கி.பி.1526 - முதல் பாணிபட் போர்
டெல்லிக்கு அருகே (இன்றைய
ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும்
அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம்
லோடிக்கும் இடையே நடந்தது.
லோடி கொல்லப்பட்டு பாபர்
வெற்றி பெறுகிறார். இந்தியாவின்
வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப்
பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின்
தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார்.
அங்கு முழுமை அடையாமல் கிடந்த
பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின்
பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம்
லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல்
நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித்
நிலம் தொடர்பான
சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின்
ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என
கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால்
ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்
கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம்
பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும்
ஓரணியில்
திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள்.
நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள்
அப்போராட்டத்தை ஒடுக்கினாலும்,
இனி தாங்கள்
தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில்
இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை -
பிரித்தாளும்
கொள்கையை வளர்த்தெடுக்க
வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள்.
அதற்கு அவர்கள் உடனடியாக
எடுத்துக்கொண்ட ஆயுதம்தான்
அயோத்தி - பாபர் பள்ளிவாசல்
தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட
பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும்
பூஜை செய்யும்
திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும்,
பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில்
ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும்
வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம்
ஏற்பாடு செய்கிறது. இதுதான்
பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட
துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம்
நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின்
உண்மைகளைக் கூறும்
கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின்
நள்ளிரவில் பள்ளிவாசலின்
கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில்
ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது.
அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும்
பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள்
அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார்
தெரிவிக்கிறார்கள். புகார்
பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல்
தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச்
சொல்கிறார். அன்றைய
உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய
வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும்
பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை.
அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார்,
பிரதமர் நேருவின்
உத்தரவை பொருட்படுத்தாமல்,
பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய
பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர்
அமைப்பு, அது எங்களுக்குச்
சொந்தமான இடம் என்று வழக்கில்
தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம்,
இது தங்களுக்குச் சொந்தமான
இடம் என்று நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்
இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ
ஹிந்து பரிஷத்
அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக்
குழுவை முஸ்லிம்கள்
தொடங்குகின்றனர். அதே வருடம்
அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்
காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள்
வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய
பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,
பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல்
நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக
இருந்தபோது வன்முறையாளர்கள்
பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது.
உடனடியாக அத்வானி, குஜராத்தில்
சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத
யாத்திரையை நடத்தி நாடெங்கிலும்
பீதியை உண்டாக்குகிறார். ஆனால்
அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள்
நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத்
யாதவ்,
அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார்.
அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்
இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும்
திரட்டப்பட்ட மதவெறி பிடித்த,
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம்
பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது.
நாடெங்கிலும் மதக்கலவரங்கள்
நடந்து அப்பாவி மக்கள்
கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள்
பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய
காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ்
அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித்
இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய
நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன்
அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947
வரை எவையெல்லாம் யாருடைய
வழிபாட்டுத் தலங்களாக
இருந்தனவோ அவை அப்படியே தொடரும்
என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித்
நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம்
திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப்
பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது.
மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர்
மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும்
பணி தொடங்கும் என விசுவ
ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில்,
கோத்ரா சம்பவத்தைத்
தொடர்ந்து மதக்கலவரம்
வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம்
அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான
முஸ்லிம்களின் சொத்துக்கள்
அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள்
கொண்ட அலஹாபாத்
உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம்
யாருக்கு சொந்தம் என்ற
விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில்
இருந்ததா? என்று ஆய்வு செய்ய
தொல்லியல் துறைக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டது.
2009 - லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள்
விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித்
இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால்,
உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும்
மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக
நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில்
அலஹாபாத் நீதிமன்றம்,
சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின்
அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது.
சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக்
கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.
0 comments:
Post a Comment