ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 21 August 2015

“குஜராத் கலவரத்திற்கு முழு காரணம் மோடிதான்” என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட் பணி நீக்கம்

அகமதாபாத் : குஜராத் முஸ்லிம்
இனப்படுகொலை வழக்கில்
நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த
காரணத்தால் பழிவாங்கப்பட்ட
ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே
நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து அவசரமாக கூட்டிய
கூட்டத்தில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு
எதிரான தங்களது கோபத்தை வெளியிட
அனுமதிக்கவேண்டும் என்று மோடி
உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட்
உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம்
தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ்
பட்டை பழிவாங்கும்விதமாக துறைசார்ந்த
விசாரணைக்கு உள்படாதது, அனுமதியின்றி
விடுமுறையில் சென்றது, காவலர் பயிற்சிப்
பள்ளித் தலைவராக இருந்தபோது அலுவலக
வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது, ஒரு
பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தது
போன்ற காரணங்களைக் கூறி சஸ்பெண்ட்
செய்தது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டு
ஓராண்டு முடிந்த நிலையில், மத்திய உள்
துறையின் மறு ஆய்வுக் குழு இவரது
சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு
செய்தது. அப்போது இவரது
சஸ்பெண்டை நீட்டிக்கத் தேவையில்லை என
அக்குழு முடிவெடுத்தது.
இது குஜராத் மாநில அரசுக்குத்
தெரிவிக்கப்பட்டது. மத்திய உள் துறையின்
இந்தப் பரிந்துரையை குஜராத் மாநில
ஏற்றுக்கொண்டது.
ஆயினும், மேலும் இரு குற்றச்சாட்டுகளுக்காக
சஞ்சீவ் பட் சஸ்பெண்ட்
செய்யப்பட்டிருந்ததால், அவர்
உடனடியாகப் பணிக்குத் திரும்ப முடியாத
சூழல் நிலவியது. இந்நிலையில், சஞ்சீவ்பட்டை
பணியிலிருந்தே நீக்கி அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளது குஜராத் மாநிர அரசு.

Friday, 14 August 2015

இந்திய பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியை எவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றன என அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராத செய்திகளை, இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார், எஸ்.எம். முஷ்ரிப். மாலெகவ்னில் உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்று, ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூறு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது ‘சிமி' என்ற முஸ்லிம் இயக்கத்தின் சதி என அரசு உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனை பத்திரிகைகளில் படித்துவிட்டு, இதுதான் உண்மை என மக்கள் நம்பினர். ஆனால், இது போன்ற நேரங்களில் அதற்கு மேல் சிந்திக்காமல், நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறோம். சிலர் மட்டுமே இது சார்ந்த செய்திகளை முனைப்புடன் படிக்கிறோம். அத்துடன் நம் அரசியல் முனைப்பு அணைந்து விடுகிறது.

ஆனால், இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரங்களில் ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. முதலில் அரசு எந்த விசாரணையும் இன்றியே முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளின் பெயர்களை வெளியிடுகிறது. அது பெரும்பாலும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹுஜி, சிமி என நீளும். அதன் பிறகு குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரத்தில் வசிக்கும் பல முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்து, விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கும். இப்படிப்பட்ட துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்காகவே, பல்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இயற்றப்பட்டுள்ளன.

மாலெகவ்னில் சில வழக்கங்கள் முதன் முறையாக மீறப்பட்டன. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது. அது MH 15 - 4572 எண்ணுடைய LML Freedom வண்டி. இந்த இரு சக்கர வாகனத்தை வைத்து விசாரணையை தொடங்கினார், மகாராட்டிர தீவிரவாத ஒழிப்புப் படையின் தலைவர் ஹெமந்த் கர்கரே. வண்டியின் எண்ணும், சேசிஸ் எண்ணும் மாற்றப்பட்டிருந்தது. விசாரணை அத்தனை எளிதாக இல்லை. இருப்பினும், அந்த ஊரில் உள்ள வண்டியின் விநியோகஸ்தரிடம் இருந்த ஆவணங்களை வைத்து, வண்டியின் உரிமையாளரை விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அது, சாத்வி பிரக்நயா தாக்குரின் (38) வண்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் இவர் இந்த வழக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அந்த இரு சக்கர வாகனத்தை மனோஜ் சர்மா என்பவருக்கு விற்றதுபோல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. மனோஜ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்தவர். மத்தியப் பிரதேசத்தின் மோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்ற வழக்கில் இவர்தான் முக்கியக் குற்றவாளி. இதனை அடுத்து சாத்வி பிரக்ந்யா தாக்குரை தீவிர விசாரணைக்கு உட்படுத்திய போது பல உண்மைகள் வெளிவந்தன. பல பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சாத்வி பிரக்நயா தாக்குர், பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் முக்கியத் தலைவி. அதன் பிறகு அவர் வி.எச்.பி.யின் மகளிர் அமைப்பான ‘துர்கா வாகினி'யின் முன்னணித் தலைவியாக இருந்தார். மேலும் விசாரணை பல தளங்களில் தொடர்ந்தது.

முன்னாள் ராணுவ வீரர்களின் ஆர்.எஸ்.எஸ். பிரிவு தலைவர் ரமேஷ் உபாத்யாயாவுக்கு இருந்த தொடர்பு வெளிப்பட்டது. அவர்தான் இந்த குண்டு வெடிப்புக்கான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை கொடுத்தவர். சமீர் குல்கர்னி என்பவர்தான் இந்த குண்டிற்கான அடிப்படை ரசாயனங்களை கொடுத்திருந்தார். நாசிக்கில் உள்ள போன்சலா மிலிடரி பள்ளியின் முக்கியப் பொறுப்பாளரான முன்னாள் ராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னிதான், ஆர்.டி.எக்ஸ்.அய் பயன்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சியை அளித்திருந்தார். முன்னாள் ராணுவத் தளபதி ஷெலெஸ் ரைக்கர்தான் இந்த குண்டு வெடிப்பிற்கான மொத்த நிதி உதவியையும் செய்திருந்தார். அடுத்துதான் முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. இதனை ஹெமந்த் கர்கரேயின் முக்கிய வேட்டை எனலாம்.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தளபதி பிரசாத் புரோகித் நவம்பர் 4, 2008 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய ஆதரவாளர்; செயல்பாட்டாளர். அவர்தான் இந்த மாலெகான் குண்டு வெடிப்பு திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். இதனை அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டார். மேலும், அவர் பல முகாம்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பல்வேறு துணை அமைப்புகளின் முக்கியத் தொண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு சார்ந்த பயிற்சிகளை கொடுத்து வந்ததையும் விரிவாகவே ஒப்புக் கொண்டார். அவருடைய மடி கணினியில், இது தொடர்புடைய அத்தனைத் தகவல்களும் இருந்தன. பயிற்சி எடுத்துக் கொண்ட 58 பேரின் பட்டியல் என இது தொடர்பான விசாரணைக்குப் பல புதிய பரிமாணங்களை அது அளித்தது.

தளபதி பிரசாத் புரோகித்துக்கும் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நடைபெற்ற கைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் எனப் பல புதிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் இருந்தன. அடுத்து ‘அபினவ் பாரத்'தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுதாகர் சதுர்வேதியிடம் பல துப்பாக்கிகளும், பல போலியான இந்திய ராணுவத்தினரின் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருந்தவர் ஹெமந்த் கர்கரே. பல அழுத்தங்கள் அவர் மீது வந்த பொழுதிலும் அசராமல் தன் மனசாட்சிப்படி உண்மையை அதன் அசல் நிறத்தில் காண வேண்டும் என்கிற அவரது திண்மம் அசைக்க முடியாததாக இருந்தது.

நரேந்திர மோடி முதல் பல ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வரை தினமும் ஹெமந்த் கர்கரேயை வசை பொழிந்தார்கள். தேச துரோகி என்றார்கள். ஆனால், அவரோ சிரித்த முகத்துடன் விசாரணையை நடத்திச் சென்றார். இந்த சூழலில் ஹெமந்த் கர்கரே, மும்பை தாக்குதல்கள் நடைபெற்ற அன்று இரவு சி.எஸ்.டி. - காமா - ரங்க்பவன் தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இரண்டு முக்கிய காவல் துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்த மூவரையும் தீவிரவாதிகள்தான் கொன்றனர் என இந்த நாடே நம்ப வைக்கப்பட்டது. இது குறித்து பலரும் அந்த நேரமே தங்கள் அய்யங்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில்தான் ஹெமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பதை ஆதாரங்களுடன் நிறுவும் பணியில் களம் கண்டிருக்கிறார் மகாராட்டிரத்தின் முன்னாள் காவல் துறை அய்.ஜி.யான எஸ்.எம். முஷ்ரிப். நாட்டையே உலுக்கிய தேல்ஜி பத்திர ஊழலை, இந்த நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். முஷ்ரிப் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள முக்கியமான ஆங்கில நூல்தான் ‘கர்கரேயை கொன்றது யார்?' (Who killed Karkare?). நாட்டையே உலுக்குகிற ஒரு முக்கிய விஷயத்தில் அதன் மொத்தப் புரிதலையும் மாற்றி அமைக்கிற ஆற்றல், இந்நூலுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல.

அடிப்படையில் முஷ்ரிப் ஒரு எழுத்தாளர் அல்ல. காலமெல்லாம் அவர் ஓர் அரசு நிர்வாகியாகவே பணியாற்றியவர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், துணிச்சலுடன் இத்தகைய பெரும் நூலை ஆவணமாக்கியிருப்பது நமக்கு பெரும் வியப்பை அளிக்கிறது. நூல் நெடுகிலும் ஆசிரியர் மனதில் இழையோடும் ஒருவித பதற்றத்தையும், அச்சத்தையும் உணரமுடிகிறது. இந்திய அதிகார வர்க்கம் மற்றும் உளவுத் துறைக்கு இருக்கும் மட்டற்ற அதிகாரம், அவரை அச்சுறுத்துகிறது. அதனாலேயே பல இடங்களில் இந்நூலின் ஆவணங்களை தொகுக்கும்போது, சில பார்வைகளை அழுத்தமாக முன் வைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆசிரியர் மவுனமாகவே இருக்கிறார். இந்நூலுக்குள் இருக்கும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து, மேலும் பல ஆய்வுகளை செய்யவும், பல நூல்களை எழுதவும் இடம் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் பத்து ஆண்டுகளில், இந்தியாவின் உளவுத்துறையை பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டனர். இன்றுவரை பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்த நாட்டில் பிரிவினையை விதைத்து, சிறுபான்மையினரை அடிமைகளாக மாற்றி, இங்கு ஓர் இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயன்று வருகின்றனர் என்பதை நூலாசிரியர் மிகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

2006 இல் மும்பை - நாந்டேட் குண்டு வெடிப்புகள், 2007இல் உத்திரப்பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் தொடர்குண்டு வெடிப்புகள், 2008 இல் மாலெகவ்னில் என இந்தியாவின் பல பகுதிகளில் வெடிக்கும் குண்டுகள் எல்லாம் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டு வைத்து விட்டு, பழியை முஸ்லிம் அமைப்புகள் மீது சுமத்தி விடுகிறது என்பதை ஆதாரங்களுடன் பத்திரிகை செய்திகள் ஊடாக, விவரணைகளுடன் அசாத்தியமாக நிறுவுகிறார் முஷ்ரிப்.

இந்தியாவில் உளவுத்துறையும், ஊடகங்களும் பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுகின்றன என்கிறார் முஷ்ரிப். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில், அந்த தாக்குதல்களை அமெரிக்க அரசின் உளவுத் துறையான சி.அய்.ஏ. செய்ததது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்கவும், எண்ணெய் வளத்தை அபகரிக்கவும், அமெரிக்காவிற்கு ஒரு தொடக்கப்புள்ளி தேவையாக இருந்தது. அதற்காகத்தான் அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை செய்தது என ராணுவ ஆய்வாளர்கள் பலரும் ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றனர்.

அதைப் போலவே மும்பை தாக்குதலைப் பற்றி பல அய்யங்களை முஷ்ரிப் இந்த நூலில் எழுப்புகிறார். அவருடைய சந்தேகங்கள் மிக முக்கியமானவை. தீவிர ஆய்வுகளை கோருபவை. சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இருந்த 16 சி.சி.டி.வி. காமிராக்கள் எப்படி ஒரே நேரத்தில் செயலிழந்தன? கிடைத்த சில பதிவுகளைக் கூட அழித்தவர்கள் யார்? தாக்குதல் தொடுத்தவர்கள் எப்படி சரளமாக மராத்திய மொழியில் பேசினார்கள் என அடுக்கடுக்காய் சந்தேகங்கள் எழும்பிய வண்ணம் உள்ளன.

இந்த தாக்குதல்கள் கர்கரேயை கொல்வதற்காகவே திட்டமிடப்பட்டனவா? என்று கூட, நமக்கு இந்நூலை வாசிக்கையில் சந்தேகம் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். இன் 45 ஆயிரம் கிளைகள் மற்றும் 44 ஆயிரம் ‘ஷாகா'க்களில் நடக்கும் வன்முறைப் பயிற்சிகளை எல்லாம் கணக்கில் கொண்டால், இம்மண்ணில் தீவிரவாதத்தை வளர்க்கும் இந்து அமைப்புகளின் மீது தீவிர கண்காணிப்பை செலுத்த வேண்டும். ஆனால் உளவுத்துறையே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல மாநிலங்களில் காவல் துறை, சமூக நலத்துறை எனப் பல முக்கிய அரசுத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊடுருவி வரும் செய்தி, கடந்த 15 ஆண்டுகளாக நம் காதில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.

இந்நூலை வாசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு செய்தி, இந்த புத்தகம் கோருகிற புரிதலுடன் நிகழ்ந்தது. பிப்ரவரி 24, 2010 அன்று சூரத் நகரத்தின் மாநில காவல் துறை தீவிரவாத தாக்குதல் நடந்தால், நம் படைகள் அதனை எதிர்கொள்ள இயலுமா என ஒத்திகை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. பொதுவாக ஒத்திகை நிகழ்வு என்றால், ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அதில் எந்த வித வெடிபொருளையும் நிரப்ப மாட்டார்கள். ஆனால் அன்று நிகழ்ந்த அந்த ஒத்திகையின் போது, சூரத் நகர உதவி காவல் துறை ஆணையர் சுபாஷ் சதுர்வேதி என்பவர், அந்த ஒத்திகையில் பங்கு பெற்ற தீவிரவாத ஒழிப்புப் படையின் ஆய்வாளர் சாபிரிலி சையத் என்பவரை, இரண்டு முறை தனது துப்பாக்கியால் சுட்டார். பெரிய ஊடகப் பதிவுகள் கூட இல்லாமல், அது ஒரு விபத்து என பிரச்சனை முடிக்கப்பட்டுவிட்டது. இந்த துப்பாக்கிச் சூடு பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.

டிசம்பர் 2008 கோத்ரா இனப்படுகொலையில், இந்து அமைப்புகளும் மோடியின் மாநில அரசும் எவ்வாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை ‘தெகல்கா' புலனாய்வுப் பதிவுகள் அம்பலப்படுத்தின. அதனைத் தொடர்ந்து மாலெகான் புலனாய்வின்போது, கர்கரே மீண்டும் புதிய கோணங்களில் சங்பரிவாரை தோலுரித்துக் காட்டினார். நாந்டேட், மாலெகான், ‘தெகல்கா' என இந்த செய்திகள், ஊடகங்களில் தொடர்ந்து புழங்கிய காலகட்டத்தில்தான் ‘இந்து தீவிரவாதம்' என்ற சொல்லாடலின் பயன்பாடு தொடங்கியது. ஆங்கில அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள், இச்சொல்லாடலை அழுத்தமாகப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வார்த்தைப் பயன்பாடுதான்-இந்து சங்பரிவாரை கொதிநிலைக்கு இட்டுச் சென்றது. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத்தானே தீருவான்! இந்த நிலையில் அவர்களது முதல் இலக்கு மாலெகான் விசாரணையை தடுத்து நிறுத்துவதாக இருந்தது. அதற்காக, எல்லாவித செயல்பாடுகளிலும் அவர்கள் களமிறங்கத் துணிந்தனர்.

நூலை வாசிக்கையில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட தில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் கிலானியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. அவர் ஒரு முறை தனது கட்டுரை ஒன்றில் இப்படி எழுதினார்: ‘‘நான் உளவுத்துறையை, அதன் நடவடிக்கைகளை மிக நெருங்கி இருந்தே பார்த்திருக்கிறேன். அவர்களுடன் அமர்ந்து உரையாடும் பொழுது, நான் ஓர் அரசு அலுவலகத்தில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டதில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருப்பதைப் போலவே உணர்ந்திருக்கிறேன்.'' 

- அ.முத்துக்கிருஷ்ணன்

நன்றி - அ.முத்துக்கிருஷ்ணன்

வக்ப் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் முன்னாள் IAS அதிகாரி

அதிகார வர்க்கங்கள் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்க நினைப்பதை உடைத்தெறிய வேண்டும்!

ஊடகங்கள் அதிகார வர்க்கங்களுக்கு பயந்து செய்தியை வெளியிட மறுக்கிறது!

நமக்கான ஊடகத்தில் அதிகமாக பகிர்ந்து இச்செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல உதவுங்கள் தயவு செய்து!

நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஆலோசனைக்கு பிறகு ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட நிகழ்வு அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
திருச்சி மீர் ஹசனுல்லா ஷா வக்புக்கு சொந்தமான நில பிரச்சனை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு....
திருச்சி மாவட்டம், தென்னூர், கிராமம், டைட்டில் டீடு எண் 1142-க்கு உட்பட்ட திருச்சி டவுன், புதிய வார்டு “Y” பிளாக் 26, புதிய சர்வே எண்கள்: 5, 6,8,9-க்கு கட்டுப்பட்ட 2.04 ஏக்கர் மேற்படி தர்காவுக்கு சொந்தமான நிலமாகும். 2005-ஆம் வருடம் வரை ஆவணங்கள் அனைத்தும் இதை உறுதி செய்கின்றன.

(1). திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம் TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்புக்கு சொந்தமானதுதான என OS. NO : 133 / 1918 என்ற வழக்கில் தீர்ப்பாகியுள்ளது.
(2). திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், 1935 – ஆம் வருட இனாம் ஃபேர் ரிஜெஸ்டரில், TD. NO: 1142, ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா வக்பின் பெயரில் தேவதாயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

(3). 1955 – ஆம் வருடம், வக்ப் நிலங்கள், அரசு சர்வேயரால் அளவீடு செய்யப்பட்டு, சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலும், அதை தொடர்ந்து 1958 – ஆம் வருடம் வெளியான அரசிதழிலும் திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்ப் தேவதாயம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

(4). திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், 1963 – ஆம் வருட, திருச்சி மாவட்ட டவுன் ரிஜிஸ்டரில் TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்ப் தேவதாயம் என பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

(5). திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்பின் பெயரில் தேவதாயமாக பதிவாகியுள்ளது என, திருச்சிராப்பள்ளி கோட்ட நில அளவை ஆய்வாளரால் 2003-ஆம் வருடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

(6). திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கோ. அபிஷேகபுரம் கோட்டம், வார்டு “Y” பிளாக் -26, பழைய TS. NO: 118, புதிய TS. NO: 5,6,8,9-ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம் TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்பின் பெயரில் தேவதாயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என, 2005-ஆம் வருடம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலரால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

(7). திருச்சிராப்பள்ளி மாவட்டம் பழைய வார்டு II, பழைய பிளாக் – 4, TS. No.: 118, இதற்கு, வார்டு பிளாக் -26, புதிய TS. NO: 6 –ல் உள்ள நிலத்தில் எந்த பெயரிலும் பதிவாகவில்லை என 2014 – ஆம் வருடம், சார்பதிவாளர் அவர்களால் வில்லங்க சான்று அளிக்கப்பட்டுள்ளது.
(8). திருச்சி மாநகரம், தென்னூர், அண்ணாநகர், வார்டு “Y” பிளாக் -26, TS. No.: 5, 6, 8, 9 –ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம் மேற்படி வக்பிற்கு சொந்தமானது என இருந்து வரும் நிலையில், இது குறித்து, திருச்சிராப்பள்ளி வக்ப் தீர்ப்பாயத்தில் WOP. No.: 4 / 2007 என்ற இந்த வழக்கில், IA.No.: 140 / 2007 – ல் “Status Quo” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்படி சர்வே நம்பரும் அடக்கம்.
(9). WOP. NO: 4 / 2007 என்ற வழக்கில், மேற்படி சர்வே எண்ணுக்கும் சேர்த்து “Status Quo” உத்தரவாகியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா வக்பிற்கு சொந்தமான இந்த இடத்தை 2008 – ஆம் வருடம், கடந்த ஆட்சி காலத்தில் திருசங்கு, பாபு, கண்ணன், சிராஜ் அகமது ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவுகளை மறைத்தும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் தில்லைநகர் வீடு கட்டும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளால் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
(10). நீதிக்கும், நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரான பத்திரப்பதிவுகளை வைத்துக்கொண்டு, தன் அதிகார பலத்தின் மூலம், 2014 – ல், மாநகர நில அபகரிப்பு ஆய்வாளராக இருந்த செல்லமுத்துவை தன் அடியாள் போல பயன்படுத்தி எங்களை மிரட்டி இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தார் ஓய்வு பெற்ற IAS அதிகாரி இளங்கோவன். நாங்கள் எங்கள் ஆவணங்களை காட்டியும் அதை பார்க்க மறுத்துவிட்டு, விசாரனையை திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியருக்கு மாற்றப்பட்டது. அப்போது கோட்டாட்சியராக இருந்த பஷீர் அவர்களும் எங்களிடமிருந்த வருவாய் ஆவணங்கள் உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் பார்க்காமலே, வக்புக்கு சொந்தமான இந்த இடத்தை இளங்கோவன் மகன்களான பாபு, கண்ணன் ஆகியோருக்கு சொந்தம் என்ற நீதிக்கும், உண்மைக்கும் எதிரான ஒரு உத்தரவை பிறப்பித்துவிட்டார்.

(11). வருவாய் கோட்டாட்சியரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, தர்கா நிர்வாகாத்தின் சார்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் WP.(MD) :12063 & 12064 of 2014 ஆகிய ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு “Status Quo” உத்தரவு பெற்றிருந்தோம். இவ்வழக்கில் வருவாய் கோட்டாட்சியர், நில அபகரிப்பு ஆய்வாளர், பாபு ஆகியோர் மீது “Status Quo” உத்தரவு இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பாபுவிடம் புகார் வாங்கி என் மீது CR.No.: 18 / 2014 என்று ஒரு பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்தார் நில அபகரிப்பு ஆய்வாளர் செல்லமுத்து.
(12). எங்களுடைய ஆவணங்களையும், நீதிமன்ற உத்தரவுகளையும் நடுவர் அவர்கள் பார்வையிட்டதால், உடன் பிணையில் விட்டதோடு, மாநகர நில அபகரிப்பு ஆய்வாளர் செல்லமுத்துவுக்கு அறிவுரை வழங்கினார். இந்த வழக்கு குற்றப்பத்திரிக்கைகூட தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது.

(13). தன் மகன்கள் பாபு, கண்ணன் பெயருக்கு மேற்படி இடத்தை பட்டா மாற்றி தர மறுத்த சர்வேயர் பாண்டியனை மிரட்டியுள்ளார் இளங்கோவன். இந்த இடம் மீர் ஹசனுல்லா ஷா மாஸ்கு என தேவதாயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யார் பெயருக்கும் மாற்ற முடியாது என எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத இளங்கோவனின் அதிகார தூண்டுதலின் பேரில் சர்வேயர் பாண்டியனுக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு போடப்பட்டது. இந்த டிரானாஃபர் உத்தரவை எதிர்த்து சர்வேயர் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்கு
நிலுவையில் உள்ளது.

(12). சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாங்கள் தொடர்ந்த மேற்படி வழக்குகளில் தரப்பினர்கள் இருவரும் சிவில் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு உத்தரவாகியுள்ள நிலையில் இளங்கோவன் தன் அதிகார பலத்தின் மூலம் தற்போதைய நில அபகரிப்பு ஆய்வாளர் மணிமொழி தலைமையில் ஒரு காவல் படையை வைத்துக்கொண்டு சனிக்கிழமை (08.08.2014) முதல் மேற்படி இடத்தை சுவாதீனம் எடுக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வருகிறார்கள்.

பகல் இரவு என போலிஸ் பாதுகாப்போடு வக்ப் நிலம் அபகரிக்கப்படுகிறது.
நில அபகரிப்பை தடுப்பதற்காக தமிழக முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்ட “நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு”-வானது “நில அபகரிப்பு சிறப்பு பிரிவாக” மாறி, வக்ப் நிலத்தை அபகரிக்க அடியாள் வேலை பார்க்கிகிறது.

இளங்கோவனுக்கு இந்த வக்ப் நிலத்தை சுவாதீனம் எடுத்து கொடுப்பதில் நில அபகரிப்பு ஆய்வாளர் மணிமொழியின் ஈடுபாடுகளை பார்க்கும்போது, மேற்படி இடம் இளங்கோவன் மகன்களான பாபு, கண்ணன் ஆகியோருக்கே சொந்தம் என்று தீர்ப்பாகி, அவர்களுக்கு சுவாதீனம் எடுத்து கொடுக்குமாறு மணிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப்போல், ஒரு அடியாளைப்போலவும், கட்டிட பணியாளரை போலவும் திருச்சி மாநகர நில அபகாரிப்பு ஆய்வாளர் மணிமொழி தலைமையிலான காவல்துறை நடந்து கொள்கிறது.

இந்த இடம் வக்புக்கு சொந்தமானதுதான் என்பதற்கு நீதிமன்ற உத்தரவுகளும், அனைத்து வருவாய் ஆவணங்களும் தெளிவாக இருக்கையில், காவல்துறை அதிகாரி மணிமொழி உள்ளிட்ட சில காவாளிகளின் செயல்பாடு வக்பு சொத்துக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்த மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியை கேள்விக்குறியாக்கி, வக்பு சொத்துக்களை மோசடி செய்தவர்களுக்கும், செய்ய முயற்சிப்பவர்களுக்கும் காவல்துறை உதவுவது போல இருக்கிறது.

காவல்துறையில் உள்ள சில காவாளிகளின் இந்த செயல்பாடுகளை வைத்து நாங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சாட்டவில்லை. நில மோசடி செய்துள்ள, தில்லைநகர் வீடுகட்டும் சங்க நிர்வாகிகள், திருசங்கு, சிராஜ் அகமது டாக்டர்.பாபு, கண்ணன், ஒய்வு பெற்ற IAS இளங்கோவன், நில அபகரிப்பு ஆய்வாளர் மணிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வக்ப் நிலத்தை பாதுகாத்து தர கோரி 10.08.2015 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஆலோசனைக்கு பிறகு ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட நிகழ்வு அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்..!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR