கோப்ரா போஸ்ட்
இணையதளம்,
தான்
நடத்திய
ரகசிய
புலனாய்வு நடவடிக்கையை 'ஆபரேசன்
ராமஜென்ம
பூமி'
என்ற
பெயரில்
ஒளிநாடா ஒன்றை நேற்று வெளியிட்டது.
அதில்
பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த
தலைவர்கள் சிலரது பேட்டிகள் இடம்
பெற்றுள்ளன. அவர்கள் கூறியதாக
கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள முக்கிய
தகவல்கள் வருமாறு:–
* பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இந்துத்துவ
அமைப்புகளால்
முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது.
* பாபர் மசூதியை இடிக்கப்போவது பா.ஜ.க.
தலைவர்களான எல்.கே. அத்வானி,
முரளிமனோகர் ஜோஷி, அன்றைய உத்தரபிரதேச
முதல்–மந்திரி கல்யாண் சிங்
ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும்.
* திட்டமிட்டவாறு பாபர் மசூதியை இடிக்க
முடியாவிட்டால் வெடி வைத்து தகர்க்க
சிவசேனா தயார் நிலையில் வைக்கப்பட்டது.
எனினும் முன்னாள் ராணுவத்தினரால்
பயிற்சியளிக்கப்பட்ட லட்சுமண்
சேனா அமைப்பினர் கடப்பாரை,
மண்வெட்டி, சுத்தியல் போன்ற கருவிகளைக்
கொண்டே இடித்துவிட்டனர்.
இதனால் வெடி வைக்கவேண்டிய
அவசியம் இல்லாமல் போய்விட்டது.
* 1992–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5–
ந்தேதி அத்வானி, முரளி மனோகர்
ஜோஷி முன்பாக பாபர் மசூதியை இடிக்க
உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மறுநாள் (6–12–1992) பாபர்
மசூதி இடிக்கப்பட்டது.
* பாபர்
மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்ட
சில கலவரங்களில் உயிரிழப்புகள்
ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment