லிபியாவில் அதிபர் கடாபி அவர்கள் கடந்த 2011-ம்
ஆண்டு கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட பிறகு,
அங்கு இதுவரை ஒரு நிலையான
அரசு அமையவில்லை. கடாபிக்குப்பின்
பிரதமராக பதவி வகித்தவர்களால்
வலுவான அரசை அமைக்க முடியவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் பொது தேசிய
காங்கிரஸ் கட்சி சார்பில்,
அப்துல்லா அல்-தின்னி என்பவர்
இடைக்கால பிரதமராக இந்த மாத
தொடக்கத்தில் பதவியேற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அப்துல்லா அல்- தின்னியின்
வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள்
சிலர், அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல்
நடத்தினர். இந்த தாக்குதலில்
அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதைத்தொடர்ந்து அவர்
தனது பதவியை ராஜினாமா செய்து,
பொது தேசிய காங்கிரஸ்
கட்சிக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், 'இந்த பதவி காரணமாக ஏற்படும்
எந்த வன்முறை சம்பவங்களையும் ஏற்க
முடியாது' என்று கூறியுள்ளார். இடைக்கால
பிரதமரின் ராஜினாமாவால்,
லிபியாவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment