ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 27 August 2013

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

  • மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
  • வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.
  • மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
  • மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
  • மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
  • மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
  • மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
  • மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR