ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 30 May 2014

தொழுகையில் ஓதக் கூடிய சிறிய அத்தியாயங்கள் சில(குறைந்தது 10) பொருளுடன்


A) குறிப்பு: தொழுகையில்
ஓதுவதற்கு ஏதுவாக
அரபி தெரியாதவர்களுக்காக
குர்ஆனின் பத்து சிறிய
அத்தியாயங்களை தமிழில் தந்திருக்கிறோம்.
தயவு செய்து சரியான
அரபி உச்சரிப்பை அரபியில் ஓத
தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்
கொள்ளவும்.
அத்தியாயம் – 103 ஸூரத்துல்
அஸ்ரி (காலம்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வல்அஸ்ர். இன்னல் இன்ஸான
லஃபீஹூஸ்ர். இல்லல்லதீன
ஆமனு வஆமிலூஸ்
ஸாலிஹாத்தி வதவாஸவ்
பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆரம்பம் செய்கின்றேன். காலத்தின்
மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன்
நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள்
ஈமான் கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக்
கொண்டு ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து மேலும்
பொறுமையைக் கொண்டும்
ஒருவருக்கொருவர்
உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர
(அவர்கள் நஷ்டத்திலில்லை)
அத்தியாயம் – 105 ஸூரத்துல் ஃபீல்
(யானை)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அலம்தர
கைஃப ஃபஅல ரப்புக பிஅஸ்ஹாபில் ஃபீல்.
அலம் யஜ்அல் கய்தஹூம் பீ தஃழ்லீலின்.
வஅர்ஸல அலைஹிம் தைய்ரன் அபாபீல்.
தர்மீஹிம் பிஹிஜாரதிம் மின்ஸிஜ்ஜீல்.
fபஜஅலஹூம் கஅஸ்ஃபிம் மஃகூல்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 105:1 (நபியே!) யானை(ப் படை)க்
காரர்களை உம் இறைவன் என்ன
செய்தான் என்பதை நீர்
பார்க்கவில்லையா? 105:2 அவர்களுடைய
சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்
கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள்
மீது அவை எறிந்தன. 105:5 அதனால்,
அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்
போல் அவன் ஆக்கி விட்டான்.
அத்தியாயம் – 106 ஸூரத்து குறைஷின்
(குறைஷிகள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
லிஈலாஃபி குரைஷின். ஈலாஃபிஹிம்
ரிஹ்லதஷ்ஷிதாயி வஸ்ஸய்ஃப்.
fபல்யஃபுதூ ரப்பஹாதல் பைத். அல்லதீ
அத்அமஹூம் மின்ஜூஇவ் வஆமனஹூம்
மின்ஹவ்ஃப்
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 106:1 குறைஷிகளுக்கு விருப்பம்
உண்டாக்கி, 106:2 மாரி காலத்துடையவும்
கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில்
அவர்களுக்கு மன
விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- 106:3
இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள்
வணங்குவார்களாக. 106:4 அவனே,
அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும்
அவர்களுக்கு அச்சத்திலிருந்தும்
அபயமளித்தான்.
அத்தியாயம் – 108 ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இன்னா அஃதய்னா கல்கவ்தர்.
fபஸல்லி லிரப்பிக வன்கர். இன்னஷானிஅக
ஹூவல் அப்தர்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 108:1 (நபியே!) நிச்சயமாக
நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை)
கொடுத்திருக்கின்றோம். 108:2 எனவே, உம்
இறைவனுக்கு நீர் தொழுது,
குர்பானியும் கொடுப்பீராக. 108:3
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ)
அவன்தான் சந்ததியற்றவன்.
அத்தியாயம் – 109 ஸூரத்துல் காஃபிரூன்
(காஃபிர்கள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்யா அய்யுஹல் காஃபிருன.
லா அஃபுது மா தஃபுதூன். வலா அன்தும்
ஆபிதூன மாஅஃபுது. வலாஅனா ஆபிதும்
மாஅபத்தும். வலா அன்தும் ஆபிதூன
மாஅஃபுது. லகும் தீனுகும் வலியதீன்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 109:1 (நபியே!) நீர்
சொல்வீராக: காஃபிர்களே! 109:2
நீங்கள் வணங்குபவற்றை நான்
வணங்கமாட்டேன். 109:3 இன்னும், நான்
வணங்குகிறவனை நீங்கள்
வணங்குகிறவர்களல்லர். 109:4 அன்றியும்,
நீங்கள் வணங்குபவற்றை நான்
வணங்குபவனல்லன். 109:5 மேலும், நான்
வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள்
அல்லர். 109:6 உங்களுக்கு உங்களுடைய
மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.'
அத்தியாயம் – 110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இதாஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹூ.
வரஅய்தன்னாஸ யத்ஹூலூன
fபீதினில்லாஹி அஃப்வாஜா. fபஸப்பிஹ்
பிஹம்தி ரப்பிக வஸ்தஃபிர்ஹூ.
இன்னஹூ கான தவ்வாபா
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 110:1 அல்லாஹ்வுடைய
உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள்
அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள்
காணும் போதும், 110:3 உம்முடைய இறைவனின்
புகழைக் கொண்டு (துதித்து)
தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம்
பிழை பொறுக்கத் தேடுவீராக –
நிச்சயமாக அவன்
'தவ்பாவை' (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்
கொள்பவனாக இருக்கின்றான்.
அத்தியாயம் – 111 ஸூரத்துல் லஹப்
(ஜுவாலை)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
தப்பத்யதா அபீலஹபின் வதப்.
மா அக்gனா அன்ஹூ மாலுஹூவமா கஸப்.
ஸயஸ்லா னாரன் தாதலகபின்.
வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப். fபீ
ஜிதிஹா ஹப்லுன் மிம்மஸத்
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 111:1 அபூலஹபின்
இரண்டு கைகளும் நாசமடைக; அவனும்
நாசமாகட்டும். 111:2 அவனுடைய
பொருளும், அவன் சம்பாதித்தவையும்
அவனுக்குப் பயன்படவில்லை. 111:3 விரைவில்
அவன் கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் புகுவான். 111:4
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்
கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
அத்தியாயம் – 112 ஸூரத்துல்
இஃக்லாஸ் (ஏகத்துவம்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ்
ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம்
யகுல்லஹூ குஃபுவன் அஹத்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 112:1 (நபியே?!) நீர்
கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:2
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3
அவன் (எவரையும்) பெறவுமில்லை;
(எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அத்தியாயம் – 113 ஸூரத்துல் fபலக்
(அதிகாலை)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்அவூது பிரப்பில் fபலக். மின்
ஷர்ரிமா ஹலக். வமின் ஷர்ரி ஹாஸிகின்
இதா வகப். வமின் ஷர்ரின்னஃப்
fபாதாத்தி பில்உகத்.
வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 113:1 (நபியே!) நீர்
சொல்வீராக: அதிகாலையின்
இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின்
தீங்கை விட்டும்- 113:4 இன்னும், முடிச்சுகளில்
(மந்திரித்து) ஊதும் பெண்களின்
தீங்கை விட்டும், 113:5
பொறாமைக்காரன்
பொறாமை கொள்ளும்
போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல்
தேடுகிறேன்).
அத்தியாயம் : 114 – ஸூரத்துந் நாஸ்
(மனிதர்கள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்அவூது பிரப்பின்னாஸ். மலிகின்னாஸ்.
இலாஹின்னாஸ். மின்ஷர்ரில்
வஸ்வாஸில் ஹன்னாஸ். அல்லதீ
யூவஸ்விஸூ fபீசுதூரின்னாஸ். மினல்
ஜின்னதி வன்னாஸ்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 114:1 (நபியே!) நீர் கூறுவீராக:
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல்
தேடுகிறேன். 114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;
114:3 (அவனே) மனிதர்களின் நாயன். 114:4
பதுங்கியிருந்து வீண்
சந்தேகங்களை உண்டாக்குபவனின்
தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல்
தேடுகிறேன்). 114:5 அவன் மனிதர்களின்
இதயங்களில் வீண்
சந்தேகங்களை உண்டாக்குகிறான். 114:6
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும்
இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR