ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம்
செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில்
ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும்
ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம்
முஸ்லிம்களுக்கு நேரடியாகவும்
மறைமுகமாகவும் இன்னல்கள்
இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர்
இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம்
செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக
1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த
தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க
முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத்
திட்டமிட்டிருந்தார். அத்திட்டம்
நிறைவேறுவதற்கு முன் னரே காலமாகிவிட்டார்.
இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள்
'பத்வா' எனும் பெயருடன்
இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத்
திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின்
ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம்
மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின்
தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்
ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால்,
இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர்
சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக்
கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும்.
இவர் ஹைதர் அலியின் மகனாவார்.
இரண்டாம் மைசூர் போரில்
இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின்
மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர்
போரில் ஈடுபட்டார்.
1790ம் ஆண்டு முதல் 1792ம்
ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர்
போரில் திப்பு தோல்வியடைந்தார்.
தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்
என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது,
திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத்
தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த
வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான்.
அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக்
குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-
ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக் கத்திற்கு எதிராக
முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால்
பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப்
புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப்
பிடிக்க ஆங்கிலேயர்கள்
எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான
அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க
முடியவில்லை.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல
பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப்
புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர்.
1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில்
தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன்.
ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ்
முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக்
கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய
தகவல்களை அறிந்து கொள்ள
ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர்.
புரட்சியாளர்களின் திட்டங்கள்
ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக்
கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன்
குரல்வளையை அறுத்துக்
கொண்டு இந்தியத் தாயின்
விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக்
கொண்டார்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத்
தலைமை வகித்து நடத்திய மக்கான் கான்,
மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள்
கைது செய்தனர். மங்களூ ருக்கு அருகில்
உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும்
1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம்
தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
தொடரும் ..
0 comments:
Post a Comment