ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday, 18 June 2014

இலங்கையில் நடந்த கலவரத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்- சமூக வலைத்தளங்களால் அம்பலம்


கொழும்பு: இலங்கையில்
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர்கள்
நடத்திய கலவரத்தை அங்குள்ள ஊடகங்கள்
இருட்டடிப்பு செய்த நிலையில், சமூக
வலைத்தளங்கள் உதவியால் உலகின்
கவனத்திற்கு இப்பிரச்சினை வந்துள்ளது.
இலங்கையின் அலுத்கமா பகுதியில்
இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரம்
நேற்று முதல்
தொடங்கி நடைபெற்று வந்தாலும்,
அந்த நாட்டு ஊடகங்களை அந்த
செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை, சில
ஊடகங்கள் அப்படி ஒரு சம்பவம்
நடந்ததாகவே காண்பிக்கவில்லை.
அரசு கட்டுப்பாட்டிலுள்ள
டெய்லி நியூஸ், அந்த நாட்டு அதிபர்
ராஜபக்சே பொலிவியா நாட்டில்,
ஜி77 உச்சிமாநாட்டில்
பேசியதற்கு முக்கியத்துவம்
அளித்து செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையில் அதிக
விற்பனையை கொண்டுள்ள
'தி டெய்லி மிரர்' செய்தித்தாள்,
போதை மருந்து கடத்தலும்
அதுதொடர்பான கைது குறித்த
செய்தியையும் பெரிதாக
வெளியிட்டிருந்தது. இலங்கையை சேர்ந்த,
துபாயில் வசிக்கும் ஒரு இளைஞர் கூறுகையில்,
"இலங்கையில் வசிக்கும் எனது குடும்பத்தாருக்
கே, இப்படி ஒரு கலவரம் நடப்பது நான் போன்
செய்து தெரிவிக்கும்வரை
தெரியாது. பேஸ்புக் பார்த்துதான்
எனக்கு இந்த விவரம் தெரிந்தது"
என்றார். இலங்கையின்
செய்தி வெப்சைட்டான 'ரீபப்ளிக்
ஸ்கொயர்' ஆசிரியர்,
டினிடு டி ஆல்விஸ் கூறுகையில், "மத கலவரம்
குறித்த
செய்தியை வெளியிட்டு கலவரத்தை அதிகரிக்க
கூடாது என்பது பத்திரிகைகளின்
நெறிமுறை என்பதால் அந்த
செய்திக்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை" என்றார். இதில்
வேடிக்கை என்னவென்றால்,
பத்திரிகைகளில்
செய்தி வெளியிடாத
பத்திரிகையாளர்கள், தங்களது ட்விட்டர்,
பேஸ்புக் தளங்களில் நடைபெறும்
சம்பவங்களை பதிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR