ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம்
செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!
மாநிலங்களவையில்
இன்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன்
சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,
ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்
மக்களை வலுக்கட்டாயமாக
இந்து மதத்துக்கு மாற்றும்
நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம்
மேற்கொண்டு வருவதாக குற்றம்
சாட்டினார்.
"மதமாற்றம் செய்துகொள்ள
ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்ற
னர். இதேபோல அலிகாரிலும்
கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக
மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப்
பெரிய மத மோதல்களும் கலவரங்கள்
ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர்
அளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.
இந்நிலையில் மாயாவதியின்
கருத்தை காங்கிரஸ், திரிணமூல்,
சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து,
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதமர் பதில்
அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்
ஆனந்த் ஷர்மாவும் வலியுறுத்திய நிலையில்,
குறுக்கிட்டு பேசிய சிறுபான்மையின
விவகாரங்களுக்கான முக்தர் அபாஸ் நக்வி,
இந்த மதமாற்ற விவகாரத்தில்
ஆர்.எஸ்.எஸ்.-க்
கு தொடர்பு இருப்பதாக கூறப்படும்
குற்றச்சாட்டை மறுத்தார்.
"எனக்கு தெரியவந்துள்ள
தகவலின்படி இந்த
பிரச்னை தொடர்பாக முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில
அரசால் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில
அரசு சம்பந்தப்பட்டது. மாநில அரசுதான்
அதனை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை"
என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம்
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய
குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக
கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ்.
தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால்
தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ்
வாழுபவர்களுக்கான பிபிஎல் ( BPL ) ( ஏழை)
அட்டை தருவதாக கூறி பஜ்ரங்
தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச்
சென்றதாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு தாங்கள் மதமாற்றம்
செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய
குடும்பங்களை சேர்ந்தவர்கள்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment