ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday, 3 March 2014

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


இன்று நானும் என் பங்குக்கு இரண்டு கிட் அண்ணா நகர் டிப்போவில் வாங்கினேன். அங்கு தோட்டக்கலை அதிகாரியாக முகம்மது நசிர் என்பவர் இருக்கிறார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசி நமது சந்தேகங்களுக்கு அழகிய முறையில் விளக்கம் அளிக்கிறார்..மேலும் விபரம் வேண்டுவோர் அவரை 9841155808 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும்.

Sunday, 2 March 2014

Today's Ahadith Feb 27, 2014


BismillahirRahmanirRahim

As'salaamu Aalaikum WaRahamtullahi WaBarakatuhu,
 
“Rabbi Zidni Ilma - My Lord! Increase me in knowledge”

O you who believe! Let not your properties or your children divert you from the remembrance of Allah. And whosoever does that, then they are the losers.
And spend (in charity) of that with which We have provided you before death comes to one of you, and he says: "My Lord! If only You would give me respite for a little while (i.e. return to the worldly life), then I should give Sadaqah (i.e. Zakat) of my wealth, and be among the righteous [i.e. perform Hajj (pilgrimage to Makkah) and other good deeds].
And Allah grants respite to none when his appointed time (death) comes. And Allah is All-Aware of what you do.
{Holy Qur’an Surat: 63 Al-Munafiqoon Verses# 9-10-11}
Narrated Mujahid:

Ibn Umar (Radi Allahu anhu) said, "Allah's messenger (SalAllahu alaihi wasallam) took hold of my shoulder and said, 'Be in this world as if you were a stranger or a traveler.'" (The sub-narrator added): Ibn Umar used to say, "If you survive till the evening, do not expect to be alive in the morning, and if you survive till the morning, do not expect to be alive in the evening, and take from your health for your sickness, and (take) from your life for your death."
 
Sahih Al-Bukhari 8:425
 
 

Then, there has succeeded them a posterity who have given up As-Salat (the prayers) [i.e. made their Salat (prayers) to be lost, either by not offering them or by not offering them perfectly or by not offering them in their proper fixed times] and have followed lusts. So they will be thrown in Hell.
{Holy Qur’an Surat: 19 Maryam Verse# 59}
Men whom neither trade nor sale (business) diverts from the Remembrance of Allah (with heart and tongue), nor from performing As-Salat (Iqamat-as-Salat), nor from giving the Zakat. They fear a Day when hearts and eyes will be overturned (out of the horror of the torment of the Day of Resurrection).
{Holy Qur’an Surat: 24 An-Noor Verse# 37}


Hadith - 2

Narrated Abu Huraira (Radi Allahu anhu):
I heard Prophet (SalAllahu alaihi wasallam) saying, “If there was a river at the door of anyone of you and he took a bath in it five times a day, would you notice any dirt on him?" They said."Not a trace of dirt would be left". The Prophet (SalAllahu alaihi wasallam) added, “That is the example of the five Salat with which Allah blots out (annuls) evil deeds."

Sahih Al-Bukhari 1:506

Urgently Required : IT Security Engineer*



*An IT company in Riyadh requires urgently an experienced Security
Engineer with experience in Firewalls.*

*Good package for the right candidate.*

*Only locally available candidates in Saudi Arabia with valid transferable
Iqama need apply.*

*Please send your CV to **jobsinsaudi999@gmail.com
<jobsinsaudi999@gmail.com>*

குர்ஆனில் பேசும் எறும்புகள்!

நபி சுலைமானிடம் பேசிய எறும்பு..
இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)
அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது
எறும்பு பேசியது:
அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ‘எறும்புகள் பேசியதாகவும்,அது
கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை)
அவர்கள் சிரித்ததாகவும்’ இங்கே கூறப்படுகிறது.
அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு
முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த
அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது
நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி
விரிவாகக் காண்போம்.
எறும்பும் அதன் வகைகளும்
எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப்
பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த
அறிவியலார் ‘உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு
பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும்
எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான்
வாழ்கின்றன.
பாதை மாறாது திரும்பும் அதிசயம்
நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.
அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு
தமது வசிப்பிடங்களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும்
போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு
புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன்
அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான்
எனபதைப் பார்ப்போம்.
துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு
இன எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து
வருகின்றன.
காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது
டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில்
தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.
அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது
கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும்
ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக
அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய
பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத
பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது
என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள்
பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே
பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு
சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை
சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி என
சிந்தித்தாலே தலை சுற்றுகிறது
நன்றி: குலசை சுல்தான்

பனிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வுகள்

பள்ளிப்பருவத்தின் கடைசி நிலையான பனிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வுகள் நாளை 03/03/2014 முதல் தொடங்க உள்ளது.அனைத்து மாணவ,மாணவியர்களும் சிறப்பாக தேர்வுகள் எழுத அல்லாஹ்விடம் துவா செய்வோம்.இன்ஷா அல்லாஹ்.மேலும் சிறப்பாக தேர்வுகள் எழுத உங்களது ஆலோசனைகளையும்,
அனுபவங்களையும்,கருத்துக்களையும் மாணவ,மாணவியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக இடஓதுக்கீடு கேட்டு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு வகைகளின் தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.இடஓதுக்கீடு நாம் பெற கல்வி மிகவும் முக்கியம்.அது போன்று தேர்வுக்கு பின்னர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டியதும் முக்கியம்.எனவே மாணவ,மாணவியர்கள் கவனமுடன் தேர்வு எழுத மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சமூகத்தின் புற்று நோய் மது

சமூகத்தின் புற்று நோயாக மாறிக் கொண்டிருக்கும்  மது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விழி குறித்து வாசகர்களின் பார்வைக்காக...
விழி என்பது என்ன ?
விழி தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு இயக்கமாகும்.
நம் சமூகத்தின்  அறிவுஜீவிகள், அறிஞர்கள், படித்தவர்கள் எனப்படும் சிவில் சொசைட்டியினர் இது குறித்து மௌனம் சாதிக்காமல் குரலெழுப்பி, மதுவால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்  இளைஞர்களையும் பெண்களையும் திரட்டி அரசியல் கட்சிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வைக்கும் அழுத்தம் தரவேண்டும் என்பதே விழியின் நோக்கம்.
ஏன் மதுவிலக்கு தேவை ?
1. இன்று மது நம் சமூகத்தில்  ஒரு சமூக, பொருளாதார, அரசியல், உடல்நல, மனநலப் பிரச்சினையாகும். உலக சுகாதார நிறுவனம் மதுவை விஷம் என்றும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துடையது என்றும் குற்றங்களுக்குத் தூண்டக்கூடியது என்றும் அறிவியல் ரீதியாக வரையறுத்திருக்கிறது.
2. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை மது அருந்தியவர்களால் நிகழ்பவை. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சாலை விபத்துகள் 70 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களைச் செய்வோரில் பெரும்பாலோர் மது போதையில் அவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  
3. சென்னை மருத்துவக் கல்லூரி அண்மையில் நடத்திய ஆய்வில் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 11 சதவிகிதம் பேர் மதுப் பழக்கத்தில் இருப்பது தெரிய வந்தள்ளது. இப்போது 11 வயதிலேயே மது குடிக்கத் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மது குடிப்பது தீங்கு என்றும் தவறு என்றும் இருந்த மனநிலை ஊடகங்களால், குறிப்பாக திரைப்படங்களால் மாற்றப்பட்டு வருகிறது. திரையில் கதாநாயகன் குடிப்பதிலிருந்து தொடங்கி நிஜ வாழ்வில் கல்யாண வீட்டில் குடி - விருந்து நடத்துவது வரை எல்லாம் சகஜமாகவும் இயல்பானதாகவும் கருதும் ஆபத்தான மனநிலை சமூகத்தில் பரவியுள்ளது. மது குடிப்பதால் ஏற்படும் உடல்நலிவினால் ஈரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன. மிக இளம் வயதிலேயே கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாக பலர் ஆக்கப்படுகின்றனர்.
4. வரும் ஆண்டில் தமிழக அரசுக்கு மது வரி வருவாய் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள் எதிர்பார்க்கப்படுவதாக சட்டப் பேரவையில் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி மொத்த மதுவிற்பனை அளவு 50 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்  இருக்கும். இந்தப் பணத்தை தருவதற்கு சராசரியாக தினசரி 70 லட்சம் முதல் ஒரு கோடி தமிழர்கள் குடிக்கிறார்கள். இதே ரீதியில் சென்றால் மிக விரைவில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மது அடிமையேனும் உருவாகி நம் அனைவர் குடும்ப வாழ்க்கையையும் சிதைக்கும் நிலையே ஏற்படும்.
5. ஏற்கனவே இரு தலைமுறைகளுக்கும் மேலாக நாம் கணிசமான இளைஞர்களை மது அடிமைத்தனத்தால் இழந்திருக்கிறோம். விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை செயல்திறனுடைய தொழிலாளர்களாகவும், சமூக மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான இயக்கங்களில் ஆக்கப்பூர்வமான பணியாற்றக் கூடிய தொண்டர்களாகவும், கல்வி , கலை, அறிவியல் துறைகளில் அறிஞர்களாகவும் உருவாக வேண்டிய இவர்கள் மதுவால் வீணாகியுள்ளனர். நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களை உற்றுப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். வரும் ஆண்டுகளில் இதே நிலை நீடித்தால் நம் சமூகம் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அழுகிச் சாகடிக்கும் நோயில் இறந்த சமூகமாகிவிடும்.
விழி இதற்காக என்ன செய்யப் போகிறது ?
1. அவரவர் பகுதிகளில் தங்களுக்கு அன்றாடம்  தொல்லை தரும் மதுக்கடைகளை சட்டப்படி அகற்ற  அந்தப் பகுதி மக்கள் முன்னால் இருக்கும் சட்ட வழிமுறைகளைப் பிரசாரம் செய்யும்.
2. மகளிர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழியின் பிரசாரக் குழு பிரசாரம் செய்யும்.
3. நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அனைத்துக் கட்சிகளும் மதுக் கடைகளை மூடுவது பற்றிய தங்கள் கருத்தை நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்று ஒவ்வொரு தொகுதியிலும் வற்புறுத்தப்படும்.
4. தேர்தலில் நியாயமான முறையில் வாக்களிக்காமல் மக்களை தடுக்க பணம், பரிசுப் பொருட்கள் மட்டுமன்றி, மதுவும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவதால், தேர்தல் அறிவிப்பு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எல்லா மதுக்கடைகளையும் மூடி வைக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையமும் அரசும் உத்தரவிட வேண்டுமென்று வற்புறுத்துவோம். மதுவுக்கு எதிரான கருத்தை தெரிவிக்கும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை தாங்களும் வலியுறுத்த வேண்டுமென்று கோருகிறோம்.
5. மதுக் கடைகளை மூடுவது பற்றி மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்புக்கு (ரெஃபரெண்டம்) ஏற்பாடு செய்வோம். மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.
6. மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவர்கள், வணிகர்கள் என்று பல்வேறு பிரிவினரிடமும் மதுவிலக்கை ஆதரித்துக் கையெழுத்து இயக்கம் நடத்துவோம்.
விழி எப்படி இவற்றைச் செய்யும் ?
தனியே யாரும் எதையும் செய்ய முடியாது. எல்லா மக்களும் அவரவரால் இயன்றதை செய்வதன் வாயிலாகவே இதைச் செய்ய முடியும். விழியின் இந்த பிரசார இயக்கத்தில் ஏற்கனவே களத்தில் இயங்கி வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, பாடம் எனப் பல்வேறு சமூக இயக்கங்களும், பல துறை ஆர்வலர்களும் உடன் உழைக்கின்றனர்.
சாதி, மதம், மொழி, பால், இனம், வர்க்கம் என்று எந்த வேறுபாடுமின்றி நம் மக்களை அழித்து வரும் மது வணிகத்துக்கு எதிராக ஒற்றைக் குரலாக ஒலித்து பூரண
மது விலக்கை செயல்படுத்தச் செய்வோம்.
விழி தொடர்புக்கு:
ஞாநி,
ஒருங்கிணைப்பாளர்
39, அழகிரிசாமி சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை - 78
மின்னஞ்சல்: vizhitamilnadu@gmail.com

Saturday, 1 March 2014

மருத்துவ அதிசயம்.

ஜுலியா அர்மாஸ் , அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி யாக பணிபுரிந்த பெண் . அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது , கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா (spina bifida ) என்ற தண்டுவட நோயால் பாதிக் பட்டிருப்பது கண்டறியப் பட்டது . இந்த நோயின் விளைவால் குழந்தை யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து 21 வாரங்களே ஆகியிருந்த நிலையில் , குழந்தையை பிறக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும். இந்நிலையில் , ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள் . சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின் , அவளுக்கு அறுவைசிகிச்சை செய்வதென தீர்மானிக்கப் பட்டது . அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி வெட்டியெடுக்கப் பட்டு , அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது . குழந்தைக்கு வெற்றி கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 21 வாரங்களை , வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம் , அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது . அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது . டாக்டர் புருனர் , அந்த சம்பவத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி நான் உறைந்து போனேன் . நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’ , என்கிறார் . இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான் போகிறோம் . தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப் படுத்தி , `நம்பிக்கையின் கரம் ( hand of hope )’ என்ற பெயரோடு, அந்த படம் உலகெங்கும் வலம் வந்தது . சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19, 1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி முழு ஆரோக்கியத் துடன் ஆண்குழந்தை பிறந்தது. `இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில் ’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங் களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR