ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 22 April 2014

....::: The Holy Quran :::... - O Prophet (Muhammad SAW)! Say to your wive

...::: The Holy Quran :::... - O Prophet (Muhammad SAW)! Say to your wive

> ....:: 33. Al-Ahzab (The Clans, The Combined Forces) - Madinah ::....
>  
>
>
>
> Ya ayyuha alnnabiyyu qul liazwajika in kuntunna turidna alhayata alddunya wazeenataha fataAAalayna omattiAAkunna waosarrihkunna sarahan jameelan
>  
> [33 : 28]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
>
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> നബിയേ, നിന്‍റെ ഭാര്യമാരോട് നീ പറയുക: ഐഹികജീവിതവും അതിന്‍റെ അലങ്കാരവുമാണ് നിങ്ങള്‍ ഉദ്ദേശിക്കുന്നതെങ്കില്‍ നിങ്ങള്‍ വരൂ! നിങ്ങള്‍ക്ക് ഞാന്‍ ജീവിതവിഭവം നല്‍കുകയും, ഭംഗിയായ നിലയില്‍ ഞാന്‍ നിങ്ങളെ മോചിപ്പിച്ച് അയച്ചുതരികയും ചെയ്യാം
>
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> O Prophet (Muhammad SAW)! Say to your wives: If you desire the life of this world, and its glitter, Then come! I will make a provision for you and set you free in a handsome manner (divorce).
>
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> ऐ नबी! अपनी पत्नि यों से कह दो कि "यदि तुम सांसारिक जीवन और उसकी शोभा चाहती हो तो आओ, मैं तुम्हें कुछ दे-दिलाकर भली रीति से विदा कर दूँ
>
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>  
>  
>
>
> Visit | Join
>
> THARJUMA READERS SURVEY 2013
>
> downloads | Google Groups | Yahoo Groups | Register | GOOGLE PLUE| facebook | Follow us on Twitter | LIVE Mekkah/MADINA TV | LIVE peace TV | you tube | FEEDBACK
> © Since 2004 | http://www.tharjuma.com  | http://www.quranintamil.com | http://www.tamiltafsir.com 
>  
> Powered by RMDA-RIMD
>  
>                                                                                                                       
>
>
>
>

....::: The Holy Quran :::... - And by the Mercy of Allah, you dealt with them

Fabima rahmatin mina Allahi linta lahum walaw kunta faththan ghaleetha alqalbi lainfaddoo min hawlika faoAAfu AAanhum waistaghfir lahum washawirhum fee alamri faitha AAazamta fatawakkal AAala Allahi inna Allaha yuhibbu almutawakkileena
 
[3 : 159]
...
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur

(നബിയേ,) അല്ലാഹുവിങ്കല്‍ നിന്നുള്ള കാരുണ്യം കൊണ്ടാണ് നീ അവരോട് സൌമ്യമായി പെരുമാറിയത്‌. നീ ഒരു പരുഷസ്വഭാവിയും കഠിനഹൃദയനുമായിരുന്നുവെങ്കില്‍ നിന്‍റെ ചുറ്റില്‍ നിന്നും അവര്‍ പിരിഞ്ഞ് പോയിക്കളയുമായിരുന്നു. ആകയാല്‍ നീ അവര്‍ക്ക് മാപ്പുകൊടുക്കുകയും, അവര്‍ക്ക് വേണ്ടി പാപമോചനം തേടുകയും ചെയ്യുക. കാര്യങ്ങളില്‍ നീ അവരോട് കൂടിയാലോചിക്കുകയും ചെയ്യുക. അങ്ങനെ നീ ഒരു തീരുമാനമെടുത്ത് കഴിഞ്ഞാല്‍ അല്ലാഹുവില്‍ ഭരമേല്‍പിക്കുക. തന്നില്‍ ഭരമേല്‍പിക്കുന്നവരെ തീര്‍ച്ചയായും അല്ലാഹു ഇഷ്ടപ്പെടുന്നതാണ്‌.

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

And by the Mercy of Allah, you dealt with them gently. And had you been severe and harsh-hearted, they would have broken away from about you; so pass over (their faults), and ask (Allah's) Forgiveness for them; and consult them in the affairs. Then when you have taken a decision, put your trust in Allah, certainly, Allah loves those who put their trust (in Him).

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi

(तुमने तो अपनी दयालुता से उन्हें क्षमा कर दिया) तो अल्लाह की ओर से ही बड़ी दयालुता है जिसके कारण तुम उनके लिए नर्म रहे हो, यदि कहीं तुम स्वभाव के क्रूर और कठोर हृदय होते तो ये सब तुम्हारे पास से छँट जाते। अतः उन्हें क्षमा कर दो और उनके लिए क्षमा की प्रार्थना करो। और मामलों में उनसे परामर्श कर लिया करो। फिर जब तुम्हारे संकल्प किसी सम्मति पर सुदृढ़ हो जाएँ तो अल्लाह पर भरोसा करो। निस्संदेह अल्लाह को वे लोग प्रिय है जो उसपर भरोसा करते है

---------- Forwarded message ----------
From: "Tharjuma Daily" <tharjumadaily@yahoo.com>
Date: Feb 12, 2014 3:17 PM
Subject: [tamil-muslim] ....::: The Holy Quran :::... - And by the Mercy of Allah, you dealt with them [4 Attachments]
To: <tamil-muslim@yahoogroups.com>
Cc:


 
....:: 3. Aal-E-Imran - The Family Of Imran ( MADINAH) ::....
 



Fabima rahmatin mina Allahi linta lahum walaw kunta faththan ghaleetha alqalbi lainfaddoo min hawlika faoAAfu AAanhum waistaghfir lahum washawirhum fee alamri faitha AAazamta fatawakkal AAala Allahi inna Allaha yuhibbu almutawakkileena
 
[3 : 159]
...
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur

(നബിയേ,) അല്ലാഹുവിങ്കല്‍ നിന്നുള്ള കാരുണ്യം കൊണ്ടാണ് നീ അവരോട് സൌമ്യമായി പെരുമാറിയത്‌. നീ ഒരു പരുഷസ്വഭാവിയും കഠിനഹൃദയനുമായിരുന്നുവെങ്കില്‍ നിന്‍റെ ചുറ്റില്‍ നിന്നും അവര്‍ പിരിഞ്ഞ് പോയിക്കളയുമായിരുന്നു. ആകയാല്‍ നീ അവര്‍ക്ക് മാപ്പുകൊടുക്കുകയും, അവര്‍ക്ക് വേണ്ടി പാപമോചനം തേടുകയും ചെയ്യുക. കാര്യങ്ങളില്‍ നീ അവരോട് കൂടിയാലോചിക്കുകയും ചെയ്യുക. അങ്ങനെ നീ ഒരു തീരുമാനമെടുത്ത് കഴിഞ്ഞാല്‍ അല്ലാഹുവില്‍ ഭരമേല്‍പിക്കുക. തന്നില്‍ ഭരമേല്‍പിക്കുന്നവരെ തീര്‍ച്ചയായും അല്ലാഹു ഇഷ്ടപ്പെടുന്നതാണ്‌.

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

And by the Mercy of Allah, you dealt with them gently. And had you been severe and harsh-hearted, they would have broken away from about you; so pass over (their faults), and ask (Allah's) Forgiveness for them; and consult them in the affairs. Then when you have taken a decision, put your trust in Allah, certainly, Allah loves those who put their trust (in Him).

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi

(तुमने तो अपनी दयालुता से उन्हें क्षमा कर दिया) तो अल्लाह की ओर से ही बड़ी दयालुता है जिसके कारण तुम उनके लिए नर्म रहे हो, यदि कहीं तुम स्वभाव के क्रूर और कठोर हृदय होते तो ये सब तुम्हारे पास से छँट जाते। अतः उन्हें क्षमा कर दो और उनके लिए क्षमा की प्रार्थना करो। और मामलों में उनसे परामर्श कर लिया करो। फिर जब तुम्हारे संकल्प किसी सम्मति पर सुदृढ़ हो जाएँ तो अल्लाह पर भरोसा करो। निस्संदेह अल्लाह को वे लोग प्रिय है जो उसपर भरोसा करते है

URDU | Translation By :Dr. Col Muhammad Ayub



Visit | Join
 
Powered by RMDA-RIMD
 
                                                                                                                     


Quran

Innama yureedu alshshaytanu an yooqiAAa baynakumu alAAadawata waalbaghdaa fee alkhamri waalmaysiri wayasuddakum AAan thikri Allahi waAAani alssalati fahal antum muntahoona
 
[5 : 91]
...
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)

மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)?

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur

പിശാച് ഉദ്ദേശിക്കുന്നത് മദ്യത്തിലൂടെയും, ചൂതാട്ടത്തിലൂടെയും നിങ്ങള്‍ക്കിടയില്‍ ശത്രുതയും വിദ്വേഷവും ഉളവാക്കുവാനും, അല്ലാഹുവെ ഓര്‍മിക്കുന്നതില്‍ നിന്നും നമസ്കാരത്തില്‍ നിന്നും നിങ്ങളെ തടയുവാനും മാത്രമാകുന്നു. അതിനാല്‍ നിങ്ങള്‍ (അവയില്‍ നിന്ന്‌) വിരമിക്കുവാനൊരുക്കമുണ്ടോ?

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

Shaitan (Satan) wants only to excite enmity and hatred between you with intoxicants (alcoholic drinks) and gambling, and hinder you from the remembrance of Allah and from As-Salat (the prayer). So, will you not then abstain?

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi

शैतान तो बस यही चाहता है कि शराब और जुए के द्वारा तुम्हारे बीच शत्रुता और द्वेष पैदा कर दे और तुम्हें अल्लाह की याद से और नमाज़ से रोक दे, तो क्या तुम बाज़ न आओगे?

மதுக்கூரில் தீ விபத்து

மதுக்கூர்
பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ,சமீபத்தில் வபாத்- ஆன அஷ்ரப் அலி அவர்களுக்கு சொந்தமான 
சாந்தி மெடிக்கலில் இன்று 22-04-2014
அதிகாலையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து
ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் கடையில் இருந்த
அனைத்து மருந்துகளும் எரிந்து பெரும் சேதம்
ஏற்பட்டு உள்ளது.இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

வாக்களிப்பது எப்படி?


ஜனநாயகத் திருவிழா'வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை…

வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

அடையாள அட்டை!

18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்கு அளிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அதைவிட முக்கியம், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். சில காரணங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை உங்களிடம் இல்லை என்றால், உங்களால் வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். இடம் பெயர்ந்து இன்னொரு தொகுதிக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் பழைய வாக்காளர் அட்டையை ஆவணமாகக் காட்டலாம்.

வாக்காளர் சீட்டு!

'எங்கே வாக்களிப்பது?' என்ற விவரத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள். இந்த வாக்காளர் சீட்டில் உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடியின் முகவரி… போன்ற விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டை அரசியல் கட்சியினரும் தருவார்கள். வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது வாக்காளர் சீட்டோ அல்லது அரசியல் கட்சிகள் தரும் 'டோர் ஸ்லிப்'போ… ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். இந்த மூன்றும் உங்களிடம் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் நிச்சயம் வாக்களிக்க முடியும். உங்கள் புகைப்படத்துடன் கூடிய அரசு ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்க முடியும். தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச்சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம். தவிர, நமக்கு ஏற்படுகிற சந்தேகங்களையும் அங்கே நிவர்த்தி செய்வார்கள்.

எங்கே வாக்குச்சாவடி?

மக்கள் அதிக தூரம் அலைய அவசியம் இல்லாமல், முடிந்தவரை அருகில் உள்ள இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள்தான் வாக்களிப்பார்கள் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஇருக்காது. கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமும் தேடலாம். epic என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சிறு இடைவெளிவிட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரம் பதிலாக வந்து விழும். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்களிக்கலாம்.

மின்னணு இயந்திரம்!

p20aகன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஐந்து மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி முன்பு இருக்கும். பேலட் யூனிட் வாக்காளர்கள் வாக்களிப்ப தற்கான மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட் பகுதியில் இருக்கும் பட்டனை தேர்தல் அலுவலர் அழுத்திய பிறகுதான் பேலட் யூனிட்டில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்.

வாக்குச்சாவடி நடைமுறைகள்!

வாக்குச்சாவடிக்குள் நீங்கள் நுழைந்ததும் முதலில் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையோ, வாக்காளர் சீட்டையோ அல்லது பூத் சிலிப்பையோ காண்பிக்க வேண்டும். இவை இல்லாதபட்சத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களில் ஒன்றைக் காட்டலாம். அந்த அலுவலர் தன்னிடம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பார். பெயரையும் பதிவு எண்ணையும் உரக்கப் படித்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மீது ஒரு கோடு போடுவார். உங்கள் பெயரைச் சொல்லும்போது அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜென்ட்கள், தங்கள் வசம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் அதைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.

இந்தச் சரிபார்த்தல் முடிந்த பிறகுதான் நீங்கள் இரண்டாவது அலுவலரிடம் செல்ல முடியும். இரண்டாவது அலுவலர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலின் மீது மையை அடையாளமாக இடுவார். அதோடு அவரிடம் இருக்கும் படிவத்தில் உங்கள் வாக்கு எண்ணை எழுதி அதில் உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்வார். கையெழுத்து போட முடியாதவர்களிடம் இடது கை கட்டைவிரல் ரேகையைப் பதிவு செய்வார். உங்களிடம் சீட்டு ஒன்றை வழங்குவார். அதை எடுத்துக்கொண்டு மூன்றாவது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அதைப் பெற்றுக்கொண்டு தன் முன்பு இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'பேலட்' என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பட்டனை அழுத்துவார். அதன் பிறகு நீங்கள் ஓட்டு போடும் மறைவிடத்துக்குச் செல்லவேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட்டில் வரிசையாக வேட்பாளரின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு எதிராக உள்ள நீல நிற பட்டனை அழுத்தவேண்டும். உடனே அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும். அதோடு 'பீப்' என்ற ஒலியும் கேட்கும். அதுதான் உங்கள் வாக்கு பதிவானதற்கான அறிகுறி. ஒலி எழுப்பிய உடனேயே மூன்றாவது தேர்தல் அலுவலரின் முன்பு இருக்கும் கட்டுப்பாட்டு கருவியில் எரிந்துகொண்டிருக்கும் 'பிஸி' விளக்கு அணைந்துவிடும்.

பார்வைத்திறனற்ற வாக்காளர்கள், துணைக்கு ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம். மற்ற யாரும் வாக்களிக்கும் இடத்துக்கு கூடுதல் நபர்களை அழைத்துச் செல்ல முடியாது. அதேபோல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது.

உங்கள் வாக்குகளை இன்னொருவர் போட்டுவிட்டால்..?

காலையிலேயே சென்று வாக்களித்துவிடுவது நல்லது. பிற்பகலில் சென்றால், உங்கள் வாக்கை வேறு யாராவது பதிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அப்படி உங்கள் வாக்கை வேறு யாரோ போட்டுவிட்டாலும், ஒரு வாக்காளராக உங்களது உரிமையை நிலைநாட்ட முடியும். 'நான் இந்த வாக்குச்சாவடியின் வாக்காளர்தான்' என்பதற்கான ஆவணத்தை வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் காட்ட வேண்டும். அந்த அதிகாரி உங்களிடம் கேள்விகள் கேட்டு சான்றுகளைச் சரிபார்ப்பார். ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் கருதினால், உங்களுக்கு 'ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு' தருவார். அது அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு. அதில் பழைய முறைப்படி முத்திரை குத்தி வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களித்த வாக்கு சீட்டை மடித்து ஓர் உறையில் போட்டு தேர்தல் அதிகாரி சீல் வைத்துவிடுவார். வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் நூலிழையில் இருந்தால், இந்த ஆய்வுக்குரிய வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை'!

'எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' என்பதைத் தெரிவிக்கும் வசதி, இதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இல்லை. 49(O) என்ற பிரிவின் கீழ் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். இது ரகசியமானது இல்லை என்பதால் கணிசமானோர் இந்தப் பிரிவின் கீழ் வாக்களிக்கத் தயாராக இருந்தும், இதைப் பயன்படுத்த அஞ்சினார்கள். இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டு விட்டது. இப்போது இதன் பெயர் நோட்டா (NOTA – None Of The Above). வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இந்த 'நோட்டா' பட்டன் இருக்கும். NOTA என்று ஆங்கிலத்திலும், 'மேற்காணும் நபர்களில் எவரும் இல்லை' என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்.

உறுதிச் சீட்டு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அச்சிடும் கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்களித்து முடித்த உடனேயே அதில் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டு வெளியில் வரும். அதில் வரிசை எண், நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை இருக்கும். அதுதான் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதற்கான ஆதாரம். அதன் பிறகு அந்த ரசீது இயந்திரத்துக்குள் மறுபடியும் சென்றுவிடும். ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மத்திய சென்னை தொகுதியில் மட்டுமே இந்தத் தேர்தலில் அறிமுகம் ஆகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்

உங்கள் விரல் முனையில்!

சுமார் 120 கோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் பிரமாண்டமான ஜனநாயக நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆளுமைகளை நாம் தேர்வு செய்கிறோம். அந்தப் பணியின் நேர்மை கருதி வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏனெனில், இந்தியா நடைபோட வேண்டிய திசையை நம் விரல்கள்தான் தீர்மானிக்கும்! -

ஆனந்த விகடனிலிருந்து

Tuesday, 15 April 2014

தேர்தல் ஆனையமே

லிபியாவின்-இடைக்கால பிரதமர் ராஜினாமா

லிபியாவில் அதிபர் கடாபி அவர்கள் கடந்த 2011-ம்
ஆண்டு கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட பிறகு,
அங்கு இதுவரை ஒரு நிலையான
அரசு அமையவில்லை. கடாபிக்குப்பின்
பிரதமராக பதவி வகித்தவர்களால்
வலுவான அரசை அமைக்க முடியவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் பொது தேசிய
காங்கிரஸ் கட்சி சார்பில்,
அப்துல்லா அல்-தின்னி என்பவர்
இடைக்கால பிரதமராக இந்த மாத
தொடக்கத்தில் பதவியேற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அப்துல்லா அல்- தின்னியின்
வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள்
சிலர், அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல்
நடத்தினர். இந்த தாக்குதலில்
அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதைத்தொடர்ந்து அவர்
தனது பதவியை ராஜினாமா செய்து,
பொது தேசிய காங்கிரஸ்
கட்சிக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், 'இந்த பதவி காரணமாக ஏற்படும்
எந்த வன்முறை சம்பவங்களையும் ஏற்க
முடியாது' என்று கூறியுள்ளார். இடைக்கால
பிரதமரின் ராஜினாமாவால்,
லிபியாவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Sunday, 13 April 2014

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்


1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக
உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின்
உள்ளே "ஹீமோகுளோபின்" என்ற வேதிப்
பொருள் உள்ளது. இந்த வேதிப்
பொருள் தான்
ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக்
கொடுக்கிறது. ஹீமோகுளோபின்த
ான் உடலில் உள்ள அனைத்துச்
செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச்
செல்கிறது.
ரத்தத்தில்ஹீமோகுளோபின்
எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய்
ஏற்படும். ரத்த சோகை, ரத்த
இழப்பு ஏற்படும்போது ரத்த
சிவப்பு அணுக்களைச்
செலுத்துவார்கள்.
2. ரத்த சிவப்பு அணுக்களின்
எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு ரத்தத்தில் 55
லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள்
இருக்கும். அதாவது சென்னையின்
மக்கள் தொகைக்கு ஏறக்குறைய
இணையான அளவுக்கு இருக்கும்.
3. ரத்த சிவப்பு அணுக்கள்
உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம்
இருக்கும். இந்த வெற்றிடத்தைச்
சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும்.
எலும்பு மஜ்ஜையில் ரத்த
சிவப்பு அணுக்கள்,
வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுக
ள் உற்பத்தியாகின்றன.
4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள்
எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள்
நான்கு மாதங்கள். ரத்தச்
சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்
பொருளான ஹீமோகுளோபின்
உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை.
கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை,
இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்
சத்து அதிகம். இவற்றை உணவில்
தினமும் சேர்த்துக்
கொண்டால் ரத்த
சோகை வராது.
5. ரத்த வெள்ளை அணுக்களின்
வேலை என்ன?
ரத்த
வெள்ளை அணுக்களை படைவீரர்கள்
என்று அழைக்கலாம். ஏனெனில்
உடலுக்குள் நுழையும் நோய்க்
கிருமிகளை முதலில் எதிர்த்துப்
போராடுபவை ரத்த
வெள்ளை அணுக்களே. இவை நோய்
எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
5.ரத்தத்தில் உள்ள
"பிளேட்லட்"அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம்
வெளியேறுவதை இயற்கையாகவே தடு
க்கும்
சக்தி"பிளேட்லட்"அணுக்களுக்கு உண்டு.
ரத்தம் வெளியேறும் இடத்தைச்
சுற்றி "கார்க்" போல்
அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக்
கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு,
கடும் மலேரியா காய்ச்சலால்
பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த
பிளேட்டலட் அணுக்களை உடலில்
செலுத்துவார்கள்.
6. பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப்
பொருள்தான் பிளாஸ்மா.
100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50
சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40
சதவீத அளவுக்கு ரத்த
சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற
அணுக்கள் 10 சதவீதம் இருக்கும்.
பிளாஸ்மாவில் தண்ணீர்.
வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள்,
ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய
காரணிகள், புரதப்
பொருள்கள் இருக்கும்.
தீக்காயங்களால் பாதிக்கப்படும்
நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும்
செலுத்துவார்கள்.
7. ரத்தத்தில் உள்ள
பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த
வெள்ளை அணுக்கள்,
பிளேட்லட்டுகள் என ரத்தத்தில்
மூன்று வகையான அணுக்கள்
உள்ளன. இவை தவிர திரவ நிலையில்
"பிளாஸ்மா" என்ற
பொருளும் உள்ளது.
8. ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்யும்
போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம்.
இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்
து லிட்டர் ரத்தம்
எல்லா உறுப்புகளுக்கும்
செல்கிறது. இப்பணியைச்
செய்யும் இதயத்
தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250
மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
9. உடலில் ரத்த பயணம் செய்யும்
தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம்
செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19
ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக்
குழாய்களுக்குள் செலுத்தும்போது,
அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்!
மோட்டார் சைக்கிளின்
சராசரி வேகத்தை விட அதிகம்.
10. மாத்திரை சாப்பிட்டவுடன்
தலைவலி அல்லது கால்
வலியிலிருந்து நிவாரணம்
கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன்,அதில்
உள்ள மருந்துப் பொருள் ரத்தம்
மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம்
செய்கிறது.
வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
11.உடலில் ரத்தம் பயணம்
செய்யும் போது எடுத்துச்
செல்வது என்ன?
எல்லாத் திசுக்களுக்கும்
ஆற்றலை எடுத்துச் செல்லும்
முக்கியப் பணியை ரத்தம்
செய்கிறது. கொழுப்புச்
சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப்
பொருள்கள் வடிவத்தில்
ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது.
திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச்
செல்வதும் ரத்தம் தான்.
12. ரத்த ஓட்டத்தின் முக்கியப்
பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத்
திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம்
எடுத்துச் செல்லும். திரும்புகையில்
திசுக்களில் இருந்து கார்பன் -
டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்
கு வழியே வெளியேற்றுவதும்
ரத்தம்தான்.
13. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள்
வெளியேற்றும் சிறுநீரின்
அளவு எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700
லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள்
சுத்திகரிப்பு செய்கின்றன. இதில்
ஒன்றரை லிட்டர்
சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
14.
தலசீமியா என்பது தொற்றுநோ
யா?
இது தொற்று நோய் அல்ல.
தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமிய
ா நோய் இருந்தால் குழந்தைக்குப்
பிறவியிலேயே இந்நோய் ஏற்பட
வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த
பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.
15. மூளையின் செல்களுக்கு ரத்தம்
செல்லாவிட்டால்
விளைவு என்ன?
மூளையின்
செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச்
செல்லுவது ரத்தம்தான்.
தொடர்ந்து மூன்று நிமிஷங்களு
க்கு ஆக்சிஜன்
செல்லாவிட்டால் மூளையின்
செல்கள் உயிரிழந்துவிடும்.
உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும்
மூளையில் கோளாறு ஏற்பட்டால்
உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
16. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13
காரணிகளில் முதல் காரணியில்
ஃபிப்ரினோஜன் என்ற
வேதிப்பொருள்தான்
ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில்
உள்ள பிளாஸ்மாவில்
இது இல்லாவிட்டால் ரத்தம்
உறையாது. ஒரு லிட்டர்
பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம்
என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன்
உள்ளது.
17.ரத்தத்தில் எத்தனை குரூப்புகள்
உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள்
உள்ளன. 'A', 'B', 'AB', 'O' (ஓ) என
நான்கு குரூப்புகள் உள்ளன.
இது நான்கைத் தவிர 'A1', 'A2' என்ற
உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. 'O'
பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும்
என்பதால்தான், 'O' குரூப் ரத்தம்
உள்ளவர்களுக்கு 'யுனிவர்சல் டோனர்'
என்று பெயர்.
18. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை,
ஆர்எச் பாசிட்டிவ் உள்ள
நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால்
நோயாளி ஆணாக இருக்கவேண்டும்
அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம்
இல்லாத பெண்ணாக
இருக்கவேண்டும்..
19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும்
பெண்களுக்கும் உள்ள
தொடர்பு என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-
மனைவி இருவரும்
ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசி
யம். கணவன்-மனைவி இருவருக்கும்
ரத்தக் காரணி (ஆர்எச்)
பாசிட்டிவ்வாகவோ அல்லது நெக
ட்டிவ்வாகவோ இருந்தால்
பிரச்சினை ஏதும் இல்லை.
மனைவிக்கு ஆர்எச்
நெகட்டிவ்வாக இருந்தால்
கர்ப்பம்
தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம்
சொல்லிவிட வேண்டும்.
20. கர்ப்பிணிக்கு ஆர்எச்
நெகட்டிவ்
ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார்
தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக்
காரணி இருந்து மனைவிக்கு நெகட்
டிவ் ரத்தக் காரணி இருந்தால்
குழந்தை பாசிட்டிவ் ரத்தக்
காரணியுடன் பிறக்க
வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக்
காரணியுடன் குழந்தை பிறக்கும்
நிலையில், அது தாயின் நெகட்டிவ்
ரத்தக் காரணியுடன் கலந்து,
தாயின் உடலில் எதிர் அணுக்கள்
உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.
21. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச்
நெகட்டிவ் என எதன்
அடிப்படையில் ரத்தக்
காரணி பிரிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த
சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும்
ஒரு வகைப் புரதம் உள்ளது.
மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற
ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச்
பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச்
நெகட்டிவ். இந்தியாவில்
பெரும்பாலானோருக்கு ஆர்எச்
பாசிட்டிவ் வகை ரத்தக்
காரணிதான்.
22. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக்
காரணி, பிறந்த
குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக்
காரணி - விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக்
காரணி இருந்து பிறக்கும்
குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக்
காரணி இருந்தால் முதல்
பிரசவத்தின் போது பெரும்பாலும்
பிரச்சினை வராது. ஆனால்
குழந்தையின் பாசிட்டிவ் ரத்த
செல்கள் தாயின்
நெகட்டிவ் ரத்த செல்களுடன்
கலந்து அடுத்த தடவை உருவாகும்
கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.
23. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக்
காரணி (ஆர்எச்), பிறக்கும்
குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக்
காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள
பெண்கள்
குறித்து மகப்பேறு மருத்துவர்கள்
அவர்களது கர்ப்ப
காலத்தின்போதே குறித்து வைத்துக்க
ொள்வது அவசியம்.
குழந்தை பாசிட்டிவ் ரத்தக்
காரணியுடன் பிறக்கும்
நிலையில்,கர்ப்பப் பையில் உருவாகியுள்ள
எதிர் அணுக்களை அழிக்க
குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள்
தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த
ஊசிக்கு "Anti D" என்று பெயர்.
24. ரத்த தானம் கொடுக்கும்
முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்)
ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம்
கொடுப்பவன் ரத்த
அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம்.
இது இயல்பான அளவில் இருக்க
வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின்
அளவைப் பார்ப்பதும் அவசியம்.
முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட
எந்த இடமாக இருந்தாலும்
தானத்துக்கு முன்பு இச்சோதனைகள்
அவசியம்.
25. யார் ரத்த தானம்
செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச்
சிகிச்சை பெறுபவர்கள்,
சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில்
இல்லாதவர்கள்,எய்ட்ஸ்
நோயாளிகள், பால்வினை நோய்
உள்ளவர்கள்,
வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய்
உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி,
சி வைரஸ்
தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப்
பழக்கம்
உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மே
ற்கொண்டவர்கள் ஆகியோர்
ரத்ததானம் செய்யக்கூடாது.
26. மருத்துவமனைகளில்
எல்லா உயிர்களையும் காப்பாற்றும்
அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின்
எண்ணிக்கை சுமார் 4.5 கோடி.
இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர்
ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம்
செய்தாலே,ரத்தத்தின்
தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.
27. தானம் கொடுத்த
பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண்
ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம்
கொடுத்த பிறகு ரத்த எடுத்த
இடத்தில் போடப்படும்
பிளாஸ்திரியை நான்கு முதல்
ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல்
இருப்பது நல்லது.
எப்போதுமே புகை பிடிக்காமல்
இருப்பது நல்லது. தானம்
கொடுத்த பிறகு,24
மணி நேரத்துக்காவது மது அருந்தாம
ல் இருப்பது நல்லது.
28. ரத்தம் தானம்
செய்வதற்கு முன் நன்றாகச்
சாப்பிடலாமா?
நன்றாக
உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம்
கழித்து ரத்தம் தானம்
செய்வது நல்லது. தானம்
செய்வதற்கு முன்பு மோர் உள்பட
அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும்
நல்லது. ரத்தம் தானம் செய்ய
10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத்
தொலைபேசி செய்ய ஆகும்
நேரத்தை விடக் குறைவுதான்.
...இரத்த சேவை மையம் - blood donors

Saturday, 12 April 2014

ஷெட்யூல் - J - ஓர் பாரவை

பல நோய்களுக்கு ஆங்கில
மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும்,
அந்த நோய்களைக் குணப்படுத்துவோம்
என்று சொல்லக்கூடாது என்றும்
இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும்
தெரிந்து கொள்ளுங்கள்.
"Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995,
'Schedule J' contains a list of 51 disease and
ailments (by whatever name described) which a
drugh may not purport to prevent or cure or make
claims to prevent or cure".
'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்
சட்டம்' 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945,
1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த
சட்டத்தில் ஷெட்யூல் - 'J' என்ற பிரிவின்
கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின்
வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த
வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின்
மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த
முடியும்!' என்றோ, 'மருந்துகளைக்
கொண்டு குணப்படுத்திக்
காட்டுகிறேன்!' என்றோ கூறுதல்
கூடாது என்று எச்சரிக்கிறது.
நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக,
அவர்கள் உயிர்களும், உடமைகளும்
காக்கப்பட வேண்டும் என்பதற்காக
நமது அரசாங்கம், ஆங்கில
மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத
நோய்கள் மொத்தம் 51
என்று மேற்சொன்ன சட்டத்தில்
ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது.
இந்த 51 வியாதிகளையும் ஆங்கில
மருத்துவர்கள் எவரும் தங்கள்
மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ,
குணப்படுத்திக் காட்டுகிறேன்
என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும்
என்று எச்சரிக்கிறது.
இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு
மட்டுமே சொந்தமானவை.
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமுமாக
புதுப்புது நோய்கள் இந்த 'லிஸ்ட்'டில் சேரும்
வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த
வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நோய்கள் 'எய்ட்ஸ், சார்ஸ்' ஆகும். சில
ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த
ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும்
இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான்
கண்டுபிடித்த நோய்கள்
ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம்
வரை ஒவ்வொன்றாக அவற்றைக்
குணப்படுத்த மருந்துகள்
இல்லை என்பதை தெளிவாக
உணர்ந்து அந்த நோய்களை அடக்கம்
செய்து கொண்டு வரும்
வேளையில் இதை மக்கள்
உணர்ந்துகொள்ள வேண்டும்
என்பதற்காகவும், அதாவது, ஆங்கில
மருந்துகளில் எந்த ஒரு மருந்தும்
ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள
ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக்
குணமாக்காது என்பதை அந்த மருத்துவம்
சர்வதேச அளவில்
ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக
அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத்
தெரியப்படுத்தவேண்டும்
என்பதற்காகவும், எனவே, ஆங்கில
மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும்,
ஆங்கில மருத்துவத்தில்
மருந்து என்பதே கிடையாது என்ற
உண்மையான காரணத்தினால்
ஷெட்யூல்-Jயில் உள்ள
நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக்
கூடாது என்பதற்காகவும்,
ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும்
குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ
மருந்துகள்
இருக்கிறது என்று கூறுவது தவறான,
ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும்
மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும்
என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக
சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில்
நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன்
ஆங்கில மருந்துகளை 'மருந்துகள் மற்றும்
அழகு சாதனங்கள் சட்டத்தின்', பிடியில்
ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம்
வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51
நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.
ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம்
வைத்தியம் பார்க்கக்
கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51
நோய்களில் விவரம் வருமாறு.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சுவலி
3. 'அப்பெண்டிஸைட்டிஸ்' என்னும் குடல்
வால் நோய்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக
புற்றுநோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ,
பெண்ணாகவோ மாற்றுவோம்
என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக்
கோளாறுகள்
16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. மூளைக்காய்ச்சல்.
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும்
சிகப்பாக்குதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக
சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. சாதாரணமாக ஏற்படும்
கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை,
தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம்
மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய்
(ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல்
சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
34. இரத்தப் புற்றுநேரய்.
35. வெண் குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. மூளை வளர்ச்சிக்குறைவு.
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்க வாதம்
41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த வயதில் தலை நரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில்
ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்குவாய்
50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள்,
சிறுநீர்ப் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம்
அடைந்து புடைத்துக் காணப்படுதல்.
ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில்
பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51
வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம்
தங்கள் மருந்துகளால் வைத்தியம்
அளித்து வருவது குற்றச்செயல்
என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக
எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும்
சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள்
நலனுக்கு எதிராகவும் ஆங்கில
மருத்துவத்தால் பகிரங்கமாகவும்,
ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற
பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக்
கொண்டும் ஆங்கில மருந்துக்
கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக்
கொண்டும் சட்ட விரோத காரியங்கள்
நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய மருத்துவச் சங்கமும் (IMA)
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC)
ஷெட்யூல் - J
பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்?
இந்தக் குற்றச் செயல்புரியும்
மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்று மக்களிடம் தவறாக அடையாளம்
காட்டிக் கொண்டிருப்பதேன்?
போலி மருத்துவத்தை விஞ்ஞானப்
பூர்வமானது என்றும்
போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக்
காரணம் என்ன? குற்றச்
செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்ட
ிருக்கக் காரணம் என்ன?
மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில
மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க
சட்டத்தை பகிரங்கமாகத்
தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக்
கொடுத்து நோயாளிகளின்
உயிர்ச்சக்தியை சாகடித்துக்
கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம்,
அம்மருத்துவத்தைச்
சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத்
துரோகச் செயலை மக்களே!
அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச்
சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற
ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட
கொடூரச் செயல் நடந்துக்
கொண்டிருக்கிறது.
மக்களே! இந்திய மருத்துவச்
சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப்
பார்க்கும் டாக்டர்கள்
மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப்
பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம்
நோய்களைத் தடுக்கவோ,
குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய
பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட
விடவில்லை.
ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள
டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள்,
கார்டியாக் (இருதய)
ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும்
குடல் சம்பந்தமான
ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட
ஸ்பெஷலிஸ்ட்டுகள்,
தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக
ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார
ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள்
அனை வரும், இன்னும்
அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள்
என்ற அடைமொழியுடன்
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள்.
மக்களே இது பற்றிய
விளக்கத்தை உங்களிடமும், மறைத்து,
அரசாங்கத்திடம் மறைத்தது ஏன்
என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.
TMC இதைப் பற்றி மக்களுக்குச்
சொல்லாமல்
இருப்பது மக்களுக்கு செய்யும்
நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள
மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா?
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப்
பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய
ஹெல்த் கவுன்சில் என்ற
அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும்
அனைத்து மருத்துவங்களும் அடங்கப்
பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க
வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின்
மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி,
அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை
ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்கள் உடல் நலன், சுகாதாரம்
போன்றவைகளுக்காக அரசாங்கம்
ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும்
அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக
முடிவதற்கும், இந்த தார்மீகப்
பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையி
லும் இறங்க வேண்டும் என்ற
சட்டப்பூர்வமான அதிகாரத்தையும்
வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல்
நலனில் அரசாங்கம்
அக்கறை கொண்டிருக்கிறது என்ற
நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில்
இழந்துவிடுவார்கள்.
அடென்லால், கால்ஸிகார்ட்,
ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
அல்லது குணப்படுத்த என்று இருதய
சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும்
அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை.
இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச்
சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல,
இருதய இயக்கத்தையே பாழாக்கும்.
அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும்
கெடும். இரத்த அழுத்தத்திற்கான
இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள்
என்பவர்கள் போலிகள் (Indian Drugs and
Cosmetics Act, 1940 Schedule-J)
சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள்
ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல்,
மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள்
என்று ஒவ்வொரு உறுப்பாக
சீரழிப்பவை.
போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள்
யார் எனில், 'எந்த டாக்டர் அதிக இரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில
மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ,
அந்த மருத்துவரே ஆவார்' என்பதாகும்.
சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த
அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய
நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள்
இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள்
இவை என்று நோயாளிகளிடம்
கூறுவாரேயானால் அவர்
ஏமாற்றி தொழில்புரியும்
போலி டாக்டராவார்.
ஆனால் ஆங்கில மருத்துவம்,
சட்டத்தை துச்சமென
மதித்து அகம்பாவத்துடன்
போலிகளுக்கு 'இருதய ஸ்பெஷலிஸ்ட்'
என்று அடைமொழியைக்
கொடுத்திருக்கிறது. இவர்கள்
தொழில் நடத்தும்
முறை எப்படி என்பதை வாசகர்களாகிய
நீங்கள் நிச்சயம்
தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின்
எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற
உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள்
ஒவ்வொருவர் ஊரிலும்
மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள்.
இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக்
காத்திருந்து வேலை செய்யக்
கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம்
ஒவ்வொருவர் உயிரும் இவர்கள்
கையிலே இருக்கிறது. இவர்களின்
வித்தியாசமான, போக்கால்தான்
இன்று ஆங்கில மருத்துவம்
போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம்
கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும்
அளவுக்கு உங்களிடையே உலாவ
விட்டிருக்கிறது.
மருந்து ஆய்வாளர்கள்
கடமை என்னவென்றால் "இருதய
நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும்
கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை;
குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி,
மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச்
சீட்டுகளை எழுதிக் கொடுக்கும்
ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின்
சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக
எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும்
மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி,
பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல்
மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில
மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள
ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக
நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள்
விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்
தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த
போலி அடைமொழிகளை உடனடியாக
நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
"உங்கள் உடல் நலன், சமுதாய நலன்
காக்கப்பட Drug Inspectors உடனடியாக
மேற்சொன்ன
நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?"
என்று கவனியுங்கள்.
இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug
Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச்
சொல்லுங்கள்.
Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக
எளிதான காரியம். உங்கள்
வீட்டு அருகாமையிலுள்ள எந்த
ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள்
விலாசத்தை முழுமையாகக்
கேட்டு அறிந்து கொள்ளலாம்.
உங்கள் நன்மைக்காக உங்கள் நலன்
காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள்
தினமும் விழிப்புணர்வுடன்
சந்தித்து விஷயங்களைச்
சொல்லிக்கொடுக்க
வேண்டும்.

Friday, 11 April 2014

மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?

விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின்
காரணமாக மோடி நாட்டின்
பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய
முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?
-அப்துல் கபூர், சேலம்.
பதில் :
விலை கொடுத்து வாங்கப்பட்ட
ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற
மாயையை ஏற்படுத்தி வருகின்றன.
அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல்
நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
எனவே மோடி ஆட்சியை பிடித்தால்
இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக
அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும்
பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால்
முஸ்லிம்கள் மத்தியில் அதிக
விழிப்புணர்வு ஏற்படும்.
பெயரளவிற்கு முஸ்லிம்களாக
வாழ்பவர்களும் உண்மை முஸ்லிம்களாக
வாழும் நிலை ஏற்படும்.
சமுதாயத்தைப் பற்றி அக் கரையில்லாமல்
வாழ்ந்த பொறுப்பற்ற முஸ்லிம்கள்
சமுதாய உணர்வு பெறுவார்கள்.
அபூஜஹில் வகையறாக்களின்
அடக்கு முறை களுக்குப் பின்னால்
இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக
இணைந்ததுபோல் அக்கிரமத்தை விரும்பாத
பெரும்பாலான இந்து சகோதரர்கள்
இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும்.
சிறிய சமுதாயத்தை ஏன் நசுக்குகிறார்கள் என
சிந்திக்கத் தலைப்பட்டு இஸ்லாத்தில்
தம்மை இணைத்துக் கொள்வார்கள்.
பாதிக்கப்படும் முஸ்லிம்கள் அறவழியில்
போராட்டம் நடத்துவது நசுக்கப்பட்டால்
இதனால் விரக்தி அடையும் மக்களில்
ஐந்து விழுக்காடு மக்கள் ஜனநாயகம்
அல்லாத வேறு பாதைக்குத் திரும்பினால்,
அவர்களை எந்த முஸ்லிம் தலைவர்களாலும்
கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
காவல்துறைக்கும் இராணு வத்திற்கும்
அஞ்சாத நிலை ஏற்பட்டு சாகத் துணிந்த
மக்களை யாராலும் ஒன்றும் செய்ய
முடியாது. மோடி வகையாறாக்களுக்கு
மூளை சிறிதளவாவது இருந்தால், இதுபோன்ற
ஆபத்தான முடிவை எடுக்க மாட்டார்கள்.
குஜராத்தைப்போல் எல்லா முஸ்லிம்களும்
இருக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த
நடந்து கொள்வார்கள்.
மன்னராட்சி நடக்கும் கற்காலத்தில் நாம்
வாழவில்லை. உலக
நாடுகளை அனுசரித்து ஆட்சி நடத்தும் காலத்தில்
நாம் வாழ்கிறோம்.
சிறுபான்மை மக்களை நசுக்கி அடக்கி ஒடுக்கும்
ஆட்சி நடத்தினால், வல்லரசுகளான கிறித்தவ
நாடுகளும், அண்டை நாடுகளான முஸ்லிம்
நாடுகளும், பொருளதாரத் தடை போன்ற
நடவடிக்கை எடுப்பது நிச்சயம்.
அப்படி நடந்தால் ஏற்றுமதி மற்றும்
இறக்குமதி நின்றுவிடும். மருந்துகளுக்குக்கூட
தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் நினைத்துப்
பார்க்க முடியாத நிலைமையை நாடு நிச்சயம்
சந்திக்கும். எரிபொருள்
தட்டுப்பாட்டால் வாகனங்கள் ஓட முடியாது.
மாட்டு வண்டியில் மோடி பாராளுமன்றம்
செல்லும் நிலை ஏற்படும். ஓட்டுப்போட்ட மக்கள்
எல்லாம் கற்காலத்து மக்களைப்போல் நவீன(?)
வசதிகளுடன் வாழும் நிலை ஏற்படும்.
குஜராத் என்ற மாநிலத்தில் நடத்தப்பட்ட
வெறியாட்டத்தை உலக நாடுகள்
சாதாரணமாக எடுத்துக்
கொண்டதுபோல் இந்திய
அரசு நடந்துகொள்வதை எடுத்துக்
கொள்ள மாட்டார்கள்.
கற்பனை செய்து பார்த்தாலே குலை நடுங்குகிறது.
தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட
பன்மடங்கு உயர்ந்து நிற்கும் பெரும்
பெட்ரோல் வளம் கொண்ட
ஈரானால்கூட இதுபோன்ற நெருக்கடிகளைச்
சமாளிக்க முடியவில்லை.
ஈரானுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைவிட
பலமடங்கு நெருக்கடிகள் பலநாடுகளால்
ஏற்பட்டு, மோடி நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தாலும்
ஆச்சரியம் இல்லை. 1900களில் உருவாக்கப்பட்ட
உளுத்துப்போன ஆர்.எஸ்.எஸ்.
கொள்கை நாட்டை அழித்து நாசமாக்கிவிட்டதை
அப்போது மக்கள் உணர்வார்கள்.
எனவே இடஒதுக்கீடு போன்ற சில பிரச்சினைகளில்
சில்லரைத்தனமாக நடக்க முடியுமே தவிர,
முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும்
பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க
முடியாது.
ஒவ்வொரு விளைவுக்கும்
எதிர்வினை உண்டு என்ற மோடியின்
பொன்மொழி நமக்கும்
பொருந்தக்கூடியதுதான். எனவே மோடியைக்
கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.
நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும்
என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறான் என்ற
தத்துவம் எக்காலத்திற்கும்
பொருந்தக்கூடியதாகும்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கையான
ஒரே நாடு, ஒரே இனம் ஒரே கலாச்சாரம்
என்பதை இவர்கள் செயல்படுத்த
விரும்பினால் இன்னும் கடுமையான
விளைவுகளை நாடு சந்திக்கும்.
இந்து மதத்தில் உள்ள
ஒவ்வொரு ஜாதிக்கும்
ஒரு கலாச்சாரம் உள்ளது. பிராமணக்
கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரின்
கலாச்சாரமாக மாற்றும் இவர்களின்
திட்டத்தை செயல்படுத்தினால்,
ஒவ்வொரு சாதியினரும்
கொந்தளித்து எழுவார்கள்.
யானைக்கு வடகலை நாமம்
போடுவதா தென்கலை நாமம்
போடுவதா என்பதற்காக கொலை விழும்
நாட்டில்
ஒரே கலாச்சாரத்தை செயல்படுத்த
விரும்பினால், அதன் விளைவுகள்
கடுமையானதாக இருக்கும்.
ஒரே இனம்
என்பது இந்துக்களை மட்டுமே கொண்ட
தேசம் என்பதாக நினைக்கமுடியாது.
ஒரே மொழிதான் இருக்க வேண்டும்.
மொழிவாரி மாநிலங்கள்
இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களின்
கொள்கை. தென்னிந்திய
மொழி பேசும் மக்கள் மீது,
இந்தி மொழி திணிக்கப்படும்.
இந்தியாவின்
ஆட்சி மொழி இந்திதான்
என்று அரசியல் சாசனம்
கூறுவதை எடுத்துக்காட்டி
எல்லா மொழியையும் நசுக்குவார்கள்.
மாநிலங்களில் பிரிவினை முழக்கம் அதிகரிக்கும்.
அனைவருக்கும் பொதுவான சிவில்
சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும்
எதிரானது அல்ல. அனைத்து இந்துக்களுக்கும்
ஒரே சட்டம் என்ற அர்த்தமும் இதில்
அடங்கியிருக்கிறது.
திருமணம், அடக்கம் செய்தல், சடங்குகள்,
வழிபாட்டு முறைகள் ஆகியன இந்துக்கள்
அனைவருக்கும் ஒரேமாதிரியாக இல்லை.
ஒவ்வொரு மாநிலத்திற்கும்,
ஒவ்வொரு ஜாதிக்கும்,
ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான
வழிமுறைகள் உள்ளன.
அனைவருக்கும் பொதுசிவில் சட்டம்
என்று பிராமணர்களுக்கான
சட்டத்தை அனைவரும் மீதும் திணிக்க முயன்றால்,
நாடு சுடுகாடாகிவிடும்.
இவர்களின் எல்லா கொள்கைகளும்
நாட்டை சுடுகாடாக்கும் நாசகாரக்
கொள்கைதான்.
எதையாவது பேசி ஆட்சிக்கு வந்துவிட்டு,
வாஜ்பாய்போல்
இன்னொரு காங்கிரஸாக
இருந்தால் நல்லது.
அதைவிடுத்து சங்பரிவாரத்தின்
கொள்கைகளை இந்திய மக்கள்
மீது திணிக்க முயன்றால்,
அனைத்து சாதியினரும்,
அனைத்து மொழிபேசும் மக்களும்,
ஒடுக்கப்பட்ட மக்களும், மதச்
சிறுபான்மை மக்களும் ஒரு சேர
கொதித்து எழுந்தால்,
அதை யாராலும் அடக்க முடியாது.
எனவே மோடிக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை.
மோடியால் நாட்டுக்கு கேடுதான் ஏற்படும்
என்பதை உணர்ந்து இந்துக்கள்
அவரை புறக்கணித்தால் அதுவும் நல்லதுதான்.
மோடியை அரியணையில் ஏற்றினால்,
சங்பரிவாரத்தின் கொள்கைக்கு அத்தோடு,
மரண அடி கொடுக்கப்படும் என்பதால்
அதன் முடிவும் நன்மையாகத்தான் இருக்கும்.

நன்றி: https://m.facebook.com/uyirmoochu?_ft_=qid.6001068193662679023%3Amf_story_key.5635016923060068199

நல்லாட்சி அமைய

Thursday, 10 April 2014

Quran

Monday, 7 April 2014

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை

இன்று அனைத்து த
தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
6 நாட்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்
மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல்
ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த
மார்ச் 29–ந்தேதி தொடங்கி 5–
ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகத்தில் 39 தொகுதியிலும்
மொத்தமாக ஆயிரத்து 318
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 198
பேர் ஆண்கள், 118 பேர் பெண்கள்,
இரண்டு பேர் அரவாணிகள்.
வடசென்னையில் அதிகபட்சமாக 53
பேரும், அடுத்தபடியாக மதுரையில் 52 பேரும்
மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாகையில் குறைந்தபட்சமாக 16
வேட்பாளர்களும், அதற்கு அடுத்தபடியாக
நீலகிரியில் 17 பேரும் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர். அதிகபட்சமாக
மதுரை, காஞ்சீபுரம் தொகுதியில் 6
பெண்கள் வேட்புமனு தாக்கல்
செய்தனர். திண்டுக்கல்லில்
ஒரு பெண் கூட வேட்புமனு தாக்கல்
செய்யவில்லை. அரவாணிகள் 2 பேர்
மதுரையில் மனு தாக்கல் செய்தனர்.
ஆலந்தூர் இடைத்தேர்தலுக்காக
மொத்தம் 19 பேர் மனு தாக்கல்
செய்துள்ளனர். அவர்களில் 16 பேர்
ஆண்கள்.
11 மணிக்கு தொடங்கும்
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை)
வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும்
அதிகாரி அலுவலகத்தில்
நடைபெறுகிறது. காலை 11
மணிக்கு வேட்புமனு பரிசீலனை தொட
ங்கி மாலை 3 மணிக்கு முடிவடையும்.
வேட்புமனு பரிசீலனையின் போது, தேர்தல்
நடத்தும் அதிகாரியுடன் உதவி அதிகாரி,
பொதுப்பார்வையாளர் உடன்
இருப்பர். வேட்புமனு பரிசீலனை நடக்கும்
இடத்திற்கு வேறு யாரும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
வேட்பு மனுக்களில் குறைபாடுகள்
இருந்தால், சரி செய்யக்கூடிய
குறைபாடுகளை, அந்தந்த
வேட்பாளருக்கு நோட்டீஸ்
கொடுத்து நிவர்த்தி செய்யப்
படும். அந்த
குறைபாடுகளை எத்தனை மணிக்குள்
நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அந்த
நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அந்த வகையில்
நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, வேட்புமனுக்களில்
குறைபாடுகளை வேட்பாளர்கள்
ஏற்கனவே நிவர்த்தி செய்து க
ொடுத்துள்ளனர்.
நிவர்த்தி செய்ய முடியாத
குறைபாடுகள் இருந்தால் அந்த
வேட்புமனுக்கள்
தள்ளுபடி செய்யப்படும்.
வேட்புமனுக்களை திரும்பப்
பெறுவதற்காக 9–ந்தேதிவரை கால
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அன்று முக்கிய கட்சிகளின்
மாற்று வேட்பாளர்கள் பலர்
வேட்புமனுக்களை வாபஸ்
பெறுவார்கள்.
இறுதிப்பட்டியல்
எலட்ரானிக் ஓட்டு எந்திரத்தின்
கட்டுப்பாட்டு எந்திரத்துடன், 4
ஓட்டு பதிவு செய்யும்
எந்திரங்களை மட்டுமே இணைக்க இயலும்.
ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில்
அதிகபட்சம் 15 வாக்காளர்களின்
பெயரை மட்டுமே சேர்க்க முடியும்.
கடைசி பட்டன் நோட்டா. அந்த வகையில்
ஒரு தொகுதியில் 64
வேட்பாளர்களுக்கும் மேலாக
போட்டியிட்டால், அங்கு எலக்ட்ரானிக்
ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த முடியாது.
மாறாக, அங்கு ஓட்டுச்சீட்டுகள்
முறை அமல்படுத்தப்பட்டுவிடும். ஆனால்
அந்த நிலை தமிழகத்தில் எந்த
தொகுதியிலும் ஏற்படவில்லை.
ஏனென்றால் எந்த
தொகுதியிலும் 64 வேட்பாளர்கள்
வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தள்ளுபடி மற்றும்
வேட்புமனு வாபஸ் பெறுதல் ஆகிய
நடவடிக்கைகளுக்கு பிறகு 9–ந்தேதி,
ஒவ்வொரு தொகுதியிலும்
எத்தனை வேட்பாளர்கள்
போட்டியிடுகிறார்கள் என்பதற்கான
இறுதிப்பட்டியல் தெரிய வரும்.
பெயர் சீட்டு
இறுதிப்பட்டியல் தயாரானதும், அதன்
அடிப்படையில் அந்தந்த
தொகுதிக்கு ஏற்ப,
ஓட்டு பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய
வேட்பாளர் பெயர்கள் அடங்கிய
சீட்டு அச்சடிக்கப்படும். அந்த
சீட்டு ஒட்டப்பட்ட
பிறகு வாக்களிப்பதற்காக அந்த
எந்திரங்கள் தயார்படுத்தப்படும்.

Sunday, 6 April 2014

HAJJ: Fifth Pillar of Islam

HAJJ - The Obligation, Mankind owes To ALLAH

"Therein are clear Memorials: 
(The first is) the Place where Abraham stood for prayers (- Maqam Ibrahim); 
(secondly,) whosoever enters it (- the valley of Bakkah) is in a state of peace and security; (thirdly,) Pilgrimage to the House (- Ka`bah) is due to
Allah from everyone of mankind who is (physically, financially and in many other ways) able and has the means to make the journey thereto. And whosoever disobeys (let him remember that) Allah is Independent of the worlds."

[3:97]

SDPI சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையின் விபரம்

02/04/2014 அன்று SDPI
தஞ்சை தெற்கு மாவட்ட
தலைவர் Z.முகமது இலியாஸ் மதுக்கூர்
செய்யத்
மாவட்டசெயலாளர் SDPI
தஞ்சை தெற்கு
மாவட்டத்தின் சார்பாக  திராவிட
முன்னேற்ற
கழகத்தின் நாடாளுமன்றம்
தொகுதியின்
வேட்பாளர் T.R.பாலு அவர்களிடம்
வைக்கப்பட்ட
கோரிக்கையின் விபரம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல்

1) 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர்
மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட செயல்
என்றும், கரசேவகர்கள் திடீரென
கூடி இடிக்கவில்லை என்றும், இந்த சதித் திட்டம்
குறித்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்,
பாஜக தலைவர் அத்வானி, அப்போதைய
உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்
ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும் என்றும்
கோப்ராபோஸ்ட் இணையத்தளம் நடத்திய
ஸ்டிங் ஆபரேசனில் தெரியவந்துள்ளது.
2) முன்னாள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி:
மேலும் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றவர்களுக
்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளை வைத்து சங்
பரிவார் அமைப்புகள் பயிற்சி அளித்துள்ள
தகவலும் தெரியவந்துள்ளது. மசூதி இடிப்பில்
பங்கேற்ற 23 முக்கிய நபர்களிடம்
3) உமா பாரதி, வினய் கட்யார்:
இவர் நிருபர் என்பது தெரியாமல் இவரிடம்
பல தகவல்களை கொட்டியுள்ளனர்
உமா பாரதி, வினய் கட்யார்,
ஆச்சார்யா தர்மேந்திரா, மகந்த்
வேதாந்தி ஆகியோர். திடீரென கர
சேவகர்கள் கூடிவிட்டதாகவும்,
இவர்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய- மாநில
அரசுகள் முயற்சிக்கும் முன்பே மசூதியை அவர்கள்
இடித்துவிட்டதாகவும் தான் நரசிம்ம ராவும்
பாஜகவும் கல்யாண் சிங்கும்
கூறி வருகின்றன. ஆனால், இது ஒரு திட்டமிட்ட
சதிச் செயல் என்றும், இதற்காக
பலருக்கும் இடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாக
வும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில்
இருந்த தலைவர்களே தெரிவித்துள்ளனர்.
4) குஜராத்தில் வைத்து இடிப்பு பயிற்சி:
அயோத்யா, பரீதாபாத், தண்டா,
லக்ளென, கோரக்பூர், மதுரா,
மோராதாபாத், ஜெய்ப்பூர்,
அவுரங்காபாத், பைசாபாத், மும்பை,
குவாலியர் ஆகிய இடங்களுக்குச்
சென்று தனது ரகசிய
விசாரணையை நடத்தி இந்த
விவரங்களை வெளியிட்டுள்ளது
கோப்ராபோஸ்ட். மசூதி இடிப்பு திட்டம் மிக
ரகசியமாக தீட்டப்பட்டதாகவும், பஜ்ரங் தள்
அமைப்பு குஜராத்தில் வைத்து 1992ம் ஆண்டு ஜூன்
மாதத்தில் இடிப்புப் பணிக்கென 38
பேருக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததாகவும்,
இந்தப் பயிற்சியை அளித்தது முன்னாள்
ராணுவ அதிகாரிகள் தான் என்றும்
தெரியவந்துள்ளது.
5) 38 பேரும் பிரவீண் தொகாடியா,
அசோக் சிங்கலும்:
பிரவீண் தொகாடியா, அசோக் சிங்கல்
உள்ளிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும்
ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட
சாதுக்கள் இந்த
பயிற்சி வகுப்புகளுக்கு வந்து பயிற்சி பெறுவோர்
இடையே பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
உயரமான கட்டடத்தில் ஏறுவது, கயிறுகள்,
சங்கிலிகளை பயன்படுத்தி கட்டடத்தில்
தொங்கியபடியே அதை உடைப்பது போன்ற
பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. லக்ஷமண்
சேனா என்ற பெயரில் இந்த 38 பேரும்
தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
6) குண்டு வைக்க தயார் நிலையில் இருந்த
சிவசேனா:
இதற்கிடையே மசூதியை லக்ஷ்ண் சேனாவால்
உடைக்க முடியாவிட்டால் பிளான்-பியும்
தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த பிளான்-
பி சிவசேனாவின் கையில் தரப்பட்டது.
அதன்படி மசூதியை இந்த சேனாவால் உடைக்க
முடியாவிட்டால் அதை டைனமைட்கள் வைத்து உடைக்க
சிவ சேனா தயார் நிலையில் வைக்கப்பட்டது.
ஆனால் முன்னாள் ராணுவத்தினரால்
பயிற்சி அளிக்கப்பட்ட லக்ஷமண்
சேனா படையே கடப்பாரை, மண்வெட்டி,
பெரிய சுத்தியல்கள் உள்ளிட்ட கருவிகளைக்
கொண்டு மசூதியை இடித்துவிட்டதால்
டைனமைட்களை உபயோகிக்க வேண்டிய அவசியம்
வரவில்லை என்று கோப்ராபோஸ்டிடம்
பேட்டி அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
7)
1990லேயே உயிர்களை வேண்டுமென்றே பலி கொடுத்து...
முதலில் 1990ம் ஆண்டு அக்டோபரில் இந்த
மசூதியை இடிக்க நடந்த முயற்சி பலன்
அளிக்கவில்லை. அப்போது மசூதியை இடிக்க
வந்தவர்கள் மீது போலீசார் சுட்டதில் சிலர்
இறந்தனர். ஆனால், இப்படி சிலர் இறந்தால்
தான் ராமஜென்ம
பூமி இயக்கத்துக்கு வலு சேரும் என்று விஎச்பியின்
தலைவர் அசோக் சிங்கல் தெரிவிதத்தாக
கோப்ராபோஸ்ட்டிம் வாம்தேவ் மகாராஜ்
தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கத்தைச்
சேர்ந்த கரசேவகர்களான
கோத்தாரி சகோதரர்கள் மற்றும்
ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங்
ஆகியோரை போலீசார் சுட்டுக் கொல்ல
சங் பரிவாரில் இருந்த சில சுயநல
ஆசாமிகளே காரணம் என்றும் அவர்
கூறியுள்ளார்.
8) வினய் கட்யார் மீது பாயும் உமா பாரதி:
கோப்ராபோஸ்ட்டிம் பேசிய
உமா பாரதி கூறுகையில், கோத்தார்
சகோதரர்களை வழி நடத்தி இடிப்பில் ஈடுபட வைத்த
வினய் கட்யார் போலீசார் சுட
ஆரம்பித்தவுடன் ஓடிவிட்டார். அவர்களைக்
காக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும்
டிசம்பர் 6ம் தேதி காலை மசூதியை எப்படியும்
இடித்தே தீருவோம் என்று கரசேவர்கள்
உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டனர்.
இந்தப் பணியை செய்தது ராம்விலாஸ்
வேதாந்தி என்பவர் ஆவார்.
உறுதிமொழி எடுத்த பின்னரே இடிப்புப்
பணி துவங்கியது.
9) நரசிம்மராவ் பெரும் உதவி:
மசூதியை இடிப்பதில் பிரதமர் நரசிம்மராவ் மிக
உதவிகரமாக இருந்ததாக வினய் கத்யார்,
பிஎல் சர்மா, சந்தோஷ் துபே,
சாக்ஷி மகாராஜ், ராம்விலாஸ்
வேதாந்தி ஆகியோர் கோப்ராபோஸ்டிடம்
தெரிவித்துள்ளனர்.
அதாவது மசூதி இடிக்கப்பட
உள்ளது தெரிந்தும் மத்தியப்
படைகளை அனுப்பாமல்
வேண்டுமென்றே அமைதி காத்து மறைமுகமாக
உதவினார் ராவ். மேலும் மசூதியை 6ம்
தேதி இடிக்கப் போவதாக அப்போதைய முதல்வர்
கல்யாண் சிங்கிடம் 5ம் தேதி இரவே மகந்த்
வேதாந்தி நேரில் தெரிவித்துவிட்டதாகவும்
இந்தப் பேட்டிகள் மூலம் தெரியவந்துள்ளது.
10) கல்யாண் சிங்கை கட்டுப்பாட்டில் வைத்த
ஜோஷி:
இதையடுத்து 6ம் தேதி காலை கல்யாண் சிங்
தனது முதல்வர்
பதவியை ராஜினாமா செய்துவிட
முடிவு செய்ததாகவும், ஆனால்
அவரை எச்.வி.சேஷாத்ரி, முரளி மனோகர்
ஜோஷி போன்ற மூத்த பாஜக தலைவர்கள்
தடுத்துவிட்டதாகவும், மசூதி முழுமையாக
இடித்து முடிக்கப்படும் வரை கல்யாண்
சிங்கை பாஜக தலைவர்கள் கிட்டத்தட்ட தங்கள்
கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததாகவும்
கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான
வீடியோ ஆதாரங்களை இன்று கோப்ராபோஸ்ட்
வெளியிடவுள்ளது.

நன்றி: Mohamed Mydeen

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR