v 20 வருடங்களுக்கு முன் 1992 டிசம்பர்
6 ம் நாள் பட்டப் பகலிலே ஒட்டுமொத்த உலகும்
பார்த்துகொண்டிருந்த போது இந்த தேசத்தின் குடிமக்களான சிறுபான்மை முஸ்லிம்களின்
வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் சங்பரிவார ஃபாசிஸ்டுகளால் இடித்துத்
தரைமட்டமாக்கப்பட்டது; 450 ஆண்டுகால வரலாற்றுச் சின்னம் தகர்க்கப்பட்டது.
v தங்களை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும்
ஒருசேர இணைந்து நின்று மாபெரும் துரோகத்தையும் அநீதியையும் பரிசாக வழங்கிய கோர
நிகழ்வு தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு.
v துரோகத்தின் கொடூரங்களிலிருந்தும் அநீதியின்
நச்சுப்பற்களிலிருந்தும் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுத்து முஸ்லிம்களிடம் ஒப்படைக்க
வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை
v பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது அன்றைய தினம் மட்டுமே நடந்தேறிய ஓர்
எதார்த்தமான நிகழ்வு அல்ல. பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது வெறும் மஸ்ஜித் இடிப்பு
என்பதோ அல்லது முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை பறிப்பு என்ற குறுகியவரையறைக்குள்
மட்டும் நின்று விடக்கூடியது அல்ல. மாறாக முஸ்லிம்களின் வாழ்வுரிமையின் மீதும் மத
சுதந்திரக் கொள்கையின் மீதும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.
v இது பல வருடங்களாக செய்யப்பட்ட சதி என்பது
மறுக்க முடியாத உண்மை
v கி.பி.
1528ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஜஹிருத்தீன்
பாபருடைய உத்தரவின் பேரில் ‘அவது’ (அயோத்தி) பகுதியின் கவர்னராக இருந்த
மீர்பக்கி என்பவரால் அங்கிருந்த ஒரு தரிசு நிலத்தில் கட்டப்பட்டது தான் பாபரி
மஸ்ஜித். என்பது வரலாற்று உண்மை
v 1857ல் பாபரி மஸ்ஜித் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு
போன்றிருந்த இடம் ‘ராம் சாபுத்ரா’ என்றும் அதுவே ‘ராம் ஜென்மஸ்தான்’ – அதாவது ராமர் பிறந்த இடம் என்றும் சாமியார் ஒருவர்
பொய்பிரச்சாரத்தை துவக்கினார். பூஜை புனஸ்காரங்களை செய்ய
ஆரம்பித்தார்.
v 1883, மே மாதம் ராம்
சாபுத்ராவில் ராமர் கோவில் கட்ட இந்துத்துவவாதிகள் ஃபைஸாபாத் துணை ஆணையரிடம்
விண்ணப்பித்தனர். அவரோ அதனை நிராகரித்து அனுமதி மறுத்துவிட்டார்.
v 1885, ஜனவரி 15ல் ஜென்மஸ்தான் காப்பாளராகத் தன்னைக் கட்டிக்கொண்ட
ரகுபீர்தாஸ் கோவில் கட்ட அனுமதி கேட்டு ஃபைஸாபாத் முன்சிப் கோர்ட்
கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதும் நீதிமன்றம் அதனை
மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
v இந்த மனுக்கள் எதிலுமே பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்படவில்லை
என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இதன் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான
வெறுப்புப் பிரச்சாரம் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதோ
இந்துத்துவவாதிகளின் முன்னோடியான வி.டி.சாவர்க்கர் பரப்பிக் கொண்டிருந்ததாக
வரலாற்றாசிரியர் ஆர்.என்.அகர்வால் அவர்கள் ’ The National Movement’ என்ற நூலில் கூறுவதைக் கேளுங்கள் :
v “1917 முதல் வி.டி.சாவர்க்கர்
‘ராஷ்ட்ரா’ (என்ற
இந்து ராஷ்ட்ரா) கொள்கையை தெளிவாகப் பேசி வந்தார். அவர் இந்துக்களைப் பார்த்து,
அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்யத்திற்கான அடிப்படைகளை
அமையுங்கள் என ஆலோசனை வழங்கினார். இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. ஒன்று இந்து
தேசம் மற்றொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில்
சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்தவொரு எதிர்காலமும் இல்லை என சாவர்க்கர்
கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.”
v கவ்பா என்ற நாடறிந்த சட்டமேதை தனது ‘பாசிவ் வாய்ஸ்’ என்ற நூலில்
குறிப்பிடுவதைப் பாருங்கள்: “அதாவது சாவர்க்கர் மட்டும்தான்
இந்த சிந்தனையில் இருந்தார் என்பதல்ல. சாவர்க்கருக்கு முன்பே பல சங்பரிவார
தலைவர்கள் இந்த கொள்கையில் இருந்தனர். சங்கராச்சர் குர்ட்டோகி என்ற இந்து
மகாசபையின் தலைவர், இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்; முஸ்லிம்கள் இங்கே விருந்தாளிகள்தாம். அவர்கள் விருந்தாளிகள் போல் நடக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும் என பிரகடனப்படுத்தினார்.”
v இந்த வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் பின்னாளில் நடந்த
பாபரி மஸ்ஜித் ஆக்கிரமிப்பு மற்றும் இடிப்பு. இதனைத் தொடர்ந்து 1925ம் ஆண்டு இந்து ராஷ்ட்ரா என்ற கொள்கையுடன்
ஆர்.எஸ்.எஸ் உருவானது. முஸ்லிம்களுக்கெதிரான சதிச்செயல்களும் தாக்குதல்களும்
இதன்வழியாக தொடர ஆரம்பித்தன.
v 1934
v அயோத்தியில் நடந்த மதக்கலவரத்தில் பாபரி மஸ்ஜிதில் தொழுது
கொண்டிருந்த முஸ்லிம்களையும் பள்ளிவாயிலையும் சங்பரிவார்கள் தாக்கினர். பாபரி
மஸ்ஜிதின் சில பகுதிகள் சேதமடைந்தன. ஆனால் சேதம் பிரிட்டிஷ் அரசின் செலவிலேயே சரி
செய்யப்பட்டது. .
v 1947 ஆகஸ்ட் 15
v ஆங்கிலேயரிடமிருந்து நமது தேசம் விடுதலை அடைந்தது. ஆனால் சங்பரிவார
பாசிஸ்டுகளின் கரங்களில் சிக்கிக் கொண்டது.
v 1949 நவம்பர் 13
v பாபரி மஸ்ஜிதிற்கு அருகில் உள்ள அடக்கஸ்தலத்தை சில சங்பரிவார்கள்
தோண்டி, அங்கெ ஒரு கட்டுமானத்தைக் கட்டி ஒரு திண்ணையை
அமைத்தனர். முஸ்லிம்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் நீதிமன்றமோ அதனைத்
தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக சட்டவிரோத கோவில் கட்டுமானத்தை
முஸ்லிம்கள் அகற்றிவிடாமல் இருக்க நீதிபதி 144 தடையுத்தரவு பிறப்பித்தார்.
தடையுத்தரவு அமுலிலிருந்த போதே 9 நாட்கள் அங்கு
தொடர்ந்து ராமாயணம் படிக்கப்பட்டது. 10 ம் நாள்
நிகழ்ச்சி பாபரி மஸ்ஜிதிற்கு முன்பாகவே நடந்தது. அதில் ராமர் பிறந்த இடம்
கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த இடத்தை தரிசிக்க
இந்துக்கள் அனைவரும் வரவேண்டுமென மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
v 1949 டிசம்பர் 22
v அன்று பாபரி மஸ்ஜிதில் முஸ்லிம்கள் இஷா தொழுகையை நிறைவேற்றி விட்டு
சென்றபிறகு நள்ளிரவில் சங்பரிவார்கள் மஸ்ஜிதின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே
சென்று மிம்பர்மீது சட்டவிரோதமாக ராமர் சிலைகளை வைத்தனர். அன்றைய தினம் சுதந்திர
இந்தியாவில் ஒரு பள்ளிவாசல், முஸ்லிம்களின்
இறையில்லம் கோவிலாக மாற்றப்பட்டது. சிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி பூஜை,
புனஸ்காரங்களுக்கு அனுமதியளித்தார். இதனைத் தொடர்ந்து 1950ம் ஆண்டு நீதிமன்றம் முஸ்லிம்கள் இந்த பூஜைக்கு இடையூறு செய்யக்கூடாது
என்றும் உத்தரவிட்டது.
v 1968
v பொதுமக்கள் பூஜைக்காக பள்ளிவாசலை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, பூஜையை நிறுத்த முடியாது என உயர்நீதிமன்றமும்
உத்தரவிட்டது.
v 1985 R.S.S., V.H.P., BJP ஆகிய சங்பரிவார அமைப்புகளும்,
கட்சிகளும் அயோத்தியை மையமாகக் கொண்டு ராமர் கோவில் இயக்கத்தைத்
துவக்கின.
v 1989
v கிராமம் கிராமமாக ஸ்ரீராம் என பொறிக்கப்பட்ட செங்கல்
சேகரிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன்
வழியாக ராமாயணம் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டு இந்து மக்களிடையே ராமர் மீதான பக்தியை
அதிகரிக்கச் செய்யும் சதிச்செயல் நடத்தப்பட்டது.
v 1990
v ராமர் கோவிலுக்காக அத்வானி நடத்திய ரதயாத்திரையில் நாடெங்கும் பல
பகுதிகளில் சங்பரிவார்கள் நடத்திய வகுப்புக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
கொல்லப்பட்டனர்.
v 1991
v மத்தியிலிருந்த காங்கிரசின் நரசிம்மராவ் அரசு ‘வழிபாட்டுத்தலங்களின் சட்டம்’ என்றொரு சட்டத்தை இயற்றியது. எந்தவொரு பள்ளிவாசலும் கோவிலாகவோ, ஆலயமாகவோ மாற்றப்படலாகாது என்றும், எந்தவொரு
கோவிலும் ஆலயமாகவோ,
v பள்ளிவாசலாகவோ மற்றப்பட முடியாது என்றும், 15.8.1947- அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள்
முதல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என
அச்சட்டம் கூறியது. அதே நேரத்தில் பாபரி மஸ்ஜிதை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது
என்றும் கூறியது. அதாவது, பாபரி மஸ்ஜிதை வேண்டுமானால்
கோவிலாக மாற்றிக்கொள்ளலாம் என சொல்லாமல் சொல்லியது இந்த சட்டம். 1991, அக்டோபர் மாதம்: உத்திரபிரதேச பா.ஜ.க. அரசு பாபரி
மஸ்ஜிதை சுற்றியுள்ள 2,774 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
v 1992 பிப்ரவரி
v கையகப்படுத்திய இடத்தை சுற்றி அரசே தடுப்புச்சுவர் எழுப்பியது.
v 1992 மார்ச்
v பாபரி மஸ்ஜிதை சுற்றியுள்ள 42
ஏக்கர் நிலத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு அரசு குத்தகைக்கு
விட்டது. அதில் ராமர் கதை சொல்லும் பூங்காவை அரசே அமைத்தது.
v 1992 ஏப்ரல்
v பாபரி மஸ்ஜித் வளாகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை
பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
தேசிய ஒருமைப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய 35 பேர் கொண்ட கமிட்டியும் அமைக்கப்பட்டது. அயோத்தியிலும் பாபரி மஸ்ஜித்
வளாகத்திற்குள்ளும் நீதிமன்ற உத்தரவுகளும், நீதி நெறிகளும்
தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன என அங்கு பார்வையிட்ட பின் அக்குழு மத்திய அரசிடம்
அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
v 1992 ஜூலை
v அலகாபாத் உயர்நீதிமன்ற ஆணைகள் மீறப்பட்டு கோவில் கட்டுமானப்பணிகள்
துவக்கப்பட்டன. பணிகளை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
v 1992 டிசம்பர் 6
v அன்று காலை 11 மணியளவில்
ஆரம்பித்து மாலை 6 மணி வரை பாபரி மஸ்ஜித் சங்பரிவார்களால்
முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த சங்பரிவார
தலைவர்கள் அதனை உற்சாகபடுத்தினர். மஸ்ஜிதை பாதுகாக்க வேண்டிய காவல்துறையும்
இராணுவமும் இதனை வேடிக்கை பார்த்தனர். மஸ்ஜித் இடிக்கப்படுவதை உலகிலுள்ள முக்கிய
தொலைக்காட்சி சேனல்களும் படம் பிடித்து கொண்டிருந்தன. இடித்து முடித்தபின் அந்த
இடத்தில் ராமர்-சீதை சிலைகளை வைத்தனர்.
v 1992 டிசம்பர் 8
v மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளான சங்பரிவார்கள் மத்திய அரசின் செலவில்
இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர். இதற்காக இரயில்வே துறை 300 கோடி ரூபாய் செலவழித்தது
v மஸ்ஜித் இடிப்பை தடுத்திருக்க முடியுமா?
v 1992, டிசம்பர் 6 ம் நாள்
நடந்த தேசிய அவமானத்தை தடுத்திடுவதற்கான அதிகாரமும் ஆற்றலும் இரண்டு பேரிடம்
இருந்தது.ஒருவர் நாட்டின் பிரதமர் நரசிம்மராவ், மற்றொருவர்
நீதிபதி வெங்கடாச்சலய்யா. இருவரும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண்சிங் நீதிமன்றத்திற்கு தந்த வாக்குறுதியை
மீறியதற்காக ஒரு நாள் நீதிமன்றம் கலையும் வரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டுமென
வேடிக்கையான தண்டனை வழங்கப்பட்டது.
v லிபர்ஹான் கமிஷன்
v பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி
லிபர்ஹான் தலைமையிலான கமிஷன் 17 ஆண்டுகளாக
இதனை விசாரித்தது. 2009ம் ஆண்டு ஜூன்மாதம் மத்திய அரசிடம்
அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் குற்றவாளிகள் என சுட்டிக்காட்டப்பட்ட சங்பரிவார
தலைவர்கள் மீது அரசாங்கம் எந்தவிதமான சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
v பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு 17 ஆண்டுகள் உழைத்து தயாரிக்கப்பட்டநீதிபதியின்
அறிக்கை, மற்ற கமிஷங்களின் அறிக்கையைப் போலவே விழலுக்கு
இறைத்த நீராகி விட்டதோ? என அனைவரும் எண்ணும் வகையில்
செயலற்று இருக்கின்றது.
v அரசியல்வாதிகளின் நிலை
v மதசார்பற்ற காட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் அனைத்து அரசியல்
கட்சிகளும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக மட்டுமே
பயன்படுத்துகின்றனர். பாபரி மஸ்ஜிதை மீட்டெடுக்கும் எந்தவொரு உறுதியான
போராட்டத்தையும் அவர்கள் சுயமாக முன்னெடுக்க தயாராக இல்லை.
v பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் முஸ்லிம்களுக்கு கட்டிக்
கொடுப்போம் என அப்போதைய காங்கிரஸ் அரசு வாக்குறுதியளித்தது. ஆனால் இன்றளவும் அதை
நிறைவேற்றவில்லை.
v நீதித்துறையின் துரோகம்
v 1949லிருந்து ஒவ்வொரு முறையும் பாபரி மஸ்ஜித்
விவகாரத்தில் அநீதி இழைக்கப்படும் போது முஸ்லிம்கள் நீதிமன்றங்களின் கதவுகளைத்
தட்டுவார்கள். ஆனால் நீதித்துறையோ ஒருதலைப்பட்சமாக நடந்து சங்பரிவார்களுக்கு
சாதகமான தீர்ப்பையே இதுவரை வழங்கி வந்துள்ளது. நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு
தொடர்ந்து அநீதி இழைத்து வந்துள்ளது.
v 60 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ‘பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம்?’ என்ற
வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30 அன்று
அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அப்படித்தான் இருந்தது.
v சட்ட விதிமுறைகளுக்கு முரணாக நீதி நெறிமுறைகளுக்கு எதிராக
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினார்கள். நீதிபதி சிப்கத்துல்லா கான், தரம்வீர் ஷர்மா மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர்.
பாபரி மஸ்ஜித் இடத்தை மூன்றாக பங்கு வைத்து 3ல் 2 பங்கை இந்துக்களுக்கும், 3ல் 1 பங்கை முஸ்லிம்களுக்கும் பிரித்து வழங்கி அரசியலமைப்பின் அடிநாதத்தையே
அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.
v இந்த தீர்ப்பை கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்றே நீதிக்காக போராடும்
நல்லுள்ளங்களும், நடுநிலையாளர்களும் கண்டித்தனர்.
உச்சநீதிமன்றமும் அவ்வாறே கண்டித்து அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை
விதித்தது.
v உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா?
v முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்திற்கு எதிராக ‘ஷாபானு’ வழக்கில் தீர்ப்பு
வழங்கியது உச்சநீதிமன்றம் தான். பாபரி
மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் உச்சநீதிமன்றம் தான்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தொடர்புள்ளதாக எந்தவிதமான நேரடி ஆதாரம் இல்லாதபோதும் கூட்டுமனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அஃப்சல் குருவிற்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதும் உச்சநீதிமன்றம் தான்.
இப்படி தொடர்ந்து முஸ்லிம்களுமக்கு உச்சநீதிமன்றம் அநீதி இழைத்த போதிலும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? இன்றளவும் நீதி கிடைக்கவில்லை பொறுத்திருந்து எதிர் பார்ப்போம் நீதியை..
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தொடர்புள்ளதாக எந்தவிதமான நேரடி ஆதாரம் இல்லாதபோதும் கூட்டுமனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அஃப்சல் குருவிற்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதும் உச்சநீதிமன்றம் தான்.
இப்படி தொடர்ந்து முஸ்லிம்களுமக்கு உச்சநீதிமன்றம் அநீதி இழைத்த போதிலும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? இன்றளவும் நீதி கிடைக்கவில்லை பொறுத்திருந்து எதிர் பார்ப்போம் நீதியை..
v ஆனால் நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் . ஆங்கிலேயர்
காலத்தில் இருந்த
v உரிமைகள் கூட இப்பொழுது சுதந்திர இந்தியாவில் மறுக்கப்படுவது
கண்கூடாக பார்க்கக் கூடிய உண்மை
0 comments:
Post a Comment