மதுரை காவல்துறை ஆணையர்
அலுவலகத்துக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த இளம்பெண்
சரண்யாவை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர்
மசூதி இடிப்பு தினத்தன்று,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அருகே உள்ள காவல்துறை ஆணையர்
அலுவலகத்திற்கு பெண் ஒருவர்
போன் செய்து இன்னும்
சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில்
வெடிகுண்டு வெடிக்கும் எனக்
கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து,
வெடிகுண்டு நிபுணர்கள்,
மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில்
தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும்
புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார்
மேற்கொண்ட விசாரணையில்,
போனில் மிரட்டல் விடுத்தவர்
மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த
சரண்யா என தெரியவந்தது.
இவர் மீது வழக்குப்பதிவு செய்த
காவல்துறையினர்
அவரை கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
மனைவியான
அன்னை ஆயிஷா அவர்களின்
பெயரை பயன்படுத்தி நடமாடும்
வெடிகுண்டு ஆயிஷா அங்கு
நடமாடுகிறாள்,
இங்கு நடமாடுகிறாள் என்று முதல்
பக்கம் முதல் கடைசி பக்கம் வரை பக்கம்
பக்கமாக செய்தி வெளியிட்ட
ஊடகம்
இந்துத்துவா காவி பெண்
தீவிரவாதி சரண்யாவை பற்றி
உள்பக்கத்தில் கூட
செய்தி வெளியிட
மறுப்பது ஏனோ ?
நடமாடும் வெடிகுண்டு ஆயிஷா
தமிழகத்தின் பல இடங்களில்
நடமாடுகிறாள்
என்று அவதூறு கூறி வெளியில்
சென்ற முஸ்லிம்
பெண்களை சந்தேக கண்
கொண்டு பார்த்த
கொடூரத்தை முஸ்லிம்கள்
மறந்துவிட முடியாது...
அன்று நம் மீது சுமத்தப்பட்ட
கறையை துடைக்க எவ்வித மீடியாவும்
இல்லை...
இன்று தான் முகநூல் என்ற
மீடியா கிடைத்திருக்கிறது.
(அதிகப்படியாக Share
செய்யவும்...)
நன்றி : இந்நேரம
0 comments:
Post a Comment