
ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள்!
நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா?என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர்.அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள்காண்பிக்க தவறுவதுதான்இதற்கு முக்கிய காரணம்.
சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூடவெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார்.இந்த வாழ்க்கை மிகவும்...