ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday, 25 June 2015

நோன்பின் ஒழுக்கங்கள்


நோன்பாளிஇச்சையைத்தூண்டும்காட்சிகளைவிட்டும்வெறுக்கத்தக்ககாட்சிகளைவிட்டும் தன்பார்வையைதாழ்த்திக்கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல்கோள் மூட்டுதல்பொய்யுரைத்தல்முதலியவற்றைவிட்டும் நாவைப்பேண வேண்டும்

வெறுக்கத் தக்கசெய்திகளையும்இசைகளையும்கேட்பதை விட்டும்காதுகளைப்பேண வேண்டும்

மற்றும் இதரஉடலுறுப்புகளையும்பாவத்தில் மூழ்கவிடாமல்பாதுகாக்கவேண்டும்

சாப்பிடுவதையும்குடிப்பதையும்அதிகமாக நாட்டம்கொள்ளாமல்இருக்கவேண்டும்.

நோன்பு நோற்றுஇருக்கும்நிலையிலும்நோன்பு திறந்தபிறகும்உள்ளத்தைஅல்லாஹ்வின்மீதுஅச்சத்துடனும்ஆதரவுடனும்வைத்துக்கொள்ளவும்.இந்நிலைவணக்கங்கள்அனைத்தின்இறுதியிலும்அமைந்திருக்கவேண்டும்

உடலுறவு முதலியபெருந்தொடக்குநிலையில்இருப்பவர்நோன்பு நோற்கவேண்டிய நேரம்நெருங்கி விட்டால்உணவுஉண்டுவிட்டுநோன்புநோற்பதற்காகநிய்யத்(எண்ணம்)வைத்துக்கொள்ளலாம்.பின்னர்குளித்துத்தூய்மையாக்கிக்கொள்ளலாம்

மாதத்தீட்டுமற்றும்பிரசவத்தீட்டுஇவற்றிலிருந்துஅதிகாலைக்குமுன் துப்புரவாகிவிட்ட பெண்அன்றையநோன்பைநோற்பது கடமை.

நோன்பாளி தன்பல்லைப் பிடுங்கவேண்டியகட்டாயம்ஏற்பட்டால்பிடுங்கிக்கொண்டு அதற்குமருந்து வைத்துக்கொள்ளலாம்.காதுகளிலும்கண்களிலும்சொட்டுமருந்திட்டுக்கொள்வதும்கூடும். சொட்டுமருந்தின் ருசியைதொண்டையில்உணர்ந்தாலும்சரி. நோன்புமுறியாது

கடுமையானவெப்பநிலையில்சகிக்க முடியாதநோன்பாளி தன்உடலைக் குளிர்படுத்திக்கொள்வதால்நோன்புமுறியாது

நோன்பு நோற்றநிலையில் பல்சுத்தம் செய்துகொள்ளலாம்

ஆஸ்துமாபோன்றநோய்களால்ஏற்படும் சுவாசநெருக்கடியைஇலேசு படுத்தும்ஸ்ப்ரேயைநோன்பாளி தன்வாயில்செலுத்திக்கொள்வதால்நோன்புமுறியாது

வாய் வரண்டுபோய் சிரமமாகஇருந்தால்நோன்பாளிஉதடுகளைஈரப்படுத்திக்கொள்ளலாம்.அல்லது(புழபடiபெசெய்யாமல்) வாய்கொப்பளித்துக்கொள்ளலாம்

ஸஹர் உணவைஃபஜ்ருக்குச்சிறிது நேரத்திற்குமுன்பு வரைப்பிற்படுத்துவதும்சூரியன்மறைந்தவுடன்நோன்புதிறப்பதைத்துரிதப்படுத்துவதும்நபிவழி ஆகும்

பழுத்தபேரீத்தம்பழம்அதுகிடைக்காவிட்டால்சாதாரணப்பேரீத்தம்பழம்அதுவும்கிடைக்காவிட்டால்தண்ணீர் அதுவும்கிடைக்காவிட்டால்கிடைக்கும்ஏதேனும் ஓர்உணவைக்கொண்டுநோன்பைத்திறக்கலாம்.எதுவுமேகிடைக்காவிட்டால்உணவுகிடைக்கும் வரைஉள்ளத்தில்நோன்புதிறந்ததாகஎண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளிவணக்கவழிபாடுகளைஅதிகமாக்கிக்கொள்வதும்தடுக்கப்பட்டஅனைத்தையும்விட்டுதவிர்த்துக்கொள்வதும்அவசியமாகும்

ஐவேளைக்தொழுகைகளைஅதனதன்நேரத்தில்ஜமாஅத்துடன்நிறைவேற்றவேண்டும்

பொய் பேசுதல்புறம்பேசுதல்ஏமாற்றுவது வட்டிகொடுக்கல்வாங்கல்செய்வது தடைசெய்யப்பட்டசொல் செயல்அனைத்தையும்விட்டுவிலகியிருக்கவேண்டும்

நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்:யார் பாவமானசொல்லையும்அதைக் கொண்டுசெயல்படுவதையும்விட்டுவிடவில்லையோஅவர் தன்உணவையும்குடிப்பையும்விடுவதில்அல்லாஹ்வுக்குஎந்தத் தேவையும்இல்லை.

நன்றி: Engr.Sulthan

சிந்திக்க மட்டும்

அல்லாஹ்-சுப்ஹானல்லாஹ்

முஸ்லிமான மற்றும் முஸ்லிமல்லாத (மாற்றுமத) அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

இறை விசுவாசிகளே! நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.

தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள் நாம் எங்கே இருக்கின்றோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?

அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர்ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!

ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும்).

சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது.

இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)

 மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்:32)

அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!

சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!

சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்

சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்

சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்

சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்

பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்

(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)

நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?

தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே,சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (திருக்குர்ஆன்6:98)

நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!

அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை,அவன் யாரையும் மிகைத்தோனாகவும்,விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (திருக்குர்ஆன்3:6)

தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும்,கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும்,அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (திருக்குர்ஆன்13:8)

வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!

”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும்உமது இறைவன் மாபெரும் கொடையாளி,அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (திருக்குர்ஆன்96:5)

நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!

நீங்கள் கடலிலிருந்து நய(மும்,சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும்,நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்;இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலைநீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன்அருட்கொடையை நீங்கள் தேடவும்,நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (திருக்குர்ஆன்16:14)

நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!

அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர்,அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள்.  (திருக்குர்ஆன்43:11)

மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!

சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!

கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே!

இதைவிட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின்

விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?

காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல்

இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா? வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை 

இருக்காதே! இது உதவியல்லவா?

சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை

அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமே!  மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!

இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்

நிச்சயமாக செவிபார்வை,உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (திருக்குர்ஆன்17:36)

சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!

சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங்களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள்,

நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில்

பயணிக்கும் போதும் உதவுகிறான்!

ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி

ஒழிந்துக்கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே!

நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே! ஏன் நீங்கள் மரணித்தால்

நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!!

அல்லாஹ் ரஹ்மானில்லையா?  ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?

ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்காவிட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்

கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோகமில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?

சிந்தியுங்கள் சகோதரர்களே!

உங்களுக்கு அளித்த அருட் கொடைகளுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்றுமில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கிறான்!

உங்கள் இறைவன் கூறுகிறான்; 

என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்;நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ,அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.

 ”(திருக்குர்ஆன்40:60)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (திருக்குர்ஆன்75:37)

நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும்,நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்;நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்;ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன்40:61.)

அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும்,வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்;மேலும்அவன் தான் உங்களை உருவாக்கி,உங்கள் உருவங்களை அழகாக்கி,சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்;அவன்தான் அல்லாஹ்;உங்களுடைய இறைவன்;அகிலதாருக்கெல்லாம்இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன்40:64)

அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்;அவனையன்றி (வேறு) நாயனில்லை ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்;அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அனைத்துப் புகழும் அகிலங்கள்எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

(திருக்குர்ஆன்40:65)

(நபியே!) கூறுவீராகஎன்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது,அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதைவிட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்– அன்றியும் அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்றுகட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன்40:66)

சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!

அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால்

பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?

உங்களுக்கு சிறு உதவி இதோ!

அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புறியவில்லை என் மூதாதையர்களின் வழியில் நான்

இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று

கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!

நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும்

(இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்

இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”  (என்பதைக் கூறுவீராக!) (திருக்குர்ஆன்2:186)

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)

நன்றி: Islamic Paradis

Sunday, 7 June 2015

Quran



....:: 6 . الأنعام Al-An'aam ::....

ARABIC | Translation By :Simplified Uthmani

وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ

Waanthir bihi allatheena yakhafoona an yuhsharoo ila rabbihim laysa lahum min doonihi waliyyun wala shafeeAAun laAAallahum yattaqoona
[6:51]

TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
[6:51] (நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள்.

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
[6:51] തങ്ങളുടെ രക്ഷിതാവിങ്കലേക്ക് ഒരുമിച്ചുകൂട്ടപ്പെടുമെന്ന് ഭയപ്പെടുന്നവര്‍ക്ക് ഇത് (ദിവ്യബോധനം) മുഖേന നീ താക്കീത് നല്‍കുക. അവന്നു പുറമെ യാതൊരു രക്ഷാധികാരിയും ശുപാര്‍ശകനും അവര്‍ക്കില്ല. അവര്‍ സൂക്ഷ്മത പാലിക്കുന്നവരായേക്കാം.

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
[6:51] And warn therewith (the Quran) those who fear that they will be gathered before their Lord, when there will be neither a protector nor an intercessor for them besides Him, so that they may fear Allah and keep their duty to Him (by abstaining from committing sins and by doing all kinds of good deeds which He has ordained).

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
[6:51] और तुम इसके द्वारा उन लोगों को सचेत कर दो, जिन्हें इस बात का भय है कि वे अपने रब के पास इस हाल में इकट्ठा किए जाएँगे कि उसके सिवा न तो उसका कोई समर्थक होगा और न कोई सिफ़ारिश करनेवाला, ताकि वे बचें

URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
[6:51]اور اس قرآن کے ذریعے سے ان لوگو ں کو ڈرا جنہیں اس کا ڈر ہے کہ وہ اپنے رب کے سامنے جمع کیے جائیں گے اس طرح پر کہ الله کے سوا ان کوئی مددگار اور سفارش کرنے والا نہ ہو گا تاکہ وہ پرہیزگار ہوجائیں

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்.!
                                                                      (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக் கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!!👌👌👆
இந்திய மக்களே நம்ம காசில் அவர்கள் சொகுசு கொண்டாட கொடுக்கிற காசு பத்தவில்லை என்று பிச்சை கேட்கிறார் பாரிர் !!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR