ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday, 29 December 2012

இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்


கல்கி அவதாரம் பற்றிய ஓர் ஆய்வு


Who is Kalki?  Is Kalki Already Came?
அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்கள் அனைவரின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

இன்று ஒரு தகவல்

கல்கி அவதாரம் பற்றிய தகவல் !!!! (Must read )
இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?ஓர் ஆய்வு பார்வை ., 
எப்போது வருவார் கல்கி அவதார்...

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
 
ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டிஎன்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது,தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.
ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ஜஸீரத்துல் அரப்என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.
ஹிந்து  நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.
கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.
மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிஃராஜ்இரவில், ‘புராக்வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.
அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.
மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்..

இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

மேலும் சில குறிப்புகள்:

1. இன்று இறைவனின் வேதம் ஒன்று மனிதனின் கரம் படாமல் இருக்குமானால் அது திருகுரான் மட்டுமே, மற்ற அனைத்து வேதங்களும் மனிதனால் திருத்தி மாற்றி அமைக்க பட்டுள்ளன. உதாரணமாக பைபிள்இந்து வேதங்கள், ...திருகுரான் மட்டுமே உலக மக்களை பார்த்து பேசுகிறது. இந்த திருகுரான் உலக மக்களின் இறைவனால் கடைசி வேதமாக அருளப்பட்டது. இதற்கு முன் பைபிள் மற்றும் பல வேதங்கள் இறைவனால் அருளப்பட்டது. இந்த திருகுரான் தான் இறைவனிடம் இருந்து வந்த கடைசி வேதம்.

2. மற்ற வேதங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அருளப்பட்டது. ஆனால் திருகுரான் மட்டுமே உலக மக்களுக்காக அனைத்துநாட்டுக்கும் இறைவனால் கடைசி வேதமாக அருளப்பட்டது

3. மற்ற வேதங்கள் அருளப்பட்ட மூல மொழி இன்று நடை முறையில் இல்லை. ஆனால் திருகுரான் அருளப்பட்ட மூல மொழி அரபி மொழி இன்று நடை முறையில் உள்ளது

4. மற்ற வேதங்களின்  முதல் பிரதி (First Copy/First Print) பாதுகாக்க படவில்லை. ஆனால் திருகுரான் முதல் பிரதி பாதுகாக்கபட்டுள்ளது. ஆதலால் தான் மனிதனின் கரம் படாமல் இருக்கிறது. முதல் பிரதி பாதுகாப்பாக இருப்பதால் யாராலும் மாற்ற முடியாது

5. மற்ற வேதங்களில் பல வேறுபாடுகளைமுரண்பாடுகளை  காண முடியும். ஆனால் திருகுரானில் ஒரே ஒரு  வேறுபாடுகளையோ முரண்பாடுகளையோ  கூட காண முடியாது

6. மற்ற வேதங்கள் முழுவதையும் யாரும் மனனம் செய்யவில்லை. ஆனால் திருகுரானை அன்று முதல் இன்று வரை வாழையடிவாளையாக மனனம் செய்து பாதுகாத்து வந்துள்ளார்கள் 

7. மனிதன் இன்று face பண்ணும் மிக பிரச்சனைகளுக்கு  திருகுரான் தீர்வாக உள்ளது. உதாரணமாக தற்கொலை, மது அருந்துதல், வட்டி, வரதட்சனை, பெண் சிசு கொலை, கற்பழிப்பு, விபச்சாரம், ..etc 
இவை அனைத்திற்கும் இன்று இஸ்லாம் தீர்வை தருகிறது,,,,,,,,,,,,,,,,,,,


Please see this below 7 min vedio clip in youtube

1 comments:

uktamilan said...

மிகவும் அருமையான பதிவு
மாற்று மத சகோதரர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு!
அல்லாஹு அக்பர்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR