ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...
Showing posts with label medical. Show all posts
Showing posts with label medical. Show all posts

Tuesday, 24 June 2014

ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை- அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

5 ஆயிரம் வருட பாரம்பரியம்
கொண்ட இக்கிணற்று நீரை,
உலகில்
வாழும் பெரும்பாலான
இஸ்லாமியர்கள் இந்த
நீரை அருந்தாமல் இருந்திருக்க
மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள்
இந்த
கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட
அற்புதமான இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி காண்போம்.
ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08 அடி
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள்
தண்ணீர்….
பம்ப் செய்யும் மணிக்கு 2
கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60
லட்சம்
லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில்
அடங்கியுள்ள மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
இறை தூதர் இப்ராஹிம்-
ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன்
பயணித்தனர்.
தற்போது மெக்காவில்
காபா அமைந்துள்ள இடத்தில்,
இறைவனின் கட்டளை என்பதால்,
இருவரையும் தனியாக
விட்டு விட்டு இப்ராஹிம்
நபி சென்றார்கள்.
அப்போது தாகத்தால்
குழந்தை இஸ்மாயில் அழுதார்கள்,
குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத
நிலையில் தண்ணீரை தேடி பல
இடங்களுக்கு தாய்
ஹாஜரா அலைந்தார்கள்.
இறைவனிடம்
பிராத்தனை செய்தார்கள்,
அப்போழுது தன்னந்தனியாக
கிடந்த குழந்தை இஸ்மாயில், தன்
பிஞ்சுக்கால்களை தரையில்
உதைத்து அழுதபோது அந்த
இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்
கொண்டு வந்தது.
அதை வழிந்தோடவிடாமல்
சுற்றிலும்
மேடெழுப்பி நீரை தேக்கி வைத்தார்கள்.
அதுவே ‘ஜம் ஜம்’
கிணறு என்று அழைக்கப்படுகிறது.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும்
அதிகம் என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள்,
சுகாதாரத்திற்காக இந்த
கிணற்றினை சுத்தப்படுத்த
வேண்டும்
என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட
சவுதி அரசு 8 அதி நவின ராட்சத
பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,
பகலுமாக 15 நாட்கள் இந்த
நீரை இறைத்தது. ஆனால் நீரின்
அளவு குறையவில்லை. மாறாக
நீரின் மட்டம் ஒரு அங்குலம்
உயர்ந்து இருந்தது.
ஒரு வினாடிக்கு 8 ஆயிரம்
லிட்டர் என்ற அளவில், தினமும்
691.2 மில்லியன் லிட்டர்
தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
மோட்டார்கள் மூலம் இந்த
கிணற்றுத்தண்ணீர்
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய
கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம்
எடுக்கும் அளவு நீரை,
ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம், அதை விட அதிசயம்
691.2 மில்லியன் நீரை தினமும்
எடுத்தும்,அப்போதும் இதன்
அளவு குறைவதில்லை.
சுவையும்
மாறியதில்லை.ஹஜ் காலத்திலும்
ரமலான் மாதத்திலும் சுமார்
20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர்
வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
குறையாமல் அந்தத் தண்ணீரைத்
தமது சொந்த ஊருக்கும் எடுத்துச்
செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக்
கிணறு, பாலைவனத்தில்
அமந்துள்ள இந்தக் கிணறு,
அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லாத அந்தக்
கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்
மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது
என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில
வருடங்களிலோ பல
வருடங்களிலோ செயலிழந்து போய்
விடும். ஆனால் இந்த ஊற்று பல
ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல்
இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
ஜம் ஜம் கிண்று அருகே எந்த
தாவரமும் வளருவதில்லை.எந்த
ஒரு நீர் நிலையாக இருந்தாலும்
பாசி படிந்து போவதும்
கிருமிகள் உற்பத்தியவதும்
இயற்கை. இதனால் தான்
குளோரின்
போன்ற மருதுகள் நீர் நிலைகளில்
கலக்கப்படுகின்றன. ஆனால்
ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான
காலம் முதல் இன்று வரை எந்த
மருதுகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல்
தன்னைத்
தானே பாதுகாத்துக்
கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத
தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக
இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும். ஆனால் இந்தத்
தண்ணீர் 1971 ஆம்
ஆண்டு ஐரோப்பிய சோதனைச்
சாலையில் சோதித்துப்
பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு மிகவும்
ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது
பூமியிலுள்ள நீரில்
மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர்
என்று நபிகள் நாயகம்
கூறியுள்ளார்கள்.
பொதுவாக மற்ற நீரில்
இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில்
தெரிய வந்துள்ளது. கால்ஷியம்
மற்றும் மேக்னீஷியம் எனும்
உப்பு மற்ற வகை தண்ணீரை விட
ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக
உள்ளது. இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக்
கூடியவை. இதை அனுபவத்தில்
உணரலாம். மேலும் இந்தத்
தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளை அழிக்க வல்லது.
அங்கே அற்புதம்
நடக்கிறது இங்கே அற்புதம்
நடக்கிறது என்றெல்லாம்
பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில்
நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக்
கூடாது. மற்ற அற்புதங்கள்
எல்லாம்
எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை.
நிருபிக்கப்டாமல்
குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. ஆனால் தினசரி 20
லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர்
குடி நீராகப் பயன்படுவதும்,
பாலைவனத்தில் இந்த அதிசயம்
பல்லாயிரம் ஆண்டுகள்
நடந்து வருவதும் எல்லாவித
சோதனைக்கும்
உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட
ு உள்ளதால்
இது மெய்யான அற்புதமாகும்.
இது போன்ற அற்புதம் உலகில்
இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை.

Saturday, 12 April 2014

ஷெட்யூல் - J - ஓர் பாரவை

பல நோய்களுக்கு ஆங்கில
மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும்,
அந்த நோய்களைக் குணப்படுத்துவோம்
என்று சொல்லக்கூடாது என்றும்
இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும்
தெரிந்து கொள்ளுங்கள்.
"Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995,
'Schedule J' contains a list of 51 disease and
ailments (by whatever name described) which a
drugh may not purport to prevent or cure or make
claims to prevent or cure".
'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்
சட்டம்' 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945,
1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த
சட்டத்தில் ஷெட்யூல் - 'J' என்ற பிரிவின்
கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின்
வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த
வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின்
மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த
முடியும்!' என்றோ, 'மருந்துகளைக்
கொண்டு குணப்படுத்திக்
காட்டுகிறேன்!' என்றோ கூறுதல்
கூடாது என்று எச்சரிக்கிறது.
நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக,
அவர்கள் உயிர்களும், உடமைகளும்
காக்கப்பட வேண்டும் என்பதற்காக
நமது அரசாங்கம், ஆங்கில
மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத
நோய்கள் மொத்தம் 51
என்று மேற்சொன்ன சட்டத்தில்
ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது.
இந்த 51 வியாதிகளையும் ஆங்கில
மருத்துவர்கள் எவரும் தங்கள்
மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ,
குணப்படுத்திக் காட்டுகிறேன்
என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும்
என்று எச்சரிக்கிறது.
இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு
மட்டுமே சொந்தமானவை.
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமுமாக
புதுப்புது நோய்கள் இந்த 'லிஸ்ட்'டில் சேரும்
வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த
வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நோய்கள் 'எய்ட்ஸ், சார்ஸ்' ஆகும். சில
ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த
ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும்
இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான்
கண்டுபிடித்த நோய்கள்
ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம்
வரை ஒவ்வொன்றாக அவற்றைக்
குணப்படுத்த மருந்துகள்
இல்லை என்பதை தெளிவாக
உணர்ந்து அந்த நோய்களை அடக்கம்
செய்து கொண்டு வரும்
வேளையில் இதை மக்கள்
உணர்ந்துகொள்ள வேண்டும்
என்பதற்காகவும், அதாவது, ஆங்கில
மருந்துகளில் எந்த ஒரு மருந்தும்
ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள
ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக்
குணமாக்காது என்பதை அந்த மருத்துவம்
சர்வதேச அளவில்
ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக
அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத்
தெரியப்படுத்தவேண்டும்
என்பதற்காகவும், எனவே, ஆங்கில
மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும்,
ஆங்கில மருத்துவத்தில்
மருந்து என்பதே கிடையாது என்ற
உண்மையான காரணத்தினால்
ஷெட்யூல்-Jயில் உள்ள
நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக்
கூடாது என்பதற்காகவும்,
ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும்
குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ
மருந்துகள்
இருக்கிறது என்று கூறுவது தவறான,
ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும்
மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும்
என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக
சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில்
நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன்
ஆங்கில மருந்துகளை 'மருந்துகள் மற்றும்
அழகு சாதனங்கள் சட்டத்தின்', பிடியில்
ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம்
வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51
நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.
ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம்
வைத்தியம் பார்க்கக்
கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51
நோய்களில் விவரம் வருமாறு.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சுவலி
3. 'அப்பெண்டிஸைட்டிஸ்' என்னும் குடல்
வால் நோய்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக
புற்றுநோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ,
பெண்ணாகவோ மாற்றுவோம்
என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக்
கோளாறுகள்
16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. மூளைக்காய்ச்சல்.
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும்
சிகப்பாக்குதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக
சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. சாதாரணமாக ஏற்படும்
கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை,
தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம்
மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய்
(ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல்
சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
34. இரத்தப் புற்றுநேரய்.
35. வெண் குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. மூளை வளர்ச்சிக்குறைவு.
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்க வாதம்
41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த வயதில் தலை நரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில்
ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்குவாய்
50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள்,
சிறுநீர்ப் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம்
அடைந்து புடைத்துக் காணப்படுதல்.
ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில்
பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51
வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம்
தங்கள் மருந்துகளால் வைத்தியம்
அளித்து வருவது குற்றச்செயல்
என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக
எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும்
சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள்
நலனுக்கு எதிராகவும் ஆங்கில
மருத்துவத்தால் பகிரங்கமாகவும்,
ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற
பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக்
கொண்டும் ஆங்கில மருந்துக்
கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக்
கொண்டும் சட்ட விரோத காரியங்கள்
நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய மருத்துவச் சங்கமும் (IMA)
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC)
ஷெட்யூல் - J
பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்?
இந்தக் குற்றச் செயல்புரியும்
மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்று மக்களிடம் தவறாக அடையாளம்
காட்டிக் கொண்டிருப்பதேன்?
போலி மருத்துவத்தை விஞ்ஞானப்
பூர்வமானது என்றும்
போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக்
காரணம் என்ன? குற்றச்
செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்ட
ிருக்கக் காரணம் என்ன?
மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில
மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க
சட்டத்தை பகிரங்கமாகத்
தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக்
கொடுத்து நோயாளிகளின்
உயிர்ச்சக்தியை சாகடித்துக்
கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம்,
அம்மருத்துவத்தைச்
சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத்
துரோகச் செயலை மக்களே!
அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச்
சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற
ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட
கொடூரச் செயல் நடந்துக்
கொண்டிருக்கிறது.
மக்களே! இந்திய மருத்துவச்
சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப்
பார்க்கும் டாக்டர்கள்
மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப்
பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம்
நோய்களைத் தடுக்கவோ,
குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய
பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட
விடவில்லை.
ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள
டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள்,
கார்டியாக் (இருதய)
ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும்
குடல் சம்பந்தமான
ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட
ஸ்பெஷலிஸ்ட்டுகள்,
தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக
ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார
ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள்
அனை வரும், இன்னும்
அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள்
என்ற அடைமொழியுடன்
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள்.
மக்களே இது பற்றிய
விளக்கத்தை உங்களிடமும், மறைத்து,
அரசாங்கத்திடம் மறைத்தது ஏன்
என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.
TMC இதைப் பற்றி மக்களுக்குச்
சொல்லாமல்
இருப்பது மக்களுக்கு செய்யும்
நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள
மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா?
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப்
பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய
ஹெல்த் கவுன்சில் என்ற
அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும்
அனைத்து மருத்துவங்களும் அடங்கப்
பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க
வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின்
மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி,
அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை
ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்கள் உடல் நலன், சுகாதாரம்
போன்றவைகளுக்காக அரசாங்கம்
ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும்
அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக
முடிவதற்கும், இந்த தார்மீகப்
பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையி
லும் இறங்க வேண்டும் என்ற
சட்டப்பூர்வமான அதிகாரத்தையும்
வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல்
நலனில் அரசாங்கம்
அக்கறை கொண்டிருக்கிறது என்ற
நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில்
இழந்துவிடுவார்கள்.
அடென்லால், கால்ஸிகார்ட்,
ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
அல்லது குணப்படுத்த என்று இருதய
சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும்
அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை.
இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச்
சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல,
இருதய இயக்கத்தையே பாழாக்கும்.
அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும்
கெடும். இரத்த அழுத்தத்திற்கான
இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்பவர்கள் போலிகள் (Indian Drugs and
Cosmetics Act, 1940 Schedule-J)
சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள்
ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல்,
மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள்
என்று ஒவ்வொரு உறுப்பாக
சீரழிப்பவை.
போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள்
யார் எனில், 'எந்த டாக்டர் அதிக இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில
மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ,
அந்த மருத்துவரே ஆவார்' என்பதாகும்.
சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த
அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய
நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள்
இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள்
இவை என்று நோயாளிகளிடம்
கூறுவாரேயானால் அவர்
ஏமாற்றி தொழில்புரியும்
போலி டாக்டராவார்.
ஆனால் ஆங்கில மருத்துவம்,
சட்டத்தை துச்சமென
மதித்து அகம்பாவத்துடன்
போலிகளுக்கு 'இருதய ஸ்பெஷலிஸ்ட்'
என்று அடைமொழியைக்
கொடுத்திருக்கிறது. இவர்கள்
தொழில் நடத்தும்
முறை எப்படி என்பதை வாசகர்களாகிய
நீங்கள் நிச்சயம்
தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின்
எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற
உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள்
ஒவ்வொருவர் ஊரிலும்
மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள்.
இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக்
காத்திருந்து வேலை செய்யக்
கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம்
ஒவ்வொருவர் உயிரும் இவர்கள்
கையிலே இருக்கிறது. இவர்களின்
வித்தியாசமான, போக்கால்தான்
இன்று ஆங்கில மருத்துவம்
போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம்
கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும்
அளவுக்கு உங்களிடையே உலாவ
விட்டிருக்கிறது.
மருந்து ஆய்வாளர்கள்
கடமை என்னவென்றால் "இருதய
நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும்
கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை;
குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி,
மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச்
சீட்டுகளை எழுதிக் கொடுக்கும்
ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின்
சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக
எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும்
மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி,
பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல்
மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில
மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள
ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக
நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள்
விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்
தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த
போலி அடைமொழிகளை உடனடியாக
நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
"உங்கள் உடல் நலன், சமுதாய நலன்
காக்கப்பட Drug Inspectors உடனடியாக
மேற்சொன்ன
நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?"
என்று கவனியுங்கள்.
இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug
Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச்
சொல்லுங்கள்.
Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக
எளிதான காரியம். உங்கள்
வீட்டு அருகாமையிலுள்ள எந்த
ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள்
விலாசத்தை முழுமையாகக்
கேட்டு அறிந்து கொள்ளலாம்.
உங்கள் நன்மைக்காக உங்கள் நலன்
காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள்
தினமும் விழிப்புணர்வுடன்
சந்தித்து விஷயங்களைச்
சொல்லிக்கொடுக்க
வேண்டும்.

Saturday, 11 January 2014

தேன் & கருஜீரகம்


Friday, 10 January 2014

குழந்தை பாக்கியம் பெற


Thursday, 9 January 2014

நோய் நிவாரணம் பெற .......


Wednesday, 8 January 2014

சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ?

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே... சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ?

 இந்த விளக்கம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் இதை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம். 


இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.

இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும், ஆய்வாளர்களும், அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.

முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

1) தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.

2) தனிமையை அதிகம் விரும்புவது.

3) பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.

4) அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.

5) ஆபாச திரைபடம்,அல்லது புகைப்படங்களின் மோகம்.

இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.

இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது ?

மனிதர்கள் பாவம் செய்யும் போது அல்லாஹ்வின் பயம் அவர்களிடம் இல்லாமல்ப் போய் விடுகிறது அதன் காரணத்தாத் தான் அல்லாஹ்வை மறந்து சிறு பாவம்,பெரும் பாவம் என எல்லாவெற்றையும் செய்கிறார்கள்.இப்படி பாவம் செய்ய துணியும் போது அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்பதை நினைத்து உடனே அதை விட்டும் நீங்கி விட வேண்டும்.

ஆனால் இந்த சுய இன்பம் என்ற பாவம் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற பயம் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே...!

(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.”(23:5,6,7)

மேற்கண்ட திருமறை வசனத்தில் அல்லாஹ் கூறியபடி வாழ்பவர்கள் தம்முடைய இச்சைகளைத் தீர்க்க நாடினால் தங்கள் மனைவியரிடத்தில் அல்லது தமது அடிமைகளிடத்தில் மாத்திரம் தான் தீர்த்துக் கொள்வார்கள் அதுவல்லாத வேறு எந்த வழிகளையும் நாட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.இந்த வசனத்தில் இறைவன் பயன் படுத்தும் வேறு வழிகள் என்ற வாசகத்திலிருந்து சுய இன்பமும் அதிலே அடங்கும் என்பதை அறியலாம்.

அது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.” (நூல் : அஹ்மத் 10490)

மேற்கண்ட நபி மொழியில் நபி(ஸல்)அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவு படுத்துகிறார்கள்.

அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் தடுக்கக் கூடிய காட்சிகளை பார்த்தல்,அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது,ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.

இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும்,அதிலும் குறிப்பாக நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப் படுவதையும் நாம் அறியலாம்.

ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகம் உருதிப் படுத்துகிறது.

உண்மையில் அல்லாஹ்வை ஏற்று தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆபாச உணர்வுக்கான தேவையை அல்லாஹ் கூறிய இரண்டு வழிகளில் மாத்திரம் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளை தேடக்கூடாது.

அதிலும் அல்;லாஹ் கூறக்கூடிய இரண்டாவது வழிமுறை நம்முடைய காலத்தில் நடைமுறையில் இல்லை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களின் உடலுறவுத் தேவையை தமது மனைவியிடத்தில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியல்லாதவர்களுடன் தனது தேவையை பூhத்தி செய்வதற்கு முனைவதோ,அல்லது சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லாஹ்விடத்தில் வரம்பு மீறிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பது மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது
(மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.” (24:24)

இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.” (36:65)

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.” (41:20)

மேற்கண்ட குர் ஆன் வசனங்களில் மறுமை நாளின் விசாரனை பற்றி மிகத் தெளிவாக இறைவன் எடுத்துரைக்கிறான்.

ஆக சுய இன்பம் போன்ற காரியங்களை நாம் செய்வதின் மூலம் மறுமை விசாரனையில் அல்லாஹ்விடத்தில் நமது உருப்புகளே நம்மைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வரம்பு மீறியோராகி, நஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்.

இதிலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை கேட்க வேண்டும்.

சுய இன்பத்தின் மூலம் ஏற்படும்(உடலியல்)விபரீதங்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சுய இன்பம் என்ற மிகக் கொடூரமான மன நோயை பெரும்பாலான மருத்துவர்களும்,விஞ்ஞானிகளும் கூடாது என்று தடுத்தாலும் ஒரு சிலர் இதனை ஆதரிக்கவும் செய்கின்றனர்.

இப்போது அவர்கள் சுய இன்பத்தை ஆதரிப்பதற்கு கூறும் காரணத்தையும், வாதங்களையும் அதில் உள்ள தவறுகளையும் ஆராய்வோம்.

அவர்களின் வாதம் :

சுய இன்பத்தின் மூலம் ஒருவன் யாருக்கும் தொந்தரவுகளைக் கொடுக்காமல் தனிமையில் அவனது தேவையை தீர்த்துக் கொள்கிறான் இதன் மூலம் அவன் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நாடுகிறானே தவர யாருக்கும் கெடுதி செய்யவில்லை.

நமது பதில் :

ஒருவன் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்க்காக ஒரு குற்றத்தை ஆதரிப்பது ஒரு அறிவாளியின் செயல் அன்று. அத்துடன் இப்படிப் பட்டவர்கள் இதுவல்லாத மற்ற எல்லா குற்றங்களுக்கும் இந்த அளவுகோளையே வைப்பார்களா? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் ஒருவன் போதை மாத்திரைகளையோ,அல்லது போதை ஊசிகளையோ பயன்படுத்தினால் இவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? மறுக்கிறார்களா? மறுக்கத் தான் செய்கிறார்கள்.

ஏனெனில் அது உடலுக்கு கேடானது என்பதுதான் அவர்களின் பதில். அதுபோல் சுய இன்பமும் உடலுக்கு கேடானது என்பதில் சந்தேகமில்லை. ஆக ஒரு குற்றத்தை தடுத்தல் என்ற முடிவுக்கு வரும் போது அது அவனுடன் மட்டும் தொடர்பு பட்டாலும், மற்றவர்களுடன் தொடர்பு பட்டாலும் குற்றம், குற்றமே!

அவர்களின் வாதம் :

சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப் படும் இந்திரியமும், தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே! தூக்கத்தில் அறியாமலும், சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப் பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும். இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.

நமது பதில் :

சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திpரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.

உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்களாம். ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை.சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை.

உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. (இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும். அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.

உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து, இயற்கையாக (அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் செயற்கை முறைகளை பயன் படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும்.

அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும்.

இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.

அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது. ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. வெளியேற்றும் முறை சிறந்ததா? சிக்களானதா? என்பதுதான் பிரச்சினை.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உருதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும்,சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.

அவர்களின் வாதம் :

சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும் ?

நமது பதில் :

சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.

அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.

சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம் அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது. ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது, அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால் அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.

தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா? இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது.இதற்கு மாற்ற வழியை நபி(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப் படுத்தும்.கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும். (புகாரி : 1905)

அப்துர் ரஹ்மான் பின் யஸீத்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“நானும், அல்கமா, மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி)அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள். நாங்கள் (வசதி,வாய்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும்.

ஏனெனில் அது (தகாத)பார்வையை கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு (ஆசையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும். என்று சொன்னார்கள்.” (புகாரி : 5066)

நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத, ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.

இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான்.ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி(ஸல்)அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.

நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.

இப்னு மஸ்த்(ரலி) அவர்கள் கூறியதாவது :

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள் இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.” (புகாரி : 5071)


கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :
“அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி)அவாகள் நாங்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.” (புகாரி : 5075)

இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை” (5:87)

குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.

மார்க்கத்தில் இது தடை செய்யப் பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர்.இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.

மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.

நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.

மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.

ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்.” (2:173)

வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம், நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப் பட வேண்டியதாகும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.

மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.

தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம். வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.

இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.

இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.

ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக !

Tuesday, 7 January 2014

ஆங்கில மருத்துவர் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து ( drug ) சரிதானா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

என்ன நோய் என்று போனாலும் மருத்துவர் அதிகப்படியான மாத்திரைகளை
கொடுக்கிறார் இவர் கொடுக்கும் மாத்திரை மருந்து ( drug ) சரிதானா என்று
எப்படி கண்டுபிடிப்பது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

2 ரூபாய் மாத்திரையே போதும் ஆனால் மருத்துவர் 50 ரூபாய்க்கான மாத்திரையை
கொடுத்திருக்கிறாரே இதன் காரணம் என்ன என்பதை உங்களுக்கு மருத்துவர்
விவரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம் எளிதாக ஆன்லைன் மூலம் நமக்கு
கொடுத்திருக்கும் மருந்து சரிதானா என்பதை சோதிக்கவே இத்தளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://www.drugcite.com/

இத்தளத்திற்கு சென்று நாம் நமக்கு கொடுத்திருக்கும் மாத்திரை ( drug )
அல்லது டானிக் சரியானது தானா எந்த வயதில் உள்ளவர்கள் எப்படி சாப்பிட
வேண்டும் இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது முதல் ,
இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அனைத்துவிதமான
தகவல்களையும் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பெரிய நிறுவனங்களின் வேலை
பார்க்கும் நபர்கள் தங்களுக்கு நேரம் இல்லாத காரணத்தினால் அவர்கள்
கொடுக்கும் மருந்தை அப்படியே சாப்பிடுகின்றனர், ஆனால் இனி அவர்கள்
கொடுத்திருக்கும் மருந்தை இத்தளத்தில்
இருக்கும் தேடுதல் கட்டத்திற்குள் கொடுத்து தேடினால் மேலும் விரிவாக
தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

மறக்காம ஷேர் பண்ணுங்க.....

Monday, 28 October 2013

15 Ways to Get the Whitest Teeth Ever


# 15 Strawberries!

Ok, THIS is an economical and hassle free way to whiten your teeth. Just rub strawberries on each tooth and rinse your mouth out to whiten your teeth without breaking the bank.



# 14 Listerine Whitening Quick Dissolve Strips

This is one of the most economical and hassle free ways to whiten your teeth. You don't even have to worry about removing them as they dissolve on their own in your mouth.



# 13 Baking Soda

Ok, so maybe ALL of these are cheap options! Baking soda is a natural miracle worker when it comes to your teeth. Not only is it cheap, you can use the product to brush your teeth when you need a whiter smile stat.


# 12 Lemon Juice Whitens Teeth

Pour a small amount of lemon juice onto your toothbrush and brush your teeth as you normally would. Lemons work similar to a scrub to get rid of the gunk and grime on your teeth.


# 11 "An Apple A Day"

Munch on an apple the next time you need a dose of natural sweetness. The fruit works to exfoliate your teeth without you even having to do anything.


# 10 Cut Down on the Caffiene

Cut down your three-cups-a-day coffee habit and remember to take a look in the mirror in a week. The yellowing effects of coffee will fade with time!


# 9 Limit Sugar

Sugar causes your teeth to erode faster. Check out how much whiter they look after you limit your intake for a couple of weeks.


# 8 Avoid This Bad Tooth Habit

This should go without saying , but soda is terrible for your teeth. In fact, it's terrible in just about every conceivable way.


# 7 Eat Plenty of Carrots

Eat plenty of carrots to keep your teeth a sparkling shade of white. Carrots act as an exfoliates, which removes signs of decay from your pearly whites.


# 6 Remember to Brush Your Teeth, Duh!

Brushing your teeth twice a day keeps your mouth free of bacteria and stains that make your teeth yellow.


# 5 Rinse With Water

Develop the habit of rinsing your mouth with water after every meal and cup of coffee or tea to keep your teeth white as snow.


# 4 Schedule an Appoitment With Your Dentist

We recommend scheduling an appointment with your dentist once a year as doing this will keep your teeth camera worthy.


# 3 Floss Twice a Day

Flossing twice a day will keep your teeth strong and ready for the camera during this holiday season.


# 2 Crest Whitening Strips Work

Crest teeth whitening strips work wonders when it comes time for you to attend that black tie event you've been waiting all year for.


# 1 Say No to Smoking

Nicotine from cigarettes and other forms of tobacco is the number one reason why your teeth turn yellow. Your pearly whites will look younger soon after you put down the last cigarette.

Sunday, 1 September 2013

நீரும்.... மருந்தே....! ....,,,,,,,



Wednesday, 7 August 2013

4 Deadly Effect of Anger on your Health


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR