால் முஸ்லிம் மக்கட்தொகை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 40 முதல் 50 விழுக்காடு இருப்பர்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 முதல்12 விழுக்காடு இருப்பர். நடுத்தர வயதினர் 1990இல் 19 விழுக்காடு; 2010இல் 24விழுக்காடு; 2030இல் 30 விழுக்காடு இருப்பர்.

2030ஆம் ஆண்டில் உலகிலுள்ள ஒவ்வொரு 10 இளைஞர்களில் மூவர் முஸ்லிம்களாக இருப்பர். 15 முதல் 29 வயது வரையிலானவர்களில் 29.1 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர் என எதிர்பார்க்கலாம். இது 2010இல் 25.8 விழுக்காடாகவும்1990இல் 20 விழுக்காடாகவும் இருந்தது.

2030இல் முஸ்லிம்களில் சன்னிகளே 87-90 விழுக்காடு இருப்பார்கள். ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு.

உலக முஸ்லிம்களில் 74.1 விழுக்காட்டினர் 49 நாடுகளில் பெரும்பான்மையினராக (2010) வாழ்கின்றனர். முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள வளரும் நாடுகளில் 23.3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

முஸ்லிம்களில் 3 விழுக்காட்டினர்வளர்ந்த நாடுகளான ஐரோப்பாஅமெரிக்கா,ஆஸ்திரேலியாநியூஸிலாந்துஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் 47.8 விழுக்காடு இல்லத்தரசிகள் (15-49 வயதினர்) ஏதேனும் ஒரு குடும்பக் கட்டுப்பாடுச் சாதனம் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளில் இது 63.3 விழுக்காடாக உள்ளது.
ஆசியா

ஆசிய நாடுகளில் 2030இல் 10 பேரில் 3 பேர் (27.3%) முஸ்லிம்களாக இருப்பார்கள்.2010இல் 24.8 விழுக்காடாக இது இருந்தது. சீனாவில் முஸ்லிம்கள் 2 விழுக்காடே இருந்தாலும், 2030இல் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா19ஆம் இடத்தில் இருக்கப்போகிறது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் முன்னணியில் இருப்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள்தான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் -இஸ்ரேலைத் தவிர- மொத்தத்தில் 50விழுக்காடு முஸ்லிம்கள் 2030இல் இருப்பர்; 17 நாடுகளில் 75 விழுக்காட்டைவிடக் கூடுதலாக இருப்பர்.

பாலஸ்தீனத்தில் 2010இல் 17.7 விழுக்காடு முஸ்லிம்கள் இருந்தனர். இது 2030இல் 23.2விழுக்காடாக -அதாவது 2.1 மில்லியனாக- உயர வாய்ப்பு உண்டு.

ஆப்ரிக்கா மற்றும் தெற்குப் பாலைவனப் பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 38.59கோடி (60%) முஸ்லிம்கள் இருப்பார்கள். ஐரோப்பாவில் மொத்த மக்கட் தொகையில்10 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர்.

கொசோவா: 93.5%; அல்பேனியா: 83.2%; போஸ்னியா: 42.7%; மாசிடோனியா: 40.3%;பல்கேரியா: 15.7%; ரஷியா: 14.4%; ஜார்ஜியா: 11.5%; பிரான்ஸ்: 10.3%; பெல்ஜியம்:10.2%.

அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கலாம். அதாவது 9,40,000லிருந்து 20,70,000ஆக உயரக்கூடும். இதுமொத்த மக்கட்தொகையில் 6.6 விழுக்காடு ஆகும்.

அல்லாஹ்வே மிகப் பெரியவன்!

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR