ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday, 30 June 2014

கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்

( கடந்த 13.06.2014 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில் ஆற்றிய உரையிலிருந்து)

தற்போதைய சூழலில் நமது சமூகம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களுக்கு காரணம்
எதிரிகள் அல்ல. கருத்து வேறுபாடுகளால் நாம் பிளவுண்டதுதான் காரணமாகும்.
இந்த மார்க்கம் வெற்றியடையும், அனைத்து இடங்களையும் சென்றடையும் என்பதை
திருக்குர்ஆன் மற்றும் ஹதீத்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

9:32 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள்
விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்
ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

61:9 (இணை வைத்து வணங்கும்) முஷரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா
மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும்,
சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.

இரவு,பகல் சென்றடையும் அனைத்துப் பகுதிகளையும் இம் மார்க்கம் சென்றடையும்
என்று நபிகள் நாயகம் ஸல் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்கள் கூறும்போது
அல்லாஹ் எனக்கு உலகினைச் சுருக்கி காண்பித்தான் -அதனுடைய அனைத்துப்
பிரதேசங்களிலும் இஸ்லாம் இருப்பதைக் கண்டுக் கொண்டேன் எனக் கூறினார்கள்.

அவ்வாறே இந்த உம்மத்தினை பஞ்சத்தினாலோ அல்லது எதிரிகளினாலோ முற்றிலுமாக
அல்லாஹ் அழித்துவிட மாட்டான் எனவும் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்
அவர்களுக்கு வாக்களித்துள்ளான். எனவே அதுவத் தஃலியா - நமக்குள் உள்ள
பகைமைதான் பயப்பட வேண்டியவை என்பதை இது உணர்த்துகிறது.பிளவுகள்தான்
வேதனைகளைக் கொண்டு வரும்.

இந்ததலைப்பினை நாம் மூன்றாக பிரிக்கலாம்.

1. பிரிவின் வகைகள் - அன்வாவுல் ஹிலாப்
2. பிரிவின் காரணங்கள் - அஷ்பாவுல் ஹிலாப்
3. பிரிவின் ஒழுக்கங்கள் - அதபுலி ஹிலாப்

பிரிவின் வகைகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்

a) அடிப்படைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடு
b) மார்க்கச் சட்டங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடு

11:118 உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே
சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான். (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள்
எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் ஷாதிபி ரஹ் அவர்கள் கீழ்கண்டவாறு
மனிதர்களை வகைப்படுத்துகிறார்கள். அடிப்படை விசயங்களில் கருத்து வேறுபாடு
கொண்டவர்கள் இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவார்கள் என அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.

மனிதர்களை மூன்று வகையினராவர். முதலாம் வகையினர் முவஹ்ஹிதுகள் அல்லது
மூமின்கள். இதில் தங்களுக்கு தாங்களே அநீதம் இழைப்பவர்கள்,
நடுநிலையாளர்கள் மற்றும் நன்மையில் விரையக் கூடியவர்கள் ஆகியோர்
அடங்குவர். ஆய்ஷா ரழி அவர்களிடம் "தங்களுக்கு தாங்களே அநீதம்
இழைப்பவர்கள் யார்" எனக் கேட்ட போது அவர்கள் கூறினார்கள் - நானும்,
உங்களைப் போன்றவர்களும் என பதிலுரைத்தார்கள். அவ்வாறான பணிவினை அல்லாஹ்
நமக்குத் தந்தருள்வானாக...

இரண்டாம் வகையினர் காபிர்கள் மற்றும் முஷ்ரிக்குகள் ( இணை வைப்பவர்கள்
மற்றும் இறைவனை மறுப்பவர்கள்). இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவராக
இருப்பர்.

12:106 மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில்
பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

மூன்றாமவர் மிகவும் கெட்டவர்கள், மோசமானவர்கள் - இவர்கள்தான்
முனாபிக்குகள் (நயவஞ்சகர்கள்). நிபாக்குல் அகீதா ( கொள்கையில்
முனாபிக்தனம்) மற்றும் செயல்களில் முனாபிக்தனம் ஏற்படலாம். கொள்கையில்
முனாபிக்காக உள்ளவர்கள் தோற்றத்தில் முஸ்லிம்களாக இருப்பார்கள், ஆனால்
உள்ளத்தில் காபிர்களாக இருப்பார்கள். அமல்களில் முனாபிக் உள்ளவர்களின்
குணங்கள் அபுஹூரைரா (ரழி) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரழி)
ஆகியவர்கள் அறிவிக்கும் ஹதீத்களின் அடிப்படையில் கீழ்கண்டவாறு இருக்கும்.

- பேசினால் பொய் பேசுவார்கள்
- நம்பினால் மோசடி செய்வார்கள்
- வாக்களித்தால் மாறு செய்வார்கள்
- அமானிதங்களை மோசடி செய்வார்கள்
- விவாதங்களின் போது வரம்பு மீறி நடந்துக் கொள்வார்கள்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.



மார்க்க சட்டங்களில் கருத்து வேறுபாடு

இந்தக் கருத்து வேறுபாடுகளினால் பிளவுபடக் கூடாது என அல்லாஹ்
எச்சரித்துள்ளான். இவ்வாறு பிளவுபட்டால் நமது பலம் குன்றிவிடும்.

8:46 இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் -
நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி
விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு)
நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன்
இருக்கின்றான்.

3:105 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார்
தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ,
அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்ததையோருக்குக் கடுமையான
வேதனை உண்டு.

6:159 நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி
பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன்
(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம்
அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில்
அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுவது போல் அதிகளவு மக்கள் இருந்தாலும்
வெள்ள நுரையினைப் போல் சக்தியற்று இருப்போம்.


கருத்து வேறுபாடுகளினால் சமூகம் பிளவுண்டால், சகோதரத்துவம் மற்றும்
ஒற்றுமை என்பதற்கே இடமில்லை என இப்னு தைமியா ரஹ் அவர்கள்
குறி்ப்பிடுகிறார்கள். எனவே நமக்குள்ளே உள்ள கருத்து முரண்பாடுகளினால்
நாம் பிளவுபட்டு விடக் கூடாது.

பல்வேறு ஆசிரியர்களைப் பின்பற்றுவதால், அறிஞர்களின் கருத்துக்களை
பின்பற்றுவதால் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வருகிறது என்றால் ஒரே
ஆசிரியரை, நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பின்பற்றிய ஸஹாபாக்கள்
மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளனவே ஏன்?

காரணங்கள்

1. மனிதனின் இயற்கை குணம் - ஒவ்வொரு மனிதனின் உடல், நிறம், ஏன் கைரேகை
கூட வித்தியாசப்பட்டு இருப்பதைக் காண்கிறோம்.
30:22 மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும். உங்களுடைய
மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய
அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு
அத்தாட்சிகள் இருக்கின்றன.
அவ்வாறே தனித்தனிக் கருத்துக்கள் கொள்வதும் மனிதனின் இயற்கைக் குணமாகும்.

2. ஆதாரங்கள் சென்றடையாமல் இருப்பது

ஒரு மார்க்கச் சட்டத்தில் அனைத்து அறிஞர்களுக்கும் அனைத்து ஆதாரங்களும்
கிடைத்திருக்கும் எனச் சொல்லிட முடியாது. சில அறிஞர்களுக்கு ஆதாரங்கள்
கிடைத்திடாமல் இருந்திருக்கலாம். எந்த அறிஞரிடம் ஒட்டு மொத்தமான ஸஹீஹான
ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன என ஒருவர் நம்பினால் அவர் பாவத்தில்
இருக்கின்றார் என இப்னுதைமியா ரஹ் அவர்களின் கூற்று இங்கு
கவனிக்கத்தக்கது.

ஸஹாபாக்களுக்கு அனைத்து ஆதாரங்களும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை
பார்க்கிறோம். ஷாம் தேசத்தில் காலரா நோய் ஏற்பட்ட போது உமர் ரழி
அவர்களும் அபு உபைதா ரழி அவர்களும் இரண்டு கருத்துக்களை
தெரிவிக்கின்றனர். ஷாம் தேசத்திற்கு போக வேண்டாம் என உமர் ரழி சொன்னபோது,
அபு உபைதா ரழி அவர்கள், அல்லாஹ்வின் கதரை விட்டு விரண்டோடிப்
போகப்போகிறீர்களா என கேட்டார்கள். அப்போது உமர் ரழி அவர்கள் ஆம், ஒரு
கதரிலிருந்து இன்னொரு கதருக்கு செல்கிறோம் எனத் தெரிவித்தார்கள். அப்போது
அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழி அவர்கள் தெரிவித்தார்கள் - நபிகள்
நாயகம் ஸல் "காலரா நோய் ஒரு ஊரில் இருந்தால் அங்கிருப்பவர்கள் வெளியேற
வேண்டாம் என்றும், வெளியே இருப்பவர்கள் அந்த ஊருக்கு செல்லாதீர்கள் "
எனச் சொல்லியிருப்பதை கேட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்கள். இந்த ஹதீத்
இருப்பது அப்போதுதான் உமர் ரழி மற்றும் அபு உபைதா ரழி ஆகியோருக்குத்
தெரிய வருகிறது.

3. புரிந்துக் கொள்வதில் வேறுபாடு

ஹதீத்கள் மற்றும் குர்ஆன் வசனங்களைப் புரிந்துக் கொள்வதிலும் கருத்து
வேறுபாடு வரும் வாய்ப்புள்ளது. பனூ குரைழா என்ற யூதக் குழுவிற்கு எதிராக
படையை அனுப்பும்போது, நபிகள் நாயகம் ஸல் அவர்கள், அங்கு செல்லும் வரை
அஸர் தொழுகையைத் தொழ வேண்டாம் என கட்டளை பிறப்பித்தார்கள். அஸர்
தொழுகையின் வக்த் முடியும் நிலை வரும்போது தோழர்களில் ஒரு சாரார், நாம்
விரைவாகச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
அவ்வாறு கட்டளையிட்டார்கள், ஆனால் இப்போது வக்த் முடிவடையப் போவதால்
தொழுகையை தொழ வேண்டும் என தொழுதார்கள். மற்றொரு சாரார், அது தூதரின்
கட்டளை என்பதால் வக்த் முடிந்தபிறகு தொழுதார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரு சாராரின் செயல்களையும் அங்கீகரித்ததோடு
மட்டுமல்லாது, பனூ குரைழாவுக்கு எதிரான போரில் இரு சாராரையும் ஒரே
அணிவகுப்பில் நிறுத்தினார்கள்.

அவ்வாறே நஸ்ர் அத்தியாயம் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது என உமர் ரழி
அவர்கள் தோழர்களிடம் வினவியபோது, பெரும்பாலான தோழர்கள் அது மக்கா
வெற்றியினைக் குறிப்பதாக தெரிவித்தனர். ஆனால் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்
அது, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மரணத்தினைக் குறிப்பதாக
தெரிவித்தார்கள். இந்த கருத்தினை உமர் ரழி ஏற்றுக் கொண்டார்கள்.

அவ்வாறே நபிகள் நாயகம் ஸல் மிம்பரில் உரையாற்றும்போது, ஒரு அடியார்
மறுமையினைத் தேர்ந்தெடுத்து உலகஅலங்காரத்தினை விட்டு விட்டார் எனக்
கூறியபோது அபுபக்கர் சித்திக் ரழி அவர்கள் மட்டும் அழுகிறார்கள்.
அழுகையின் காரணத்தினைக் கேட்டபோது, இது நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
மரணத்தி்னை தேர்ந்தெடுக் கொண்டார்கள் என்பதைக் குறிக்கிறது என்று
விளக்கியபோதுதான் மற்ற தோழர்கள் அந்தக் கருத்தினைப் புரிந்துக்
கொண்டார்கள்.

4. ஆதாரம் நீக்கப்பட்டு விட்டது என்பது தெரியாமல் இருப்பது

ஒரு தடவை தொழுகையில் ஒரு தோழர் தும்மிய போது முஆவியா ரழி அவர்கள்
யர்ஹமுகல்லாஹ் எனக் கூறுகிறார்கள். அப்போது சில தோழர்கள் அவரைக்
கோபத்துடன் பார்த்தபோது "என்ன ஆனது உங்களுக்கு' எனக் கேட்கிறார்கள்.
அப்போது பக்கத்திலுள்ளவர் அவரைத் தட்டியதும் அமைதியாகிவிட்டார்.
தொழுகையில் பேசக் கூடாது என்று சட்டம் அருளப்பட்டது தெரியாதக்
காரணத்தினால் முஆவியா ரழி அவர்கள் தொழுகையில் பேசினார்கள்.

தொழுகை முடிந்ததும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள், முஆவியா ரழி அவர்களிடம்
அமைதியாக தோழரே, தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர் மற்றும் திலாவதுல்
குர்ஆன் ஆகும். எனவே தொழும்போது பேசாதீர்கள் எனத் தெரிவித்தார்கள்.
இதனைக் குறிப்பிட்டு முஆவியா ரழி அவர்கள், நபிகள் நாயகம் ஸல் போன்ற ஒரு
சிறந்த ஆசிரியரை இதற்கு முன்பும் யாரும் கண்டதில்லை இனியும்
காணப்போவதில்லை என சிலாகித்துக் கூறினார்கள்.

அவ்வாறே மது ஹராமாக்கப்பட்ட சட்டம் தெரியாத தோழர் தோல்பையில் நபிகள்
நாயகம் ஸல் அவர்களிடம் மதுவினைக் கொடுக்கிறார். மது குடிப்பது ஹராம்
என்றுத் தெரிந்த பின்னர் அதனை நான் விற்று விடுகிறேன் எனச் சொன்னபோது,
அதனை விற்பதும் ஹராம் என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அல்லாஹ்வின் அருளினால் அறிஞர்களைக்கொண்டு அல்லாஹ் ஹதீத்களை ஒன்று சேர்த்தான்.

5. மறதி

மறதி என்பது அனைத்து மனிதருக்கும் உள்ளதாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்களே
தொழும்போது குர்ஆனில் ஒரு வசனத்தை மறந்து, அடுத்த வசனத்தினை ஓதினார்கள்.
தொழுகை முடிந்ததும் தோழர்கள் அதனைச் சுட்டிக்காட்டிய போது, உபை ரழி
அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபை அவர்களே நீங்கள் எனக்கு
எடுத்துக் கொடுத்திருக்கக் கூடாதா எனக் கேட்டார்கள்.

இவ்வாறான காரணங்களினால் கருத்து வேறுபாடுகள் வருவது தவிர்க்க
முடியாததாகும். இந்தக் காரணங்கள் அனைத்தும் அறிஞர்களுக்காக
கூறப்படுவதாகும். இஸ்லாத்தினைத் தெளிவாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு இது
பொருந்தும். நம்மைப் போன்ற சாமானியர்கள் இஸ்லாமியச் சட்டங்களில்
எந்தவிதமான கருத்துக்களும் கூறாமல் இருக்க வேண்டும். கல்வியில்லாதவர்கள்
கருத்து வேறுபாட்டில் மௌனமாகி விட்டால் கருத்து வேறுபாடும் மௌனமாகும்.

நமக்குத் தேவையான பத்வாக்களை தேடிப்பிடித்து கருத்துக் கூறுவது, அதனை
விவாதமாக்குவது, நமக்கு முரண்பாடான கருத்துடையவர்களை தரக்குறைவாகப்
பேசுவது போன்றவற்றிலிருந்து நாம் விலகி விட வேண்டும்.

கருத்து வேறுபாட்டின் ஒழுக்கங்கள்

1. மாற்றுக் கருத்துள்ள மனிதரை மதிப்பது - நமது கருத்துடன் வேறுபாடு
கொண்டுள்ள அறிஞர்களை நாம் மதித்து நடக்க வேண்டும். முன் சென்ற அறிஞர்கள்
தாங்கள் யாருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அவர்களிடம்
சொல்லும்போது, "நாங்கள் உங்களை நேசிக்கிறோம் - அல்லாஹ்வுக்காக, நாங்கள்
உங்களை மதிக்கிறோம். ஆனால் தங்களின் இந்தக் கருத்தில் எங்களுக்கு
மாறுபாடு உண்டு" என அழகாக எடுத்துரைப்பார்கள். இழிவுபடுத்துவதிலிருந்து
நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

2. நல்லெண்ணம் கொள்வது - ஒருவர் ஒரு கருத்தினை சொல்லும்போது, நாமாக
அதற்கு தவறான காரணம் கற்பிக்கக் கூடாது. இன்ன ஜமாஅத்தில் இருப்பதால்
இவ்வாறு கூறுகிறார், பணம் வாங்கி விட்டார், வழிகேடர் என எந்த
வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது.

49:12 முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்
கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.
(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.
அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில்
எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா?
(இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை
அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்
கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்.

3. தனிப்பட்ட ஒரு மனிதரை மட்டு்ம் சார்ந்திருந்து முடிவெடுக்கக் கூடாது.
அவ்வாறு சார்ந்திருப்பது வழிகேட்டின் முதல் அடையாளமாகும். ஷியாக்கள்
இவ்வாறுதான் வழிகேட்டினை அடைந்தார்கள்.

மனிதரை வைத்து சத்தியத்தினை முடிவெடுக்கக் கூடாது, சத்தியத்தினை
வைத்துத்தான் மனிதரை முடிவெடுக்க வேண்டும்.

நாம் பல்வேறு இயக்கங்களாக இருப்பதில் தவறில்லை. நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் முஹாஜிர்,அன்ஸார் என்ற பெயர்களை அங்கீகரித்தார்கள். ஆனால் ஒரு
தடவை ஒரு சிறிய பிரச்னையில் முஹாஜிர்களே வாருங்கள், அன்ஸார்களே வாருங்கள்
எனப் பிரிந்த போது, அதனைக் கண்டித்து, ஜாஹிலிய்யாவின் இத்தகைய
வார்த்தைகளை விடுங்கள் எனக் கூறினார்கள். எனவே வேறுபாட்டினால் நாம்
பிளவுபட்டு விடக் கூடாது.

நம்மிடம் யாரும் உனது ஷேய்க் யார் எனக் கேட்டால், நபிகள் நாயகம் ஸல் எனக்
கூற வேண்டும். உனது ஜமாஅத் எது எனக் கேட்டால் முஸ்லிம் எனக் கூற
வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது வழியில் எப்போதும்
ஒன்றிணைப்பானாக...(ஆமீன்)
******அல்லாஹ் மிக்க அறிந்தவன்***********

நன்றி:அலாவுதீன்

Saturday, 28 June 2014

மீன்கள் சில உண்மைகள்!!!


* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.

* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.

* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.

* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.

* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.

* மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.

* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.

* ‘லங் ஃபிஷ்’ என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.

* ஆழ்கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக்கின்றன.

* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக்கூடியவை.

* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்

* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது ‘க்ளீனர்’ மீன்.

* ‘பஃபர் ஃபிஷ்’ தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!

* ‘சூரிய மீன்’ என்ற வகை மீன் கோடிக்கணக்கில் முட்டைகள் இடும்.

* ‘சர்ஜன் மீன்’ என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.
தகவல்: தினகரன்

Friday, 27 June 2014

எச்சரிக்கை :...சவூதியில் DOUX கோழியின் ரிப்போர்ட் .

நோயுள்ள
கோழிகளை பேக்செய்து தள்ளுபடி விலையில்
விற்பனை.
,அதாவது மார்கட்டில் 14 அல்லது 15 ரியாலுக்கு
விற்பனையாகும் கோழியை  தள்ளுபடி விலையில்
விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இது பற்றிய ஒரு தகவல் வெளியானது. இந்த தகவல்
உண்மைதானா என்று விசாரித்த போது
சகோதரர்கள் பலரும் உண்மை என்றே பின்னூட்டம்
போட்டிருந்தார்கள் . சவூதி Carre Foure ஹைப்பர்
மார்கட்டில் மேனேஜராக பணியாற்றுபவரும்
எனக்கு அறிமுகமானவருமான சகோதரர் சித்திக்
மீரான் அவர்கள் இத்தகவலை மேலும்
தெளிவாக சவூதி முனிசிபல் அதிகாரிகள்
Carre Foure க்கு விசிட் செய்து Doux
கோழிகளை உடனே அப்புறப்படுத்த
உத்தவிட்டார்கள் என உறுதிப்படுத்தினார் ..
இவரது தகவலை இந்த படத்தின்
கீழே பதித்துள்ளேன் ...
அன்பு சகோதரர் Mohamed Sharaf பின் கருத்து :
மொத்தத்தில் லாங் லைப் ப்ரோசன்
சிக்கன் (LONG LIFE FROZEN
CHICKEN)உண்ணாமல் இருப்பது மிகவும்
நல்லது . எனக்கு என்னுடைய அலுவலகத்தில்
எல்லா மாதமும் ஓசியில் ஒரு புல் கே எப்
சி சிக்கன் கிடைக்கும் . அதை கூட நான்
உண்பதில்லை. வீட்டுக்கும்
கொண்டு வருவதில்லை. கிடைக்கும்
பொருள் ஓசியாக இருந்தாலும்
நம்முடைய உடல் விலை மதிக்க
முடியாதது அல்லவா .!....
சகோதரர்களே !... தற்சமயம் DOUX
கோழியை தவிர்ப்போம்....
தகவல்: தக்கலை கவுஸ் முஹம்மத்

மீறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற படுவார்கள்-சவூதி எச்சரிக்கை

நோன்பு  நேரங்களில் முஸ்லிம்களின்
உணர்வுகளை மதிக்கவேண்டும்;
முஸ்லிமல்லாத வெளிநாட்டவருக்கு
சவூதி வேண்டுகோள்.
இந்த வார இறுதியில் புனித ரமலான்
நோன்பு தொடங்க உள்ளது. இதில்
ஒருமாத காலம் முஸ்லிம்கள்
உண்ணாமல் பருகாமல்
நோன்பு நோற்பார்கள். இந்த காலகட்டத்தில்
சவூதியில் பணியாற்றும் முஸ்லிமல்லாத
வெளிநாட்டவர்கள், "".
பொது இடங்களில், தெருக்கள்
மற்றும் வேலை செய்யும் இடங்களில்,
உணவு உண்ணுதல்,பருகுதல்,
அல்லது புகைப்பதை தவிர்ப்பதன் மூலம்
முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.
இதை மீறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற படுவார்கள் என்றும், அவர்கள் மீது கருணை காட்ட
இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

Tuesday, 24 June 2014

ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை- அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

5 ஆயிரம் வருட பாரம்பரியம்
கொண்ட இக்கிணற்று நீரை,
உலகில்
வாழும் பெரும்பாலான
இஸ்லாமியர்கள் இந்த
நீரை அருந்தாமல் இருந்திருக்க
மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள்
இந்த
கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட
அற்புதமான இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி காண்போம்.
ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08 அடி
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள்
தண்ணீர்….
பம்ப் செய்யும் மணிக்கு 2
கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60
லட்சம்
லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில்
அடங்கியுள்ள மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
இறை தூதர் இப்ராஹிம்-
ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன்
பயணித்தனர்.
தற்போது மெக்காவில்
காபா அமைந்துள்ள இடத்தில்,
இறைவனின் கட்டளை என்பதால்,
இருவரையும் தனியாக
விட்டு விட்டு இப்ராஹிம்
நபி சென்றார்கள்.
அப்போது தாகத்தால்
குழந்தை இஸ்மாயில் அழுதார்கள்,
குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத
நிலையில் தண்ணீரை தேடி பல
இடங்களுக்கு தாய்
ஹாஜரா அலைந்தார்கள்.
இறைவனிடம்
பிராத்தனை செய்தார்கள்,
அப்போழுது தன்னந்தனியாக
கிடந்த குழந்தை இஸ்மாயில், தன்
பிஞ்சுக்கால்களை தரையில்
உதைத்து அழுதபோது அந்த
இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்
கொண்டு வந்தது.
அதை வழிந்தோடவிடாமல்
சுற்றிலும்
மேடெழுப்பி நீரை தேக்கி வைத்தார்கள்.
அதுவே ‘ஜம் ஜம்’
கிணறு என்று அழைக்கப்படுகிறது.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும்
அதிகம் என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள்,
சுகாதாரத்திற்காக இந்த
கிணற்றினை சுத்தப்படுத்த
வேண்டும்
என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட
சவுதி அரசு 8 அதி நவின ராட்சத
பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,
பகலுமாக 15 நாட்கள் இந்த
நீரை இறைத்தது. ஆனால் நீரின்
அளவு குறையவில்லை. மாறாக
நீரின் மட்டம் ஒரு அங்குலம்
உயர்ந்து இருந்தது.
ஒரு வினாடிக்கு 8 ஆயிரம்
லிட்டர் என்ற அளவில், தினமும்
691.2 மில்லியன் லிட்டர்
தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
மோட்டார்கள் மூலம் இந்த
கிணற்றுத்தண்ணீர்
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய
கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம்
எடுக்கும் அளவு நீரை,
ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம், அதை விட அதிசயம்
691.2 மில்லியன் நீரை தினமும்
எடுத்தும்,அப்போதும் இதன்
அளவு குறைவதில்லை.
சுவையும்
மாறியதில்லை.ஹஜ் காலத்திலும்
ரமலான் மாதத்திலும் சுமார்
20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர்
வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
குறையாமல் அந்தத் தண்ணீரைத்
தமது சொந்த ஊருக்கும் எடுத்துச்
செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக்
கிணறு, பாலைவனத்தில்
அமந்துள்ள இந்தக் கிணறு,
அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லாத அந்தக்
கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்
மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது
என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில
வருடங்களிலோ பல
வருடங்களிலோ செயலிழந்து போய்
விடும். ஆனால் இந்த ஊற்று பல
ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல்
இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
ஜம் ஜம் கிண்று அருகே எந்த
தாவரமும் வளருவதில்லை.எந்த
ஒரு நீர் நிலையாக இருந்தாலும்
பாசி படிந்து போவதும்
கிருமிகள் உற்பத்தியவதும்
இயற்கை. இதனால் தான்
குளோரின்
போன்ற மருதுகள் நீர் நிலைகளில்
கலக்கப்படுகின்றன. ஆனால்
ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான
காலம் முதல் இன்று வரை எந்த
மருதுகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல்
தன்னைத்
தானே பாதுகாத்துக்
கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத
தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக
இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும். ஆனால் இந்தத்
தண்ணீர் 1971 ஆம்
ஆண்டு ஐரோப்பிய சோதனைச்
சாலையில் சோதித்துப்
பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு மிகவும்
ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது
பூமியிலுள்ள நீரில்
மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர்
என்று நபிகள் நாயகம்
கூறியுள்ளார்கள்.
பொதுவாக மற்ற நீரில்
இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில்
தெரிய வந்துள்ளது. கால்ஷியம்
மற்றும் மேக்னீஷியம் எனும்
உப்பு மற்ற வகை தண்ணீரை விட
ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக
உள்ளது. இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக்
கூடியவை. இதை அனுபவத்தில்
உணரலாம். மேலும் இந்தத்
தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளை அழிக்க வல்லது.
அங்கே அற்புதம்
நடக்கிறது இங்கே அற்புதம்
நடக்கிறது என்றெல்லாம்
பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில்
நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக்
கூடாது. மற்ற அற்புதங்கள்
எல்லாம்
எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை.
நிருபிக்கப்டாமல்
குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. ஆனால் தினசரி 20
லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர்
குடி நீராகப் பயன்படுவதும்,
பாலைவனத்தில் இந்த அதிசயம்
பல்லாயிரம் ஆண்டுகள்
நடந்து வருவதும் எல்லாவித
சோதனைக்கும்
உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட
ு உள்ளதால்
இது மெய்யான அற்புதமாகும்.
இது போன்ற அற்புதம் உலகில்
இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை.

Wednesday, 18 June 2014

இலங்கையில் நடந்த கலவரத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்- சமூக வலைத்தளங்களால் அம்பலம்


கொழும்பு: இலங்கையில்
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர்கள்
நடத்திய கலவரத்தை அங்குள்ள ஊடகங்கள்
இருட்டடிப்பு செய்த நிலையில், சமூக
வலைத்தளங்கள் உதவியால் உலகின்
கவனத்திற்கு இப்பிரச்சினை வந்துள்ளது.
இலங்கையின் அலுத்கமா பகுதியில்
இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரம்
நேற்று முதல்
தொடங்கி நடைபெற்று வந்தாலும்,
அந்த நாட்டு ஊடகங்களை அந்த
செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை, சில
ஊடகங்கள் அப்படி ஒரு சம்பவம்
நடந்ததாகவே காண்பிக்கவில்லை.
அரசு கட்டுப்பாட்டிலுள்ள
டெய்லி நியூஸ், அந்த நாட்டு அதிபர்
ராஜபக்சே பொலிவியா நாட்டில்,
ஜி77 உச்சிமாநாட்டில்
பேசியதற்கு முக்கியத்துவம்
அளித்து செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையில் அதிக
விற்பனையை கொண்டுள்ள
'தி டெய்லி மிரர்' செய்தித்தாள்,
போதை மருந்து கடத்தலும்
அதுதொடர்பான கைது குறித்த
செய்தியையும் பெரிதாக
வெளியிட்டிருந்தது. இலங்கையை சேர்ந்த,
துபாயில் வசிக்கும் ஒரு இளைஞர் கூறுகையில்,
"இலங்கையில் வசிக்கும் எனது குடும்பத்தாருக்
கே, இப்படி ஒரு கலவரம் நடப்பது நான் போன்
செய்து தெரிவிக்கும்வரை
தெரியாது. பேஸ்புக் பார்த்துதான்
எனக்கு இந்த விவரம் தெரிந்தது"
என்றார். இலங்கையின்
செய்தி வெப்சைட்டான 'ரீபப்ளிக்
ஸ்கொயர்' ஆசிரியர்,
டினிடு டி ஆல்விஸ் கூறுகையில், "மத கலவரம்
குறித்த
செய்தியை வெளியிட்டு கலவரத்தை அதிகரிக்க
கூடாது என்பது பத்திரிகைகளின்
நெறிமுறை என்பதால் அந்த
செய்திக்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை" என்றார். இதில்
வேடிக்கை என்னவென்றால்,
பத்திரிகைகளில்
செய்தி வெளியிடாத
பத்திரிகையாளர்கள், தங்களது ட்விட்டர்,
பேஸ்புக் தளங்களில் நடைபெறும்
சம்பவங்களை பதிவு செய்துள்ளனர்.

Friday, 6 June 2014

இன்றைய தகவல்-தொழுகை

முஸ்லிம்கள்
நாளொன்றுக்கு எத்தனை முறை தொழுகையை நிறைவேற்ற
வேண்டும்?
A)
முஸ்லிம்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து நேரத்
தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளது
ஐந்து நேரத் தொழுகைகளின்
பெயர்களைக் கூறுக!
A) fபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் மற்றும் இஷா
பஜ்ர் தொழுகையின் நேரம் எது?
A) அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன்
உதயமாகும் வரைக்குமாகும்.
லுஹர் தொழுகையின் நேரம் எது?
A) சூரியன்
உச்சி சாயத்துவுங்கியதிலிருந்து ஒரு பொருளின்
நிழல் அதன் உயரத்தின் அளவிற்கு வரும்
வரைக்குமாகும்.
அஸர் தொழுகையின் நேரம் எது?
A) ஒரு பொருளின் நிழல் அதன்
உயரத்தின் அளவை அடைந்தவுடன்
ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது
மஃரிப் தொழுகையின் நேரம் எது?
A) சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம்
மறையும் வரைக்குமாகும். செம்மேகம்
என்பது சூரியன் மறைந்த
பிறகு தோன்றுவதாகும்
இஷா தொழுகையின் நேரம்
எது?
A) செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின்
பகுதி வரைக்குமாகும்

தொழுவதற்கு தடை செய்யப்பட்ட
நேரங்கள் யாவை?
A) 1) சூரியன் அடிவானில் உதயமாவதில்
இருந்து அது முழுமையாக உதயமாகும்
வரை உள்ள நேரம் 2) சூரியன் நடு உச்சியில்
இருக்கும் போது 3) சூரியன் அடிவானில் மறைய
ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக
மறையும் வரை உள்ள நேரம். (ஆதாரம் : அஹ்மத்
மற்றும் முஸ்லிம்)
மேற்கண்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற
நேரங்களில் ஒருவர் தன்னுடைய இறைவனுக்காக
ஸஜ்தா செய்வதற்கு எந்த தடையும்
இல்லை.

Wednesday, 4 June 2014

இன்றைய தகவல்-தொழுகை

தொழாதவர்களுக்கு இறைவன்
சித்தப்படுத்தி வைத்திருக்கும் நரகத்தின்
பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம். அதாரம் : அல்-
குர்ஆன் (74:41,42,43)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR