ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday, 26 July 2015

ஆர்.எஸ்.எஸ்(RSS) அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை
(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)
மக்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ,-  தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்க மாகும் என்பதை, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளையும், அறிக்கைகளையும்  கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்துத்துவத்தைப் பற்றி  அண்மையில் நான் காண நேர்ந்த ஆர்வமளிக்கும்  ஓர் ஆய்வு அது பெற்றிருக்கவேண்டிய கவனத்தைப் பெறாமல் போனது பெரும் இழப்புக் கேடேயாகும்.  சியாம் சந்தின் காவியுடை பாசிசம் என்ற நூல் ஓர் மதி நுட்பம் நிறைந்த, நுணுக்கமாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு நூலாகும். சியாம் சந்த் அரியானா சட்ட மன்ற உறுப் பினராக பல ஆண்டுகள் இருந்து, கலால், வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, உணவு, வினியோகம், சமூக நலம் போன்ற பல துறைகளில் அமைச்சராகவும் சேவை செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு  அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட் டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர் களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தலித் பகுஜன் மக்களை  உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.
இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.
சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர் களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத் தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.
பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண் டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல் மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.
சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர் களாக ஆக்கவேண்டும்.  ஒரு ரத்ததான முகாம்  நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விப சாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட் டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள்,  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக் கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும். நமது கட்டளைப் படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்  மாணவர்களை படிக் கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும்.
கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட் டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண் டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.
முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர் களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர்ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.
இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட வர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், , அம்பேத்கர் வழிநடப்பவர்களிடம் இத்தகைய இலக்கியங்கள் உள்ளனவா என்பது சோதனையிடப்படவேண்டும்.
அத்தகைய இலக்கியங்கள் பொது மக்களைச் சென்றடையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். இந்து இலக்கியம் மட்டுமே பிற்படுத்தப் பட்ட மற்றும் அம்பேத்கர் வழி நடப்ப வர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப் படாமல்  உள்ள பேக்லாக் பணியிடங் களில்  தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியி னத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள்,  அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படு வதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே  நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்ப வர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.
அம்பேத்கர் சிலைகள் மீது இன்னமும் பெரிய முயற்சியுடன் தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் எழுத்தாளர்கள் நமது கட்சியில் அதிக அளவில் நியமிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான இலக் கியங்களை அவர்களைக் கொண்டு எழுதச் செய்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இத்தகைய செய்திகள் முறையாகத் தொகுக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவி யுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
யோகீந்தர் சிக்கந்த்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
Source: http://www.viduthalai.in/component/content/article/97-essay/102786-2015-06-06-08-42-24.html

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR