ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...
Showing posts with label hathish. Show all posts
Showing posts with label hathish. Show all posts

Sunday, 3 August 2014

இஸ்லாத்தில் தடை

இறைவனல்லாத பிறரை அழைத்து உதவி தேடுதல்!

’கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத லி அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது’ (அல்குர்ஆன் 46:5)
’அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்துவிடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

’(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில்சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?’ (அல்குர்ஆன் 10:59)
அதிய்யி பின் ஹாதிம் லி ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ’நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும்,அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது

Sunday, 6 July 2014

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

குர்ஆன் என்பதின் விளக்கம்:

அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூலமாக ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்டன, ஆனால் அந்த சமுகத்தினர் அதை சரிவர பயன்படுத்தாமல் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் அது காலப் போக்கில் அழிந்தும் விட்டன. இறுதியாக, இறுதி நபியான கன்மனி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் முஸ்லிம் மட்டுமல்லாது அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற முறையில் ஒரு வேதத்தை இறக்கிய்ருளினான் அதுவே இறுதி வேதமான அல்குர்ஆன் ஆகும். இது இறுதி நாள்வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், எப்படி அருளப்பட்டதோ! அதன் உள்ளடக்கம் சிறிதும் மாற்றமில்லாமல் பாதுகாக்கப்படும் என இறைவன் தன் திருமறையிலேயே! வாக்களித்துள்ளான். இதை யாராலும் எந்த ஒரு கருத்தையும் உட்திணிக்கவும் முடியாது, அதுபோல அதிலிருந்து எந்த ஒரு வரியையும் அழிக்கவும் முடியாது, ஏனென்றால் குர்ஆன் பல்லாண்டு காலமாக பல நபர்களின் மனதில் பதிந்தும் கிடக்கின்றது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

எந்த ஒரு வேதத்திற்கும் கிடைக்காத தனிசிறப்பு, குர்ஆன் அனைத்து மக்களாலும் படித்து அதன் படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே அனைத்து மொழிகளிலும், மொழிப்பெயர்க்கப்பட்டு இருப்பதுவே! யாரும் மறுமை நாளில் இறைவனே உன் வேதம் என்னுடைய மொழியில் இல்லை என்று வாதிட முடியாதப்படி எல்லாம் வல்ல இறைவன் அதை அருளியுள்ளான். ஆகவே "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கொப்ப நாம் வாழ்கின்ற காலத்திலேயே அவற்றை படித்து ஆராய்ந்து பயன்ப் பெற வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமறையை ஓதுவதின் சிறப்பு குறித்து திருமறையும், நபியவர்களின் பொன் மொழிகளும் அதிகமதிகம் வலியுறுத்திக் கூறுகின்றன. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:

எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (35 : 29-30)

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தாமும் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்தாம் உங்களில் சிறந்தவராவார்|என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனைக் (கற்றுக்) கொடுத் தான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நின்று வணங்கினார். இன்னொருவருக்கு அல்லாஹ் பொருளாதா ரத்தை வழங்கினான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நல்ல வழியில் செலவு செய்கிறார். இந்த இருவர் விஷயத்திலன்றி பொறாமை கொள்ளுதல் என்பது இல்லை| (புகாரி, முஸ்லிம்).

மேலும் அபூ உமாமா (ரலி) வர்கள் அறிவிக்கின்றார்கள்: குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லி;ம்)

நபியவர்கள் கூறினார்கள்: குர்ஆனை திறமையாகக் கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு| (புகாரி, முஸ்லிம்).

ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்-லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|.(திர்மிதி)

Wednesday, 2 July 2014

இஸ்லாமிய சிறுவர் கேள்வி – பதில்



1.            நாம் யார்  ?                பதில்: நாம் முஸ்லிம்கள்.
2.            நம் மார்க்கம் எது?     பதில்: நம் மார்க்கம் இஸ்லாம்.
3.            இஸ்லாம் என்றால் என்ன?       பதில்:அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.
4.            இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனைஅவை யாவை?
               இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து. அவை கலிமாதொழுகைநோன்புஜகாத்ஹஜ்.
5.            கலிமாவை கூறு ?                 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
6.            கலிமாவின் அர்த்தத்தை கூறு? வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
7.            ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனைஅவை யாவை?
           ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை சுப்ஹுலுஹர்அஸர்மக்ரிப்இஷா
8.             நோன்பு நோற்பது எப்போது கடமை?               ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது
        கடமையாகும்.
9.             ஜகாத் என்றால் என்னபணக்காரர்கள்ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு
        பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.
10.           ஹஜ் என்றால் என்ன?      துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்துமுக்கிய
இடங்களில் தங்கிவணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.
11.           ஹஜ் செய்வது யார் மீது கடமை?
           உடல் வசதியும்பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை  ஹஜ் செய்வது                   கடமையாகும்.
12.           ஈமான் என்றால் என்ன?              ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.
13.           முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?     முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.
14.           முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா
        (அலை)
15.           தாயும்தந்தையும் இல்லாதவர் யார்?        நபி ஆதம் (அலை)ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.
16.          தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?    பதில்: நபி ஈஸா (அலை) அவர்கள்
17.           நாம் யாருடைய பிள்ளைகள்?  பதில்: நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.
18.           நாம் யாருடைய உம்மத்தினர்?  பதில்: நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்            .
19.           அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்? அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து                 படைத்தான்.
20.           மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்? அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து                 படைத்தான்.
21.           அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்துபடைத்தான்? அல்லாஹ் ஷைத்தானை                                 நெருப்பிலிருந்துபடைத்தான்.
22.           ஷைத்தான்களின் தலைவன் யார்?           பதில்: இப்லீஸ்.
23.           மனிதர்களின் எதிரி யார்?                   பதில்: இப்லீஸ. ஷைத்தான்.
24.           குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?       பதில்: 25 பேர்
25.           அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்? பதில்:அல்லாஹ்வை வணங்குவதற்காக.
26.           அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்? எல்லா படைப்பினங்களிலும்
         சிறந்தவனாக                  
27.           ஷைத்தான் என்பதின் பொருள் என்ன? பதில்:அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் 
         என்பதாகும்.
28.           இப்லீஸ் என்பதன் பொருள்?        பதில்: குழப்பவாதி என்பது பொருள்.
29.           ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?           பதில்:ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.
30.           நம் வேதத்தின் பெயர் என்ன?      பதில்: அல்குர்ஆன்
31.           நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
                 பதில்:ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.
32.           நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?   பதில்: 40 வயதில்
33.           மக்கீ சூரா என்றால் என்ன?      பதில்: மக்காவில் இறங்கிய சூரா.
34.           மதனீ சூரா என்றால் என்ன?     பதில்: மதீனாவில் இறங்கிய சூரா.
35.           குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
                பதில்:குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.
36.           (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
                பதில்:ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.
37.           நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
                பதில்:அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.
38.           நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
                பதில்:ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.
39.           திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?    பதில்: 114 சூராக்கள் ஆகும்.
40.           திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?    பதில்: 14
41.           குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எதுபதில்: இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ



42.           இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எதுபதில்: முஹர்ரம்
43.           நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?  பதில்: ரபீயுல் அவ்வல்
44.           திருக்குர்ஆனின் இதயம் எந்த அத்தியாம்?       பதில்: சூரா யாஸீன் என்ற அத்தியாயம்.
45.           மிஃராஜ் என்றால் என்ன?        பதில்: நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்
46.           பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்பதில்: யர்ஹமுகல்லாஹ்.
47.           திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?  பதில்: சூரா கவ்ஸர்.
48.           நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போதுநபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?       பதில்: 40 வயது
49.           துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்? பதில்: இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி              ராஜிவூன்.
50.           உயிரை வாங்கும் வானவர் யார்?              பதில்: மலக்குல் மௌத்
51.           திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?       பதில்: 6666
52.           தும்மினால் என்ன  சொல்ல வேண்டும்?  பதில்: அல்ஹம்து லில்லாஹ்
53.           வஹீ என்றால் என்ன?                    பதில்: அல்லாஹ்வின் செய்தி.
54.           வஹீ கொண்டு வரும் வானவர் யார்?        பதில்: ஜிப்ரயீல் (அலை)
55.           இஸ்திக்பார் என்றால் என்ன?              பதில்: பாவமன்னிப்பு தேடுவது.
56.           முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?          பதில்: பிலால் (ரளி)
57.           முதல் கலீபா யார்?                      பதில்: அபூ பக்கர் சித்தீக் (ரளி)
58.           மன்னிக்கப்படாத பாவம் எது?     பதில்: குப்ர் - இறைமறுப்புஷிர்க் - அல்லாஹ்வுக்கு
        இணைவைத்தல்.
59.           கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்  பதில்: நபி மூஸா (அலை)
60.           எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
                பதில்: குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு
61.           அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எதுபதில்: பள்ளிவாசல்
62.           யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?  பதில்: தாயின் காலின் கீழ்.
63.           பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.       பதில்: 7 வயது.
64.           பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?   
        பதில்: ஃபீ அமானில்லாஹ்
65.           நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?       பதில்: கிராமன் காதிபீன்.
66.           பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?      பதில்: எகிப்து (மிஸ்ர்)
67.           இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?   பதில்: நபிரசூல்
68.           இஸ்லாம் என்பதின் பொருள் என்ன? பதில்: அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.
69.           உலகம் முழுவதையும் படைத்தது யார்?  பதில்: அல்லாஹ்.
70.           அஸ்ஸலாத் என்றால் என்ன?   பதில்: தொழுகை
71.           திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?     பதில்: அரபி மொழியில்.
72.           அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?  பதில்: அளவற்ற அருளாளன்.
73.           திருக்குர்ஆனின் முதல் சூரா எது?          பதில்: சூரா அல் பாத்திஹா
74.           முஸ்லிமின் முதல் கடமை என்ன?         பதில்: தொழுகை.
75.           மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?   பதில்: கஃபா.
76.           அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம்   எது?   பதில்: நரகம்.
77.           பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?  பதில்: 313 நபர்கள்.
78.           ஹஜ்ஜதுல் விதா என்றால் என்னபதில்: நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி
        ஹஜ் ஆகும்.
79.           நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனைபதில்: ஒன்று
80.           நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?       பதில்: நபி சுலைமான் (அலை)
81.           நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?   பதில்: ஏழுபேர். 3ஆண்கள் , 4 பெண்கள்
82.           ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?   பதில்: அபூ ஹுரைரா (ரளி)
83.          அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்)  அவர்களின் மனைவி யார்?
பதில்: அன்னை ஆயிஷா (ரளி)
84.          திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?     பதில்: சூரா தவ்பா.
85.          முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?     பதில்: கதீஜா (ரளி)
86.          திக்ருகளில் சிறந்தது எது?     பதில்: லாஇலாஹ இல்லல்லாஹ்
87.          சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?   பதில்: அலி (ரளி)
88.          நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
               பதில்: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)
89.          ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?    பதில்: 2 ரக்அத்கள்.
90.          நபி  (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
               தாயார் ஆமினா,  தந்தையார் அப்துல்லாஹ்.
91.          நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்
            பதில்: அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.
 92.           நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
           பதில்: ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.
93.           இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
           ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.
94.           முதன் முதலில்  ஏற்பட்ட கொலை எது?
ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில்தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.
95.           சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது?
                பதில்: ஜன்னதுல் பிர்தவ்ஸ்.
96.           எந்த முஸ்லிமுக்கு  தொழுகை கடமையில்லை?
                பதில்: மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு
97.           நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபிஎன்று சொன்ன பொய்யன் யார்?
                பதில்: முஸைலமதுல் கத்தாப்.
98.           ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?  பு: ஸஹீஹுல் புகாரி.
99.           உண்மையான வீரன் யார்?  பதில்: கோபம் வரும்போது தன்னை   கட்டுப்படுத்திக்கொள்பவன்.
100.          நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.  பதில்: 63 ஆண்டுகள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR