
இந்தியாவின் “பட்ஜெட்”விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும்...