Thursday, 11 December 2014
திசை மாறும் தூண்கள்...!
ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்தினருக்கு மாறினார்களா?
சங்பரிவார் அமைப்பினரின்
பித்தலாட்டம் அம்பலம்
ஆக்ராவில் 57 முஸ்லிம்
குடும்பத்தினர்
இந்து மதத்தை தழுவினர்
என்று நேற்று பரபரப்பாக தேசிய
ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம்
ஆகிய சங் அமைப்புகள் நடத்திய
நிகழ்வில் இந்த முஸ்லிம்
குடும்பத்தினர் இந;து மதத்தைத்
தாமே முன்வந்து இந்து மதத்தைத்
தழுவியதாக இந்த செய்திகள்
வெளியாகின.
இந்த செய்தி தவறானது என்றும்
தாங்கள்
முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57
குடும்பத்தினரும் அளித்துள்ள
பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ்
ஆப் இந்திய முதலிய
செய்தித்தாள்களில்
இன்று செய்திகள்
வெளியியாகியுள்ளன. ரேசன்
அட்டை வாங்கி தருகிறோம் என்றும்
ஆதார் அட்டை வாங்கித் தருகிறோம்
என்று காவிகள் தங்களை அந்த
நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள்
தொடர்ந்து முஸ்லிம்களாகவே இருப்பதாகவும்
கட்டாயப்படுத்தி தங்களை இந்த
நிகழ்விற்கு காவிகள் அழைத்துச்
சென்றதாக
குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும்
இந்த ஏழை முஸ்லிம்கள்
தெரிவித்துள்ளனர்.
பொய்மையை மூலதனமாக
கொண்டு செயல்படும்
சங்பரிவாரின்
இந்த பொய் பித்தலாட்டம்
ஆச்சரியப்படக்
கூடியது இல்லை. முஸ்லிம்களும்
கிறிஸ்த்தவர்களும் பண
ஆசை காட்டி மதமாற்றம்
செய்து வருகின்றனர்
என்று பேசி வரும் சங்பரிவாரின்
திருக்த்தாளம் ஆக்ராவில்
அம்பலமாகியுள்ளது.
ஏழை முஸ்லிம்களை ஏமாற்ற
அது எடுத்த
முயற்சி பிசுபிசுத்துள்ளது.
ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி கட்டாய மதமாற்றம் -ஹிந்துத்துவா வெறி செயல்
ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம்
செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!
மாநிலங்களவையில்
இன்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன்
சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,
ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்
மக்களை வலுக்கட்டாயமாக
இந்து மதத்துக்கு மாற்றும்
நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம்
மேற்கொண்டு வருவதாக குற்றம்
சாட்டினார்.
"மதமாற்றம் செய்துகொள்ள
ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்ற
னர். இதேபோல அலிகாரிலும்
கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக
மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப்
பெரிய மத மோதல்களும் கலவரங்கள்
ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர்
அளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.
இந்நிலையில் மாயாவதியின்
கருத்தை காங்கிரஸ், திரிணமூல்,
சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து,
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதமர் பதில்
அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்
ஆனந்த் ஷர்மாவும் வலியுறுத்திய நிலையில்,
குறுக்கிட்டு பேசிய சிறுபான்மையின
விவகாரங்களுக்கான முக்தர் அபாஸ் நக்வி,
இந்த மதமாற்ற விவகாரத்தில்
ஆர்.எஸ்.எஸ்.-க்
கு தொடர்பு இருப்பதாக கூறப்படும்
குற்றச்சாட்டை மறுத்தார்.
"எனக்கு தெரியவந்துள்ள
தகவலின்படி இந்த
பிரச்னை தொடர்பாக முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில
அரசால் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில
அரசு சம்பந்தப்பட்டது. மாநில அரசுதான்
அதனை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை"
என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம்
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய
குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக
கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ்.
தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால்
தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ்
வாழுபவர்களுக்கான பிபிஎல் ( BPL ) ( ஏழை)
அட்டை தருவதாக கூறி பஜ்ரங்
தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச்
சென்றதாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு தாங்கள் மதமாற்றம்
செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய
குடும்பங்களை சேர்ந்தவர்கள்
தெரிவித்துள்ளனர்.
Wednesday, 10 December 2014
டிசம்பர் 6 மதுரை வெடிகுண்டு மிரட்டல் : இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது....!!
மதுரை காவல்துறை ஆணையர்
அலுவலகத்துக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த இளம்பெண்
சரண்யாவை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர்
மசூதி இடிப்பு தினத்தன்று,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அருகே உள்ள காவல்துறை ஆணையர்
அலுவலகத்திற்கு பெண் ஒருவர்
போன் செய்து இன்னும்
சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில்
வெடிகுண்டு வெடிக்கும் எனக்
கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து,
வெடிகுண்டு நிபுணர்கள்,
மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில்
தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும்
புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார்
மேற்கொண்ட விசாரணையில்,
போனில் மிரட்டல் விடுத்தவர்
மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த
சரண்யா என தெரியவந்தது.
இவர் மீது வழக்குப்பதிவு செய்த
காவல்துறையினர்
அவரை கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
மனைவியான
அன்னை ஆயிஷா அவர்களின்
பெயரை பயன்படுத்தி நடமாடும்
வெடிகுண்டு ஆயிஷா அங்கு
நடமாடுகிறாள்,
இங்கு நடமாடுகிறாள் என்று முதல்
பக்கம் முதல் கடைசி பக்கம் வரை பக்கம்
பக்கமாக செய்தி வெளியிட்ட
ஊடகம்
இந்துத்துவா காவி பெண்
தீவிரவாதி சரண்யாவை பற்றி
உள்பக்கத்தில் கூட
செய்தி வெளியிட
மறுப்பது ஏனோ ?
நடமாடும் வெடிகுண்டு ஆயிஷா
தமிழகத்தின் பல இடங்களில்
நடமாடுகிறாள்
என்று அவதூறு கூறி வெளியில்
சென்ற முஸ்லிம்
பெண்களை சந்தேக கண்
கொண்டு பார்த்த
கொடூரத்தை முஸ்லிம்கள்
மறந்துவிட முடியாது...
அன்று நம் மீது சுமத்தப்பட்ட
கறையை துடைக்க எவ்வித மீடியாவும்
இல்லை...
இன்று தான் முகநூல் என்ற
மீடியா கிடைத்திருக்கிறது.
(அதிகப்படியாக Share
செய்யவும்...)
நன்றி : இந்நேரம
Sunday, 7 December 2014
பாபரி மஸ்ஜித் உண்மை வரலாறு
கி.பி.1526 - முதல் பாணிபட் போர்
டெல்லிக்கு அருகே (இன்றைய
ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும்
அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம்
லோடிக்கும் இடையே நடந்தது.
லோடி கொல்லப்பட்டு பாபர்
வெற்றி பெறுகிறார். இந்தியாவின்
வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப்
பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின்
தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார்.
அங்கு முழுமை அடையாமல் கிடந்த
பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின்
பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம்
லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல்
நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித்
நிலம் தொடர்பான
சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின்
ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என
கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால்
ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்
கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம்
பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும்
ஓரணியில்
திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள்.
நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள்
அப்போராட்டத்தை ஒடுக்கினாலும்,
இனி தாங்கள்
தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில்
இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை -
பிரித்தாளும்
கொள்கையை வளர்த்தெடுக்க
வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள்.
அதற்கு அவர்கள் உடனடியாக
எடுத்துக்கொண்ட ஆயுதம்தான்
அயோத்தி - பாபர் பள்ளிவாசல்
தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட
பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும்
பூஜை செய்யும்
திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும்,
பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில்
ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும்
வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம்
ஏற்பாடு செய்கிறது. இதுதான்
பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட
துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம்
நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின்
உண்மைகளைக் கூறும்
கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின்
நள்ளிரவில் பள்ளிவாசலின்
கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில்
ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது.
அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும்
பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள்
அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார்
தெரிவிக்கிறார்கள். புகார்
பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல்
தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச்
சொல்கிறார். அன்றைய
உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய
வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும்
பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை.
அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார்,
பிரதமர் நேருவின்
உத்தரவை பொருட்படுத்தாமல்,
பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய
பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர்
அமைப்பு, அது எங்களுக்குச்
சொந்தமான இடம் என்று வழக்கில்
தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம்,
இது தங்களுக்குச் சொந்தமான
இடம் என்று நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்
இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ
ஹிந்து பரிஷத்
அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக்
குழுவை முஸ்லிம்கள்
தொடங்குகின்றனர். அதே வருடம்
அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்
காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள்
வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய
பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,
பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல்
நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக
இருந்தபோது வன்முறையாளர்கள்
பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது.
உடனடியாக அத்வானி, குஜராத்தில்
சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத
யாத்திரையை நடத்தி நாடெங்கிலும்
பீதியை உண்டாக்குகிறார். ஆனால்
அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள்
நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத்
யாதவ்,
அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார்.
அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்
இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும்
திரட்டப்பட்ட மதவெறி பிடித்த,
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம்
பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது.
நாடெங்கிலும் மதக்கலவரங்கள்
நடந்து அப்பாவி மக்கள்
கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள்
பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய
காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ்
அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித்
இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய
நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன்
அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947
வரை எவையெல்லாம் யாருடைய
வழிபாட்டுத் தலங்களாக
இருந்தனவோ அவை அப்படியே தொடரும்
என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித்
நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம்
திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப்
பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது.
மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர்
மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும்
பணி தொடங்கும் என விசுவ
ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில்,
கோத்ரா சம்பவத்தைத்
தொடர்ந்து மதக்கலவரம்
வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம்
அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான
முஸ்லிம்களின் சொத்துக்கள்
அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள்
கொண்ட அலஹாபாத்
உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம்
யாருக்கு சொந்தம் என்ற
விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில்
இருந்ததா? என்று ஆய்வு செய்ய
தொல்லியல் துறைக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டது.
2009 - லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள்
விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித்
இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால்,
உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும்
மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக
நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில்
அலஹாபாத் நீதிமன்றம்,
சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின்
அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது.
சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக்
கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.
இந்து மக்களே சிந்தியுங்கள்....!
முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட
போது இந்துக்களுடன் மிக இணக்கமாக
நடந்து கொண்ட காரணத்தால்
இந்தியாவில் அவர்களால் 800 வருடம்
ஆட்சி செய்ய முடிந்தது.
கண்டிப்பாக அவர்கள் இந்து மக்களை கோபமூட்டும்
விதமாக கோவில்களையோ,
இந்து மக்களையோ அவர்கள் தாக்கி இருக்க
மாட்டார்கள்.
வழிபாட்டு தலங்கள், பெண்கள் , முதியோர் ,
குழந்தைகள் போன்றவற்றை போர் நடைபெரும் போது கூட
ஒரு முஸ்லிம் தாக்குதல் நடத்த கூடாது என
கூறி இருக்கும் போது....
ஆட்சி செய்த முகலாய
மன்னர்களா தன் குடி மக்களின் உயிர்களையும்
உடைமைகளையும், வழிபாட்டு தலங்களையும்
இடித்து இருப்பார்கள்....?
இந்து மக்களே சிந்தியுங்கள்....!
Saturday, 6 December 2014
10, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை
10ம் வகுப்பு, +2 பொதுத்
தேர்வுகளுக்கான கால
அட்டவணை வெளியிடப்பட்டது. +2 தேர்வுகள்
2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன.
மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2
பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம்
தேதி வரை முடிவடைகிறது. மேலும் 10ம்
வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச்
19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம்
தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம்
தெரிவித்துள்ளன.
10ம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 19 : மொழிப்பாடம் முதல்
தாள்
* மார்ச் 20 : மொழிப்பாடம்
இரண்டாம் தாள்
* மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 30 : கணிதம்
* ஏப்ரல் 6 : அறிவியல்
* ஏப்ரல் 10 : சமூக அறிவியல்
12ம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 4 : தமிழ் முதல் தாள்
* மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள்
* மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 10 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 13 : கலாச்சாரம், தகவல்
தொடர்பு ஆங்கிலம்,
கணினி அறிவியல், உயிரிவேதியல்
* மார்ச் 16 : வணிகவியல், புவியியல்,
மனை அறிவியல்
* மார்ச் 18 : கணிதம், விலங்கியல்,
நுண்ணறி உயிரியல், சத்துணவியல்
* மார்ச் 23 : வேதியியல் மற்றும் கணக்குப்
பதிவியியல்
* மார்ச் 27 : இயற்பியல் மற்றும்
பொருளாதாரம்
* மார்ச் 31 : வணிக கணிதம், உயிரியல்,
வரலாறு, தாவரவியல்.
Wednesday, 3 December 2014
ஆஸ்திரேலியாவிலிருந்து_வரும்_மிகவும்_அதிர்ச்சியான_ஒருதகவல்
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland ) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -
1 billion US dollars are equal to how many Indian rupees?
அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees.
இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல -
ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம் 400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ. தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்- போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
எதில் சேர்த்தி …??? ஒன்றுமே புரியவில்லை…. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது….
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே 13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???
Kingfisher விஜய் மால்யாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???
முட்டாள் இந்தியன் தலையிலா ….?
இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?
ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல - அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?
நன்றி : விமரிசனம் - காவிரிமைந்தன்
நன்றி : இந்நேரம்.காம்