ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 31 January 2014

மஸ்கட்டிற்கு சென்ற மகனை மீட்க தாய் மனு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

மஸ்கட்டிற்கு சென்ற மகனை மீட்க தாய் மனு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி ஊராட்சி வடபாதி
கள்ளிக்காடு கிராமத்தை சார்ந்த வீராச்சாமி,சந்திரா தம்பதியரின் வசித்து
வருகின்றார்கள்.நேற்றைய முன் தினம் மதுக்கூர் தமுமுக அலுவலகத்திற்கு வந்த
சந்திரா தனது மகன் மஸ்கட் சென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுவரை எந்த
தகவலும் இல்லை இதன் காரணமாக எனது கணவர் மனநிலைப்பாதிக்கப்பட்டுள்ளார்.ஒரு
வேலை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றோம் என கண்ணீர் நிறைந்த
கண்களுடன் கூறினார்.மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை
செய்து நேற்று 27/01/2014 சகோதரி சந்திரா அவர்களை தஞ்சாவூர் மாவட்ட
ஆட்சியர் அவர்களிடம் அழைத்து சென்று மகனை மீட்ககோரி மனு
கொடுக்கப்பட்டது.மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை
மனுசந்திரா சார்பாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மனுவில் சந்திரா
கூறியிருப்பது எனது மகன் முத்துக்குமார் கடந்த 2002 ஆம் ஆண்டு மஸ்கட்
நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.பின்னர் இரண்டு முறை தபாலில் தொடர்பு
கொண்டார்.எனது மகன் கடைசியாக கடந்த 07/05/2002 தேதி வந்தது.அதன் பின்னர்
இன்றுவரை எனது மகனை பற்றி எந்தவித தகவலும் இல்லை.எனது மகனை இந்திய
தூதரகம் மூலமாக மீட்டுத்தாருங்கள் என கூறியிருந்தார்.

மனுக்களை கொடுத்துவிட்டு சந்திரா வெளியில் வரும் போது நான் எல்லோரிடமும்
எனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கச்சொல்லினேன்.யாரும் காது கொடுத்து
கேட்கவில்லை இந்த முஸ்லிம் பாய்கள் இன்று முதற்கட்டகளை கலெக்டர் ஐயாவிடம்
மனு கொடுக்க செய்து இருக்கின்றார்கள்.என பத்திரிக்கையாளர்கள் முன்னால்
கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.அவருடன் மதுக்கூர் நகர தமுமுக தலைவர்
சகோதரர் ஜபருல்லா,மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் KTM நிஷார்
அகமது,நஸாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அன்பான மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்களே! முடிந்தால் நீங்களும்
முயற்சி செய்யுங்கள் சந்திரா என்ற தாயின் மகனை மீட்க.
பெயர் :MUTHU KUMARAN/VEERASAMY

PASSPORT NO :A3949059

Thanks to: Madukkur TMMK

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR