ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday, 6 December 2015

டிசம்பர் 6 தஞ்சை : கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத மக்கள்

டிசம்பர் 6  தஞ்சை : கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத மக்கள்



இன்று டிசம்பர் 6 காவிக்கயவர்களால் திட்டமிட்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் மீட்பு போரட்டத்தை தமுமுக  சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு சார்பில் தஞ்சாவூர் இரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக உறுப்பினர்களும் பொதுமக்களும், கலந்துகொண்டு தனது கண்டணங்களை பதிவு செய்தனர்.

















                                                  படங்கள்: சகோதரர் மதுக்கூர்ஃபவாஸ்

Saturday, 5 December 2015

பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு


பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு
💥💥💥💥💥💥💥💥💥💥💥
கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.


கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது. 

                             
                                                                                                                     நன்றி;சகோதரர்.தமிமுன் அன்சாரி


டிசம்பர் 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!

பாபர் மசூதி இந்துமதவெறியர்களால் இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. அன்று இடிக்கப்பட்ட உடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம்.


இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. இடிக்கப்பட்ட உடன் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆட்சியைப் பிடித்த இந்துமதவெறியர்கள் 2002 இல் குஜராத்தில் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்தும், அதையே இந்துத்வாவின் பரிசோதனைச் சாலை என்று பெருமை பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.
பாபர்மசூதி இடிக்கப்பட்ட பின்தான் எத்தனை கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள்! இந்து மதவெறியர்கள் அதிகார அமைப்புகளின் உதவியோடு கலவரம் செய்வதோடு இன்று அவர்களே குண்டு வைக்குமளவு முன்னேறி விட்டார்கள். இத்தகைய இந்துமதவெறி பாசிஸ்டுகளை இந்த நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகள் தண்டிக்காது என்ற உண்மையை நாம் பார்த்தது போக இன்று ஆட்சி பீடத்திலும் ஏறிவிட்டார்கள்.
கிட்டத்தட்ட  23 ஆண்டுகளாக தேசத்தின் விவாதப் பொருளாக இருந்து வரும் இந்து மதவெறி பல பிரச்சினைகளை திசை திருப்புவதற்கும் பயன்படுகிறது. காங்கிரசுக்குப் போட்டியாக ஏகாதிபத்திய விசுவாசத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்து மதவெறியர்கள் மறுகாலனியாக்கத்தை அவர்களது ஆட்சியின் போது தீவிரமாக அமல்படுத்தினர்.
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்துமதவெறியருக்கு ஆதரவாகவே இருந்தது நீதியின் அடிப்படையில் அல்ல. மறுபுறம் மதச்சார்பின்மை பேசும் காங்கிரசு முதலான கட்சிகள் மிதவாத இந்துத்வத்தை பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.
வெறுமனே மசூதியை இடிப்பது மட்டுமல்ல அனைத்து துறையிலும் இந்து ராஷ்டிர திட்டத்தை வைத்திருக்கும் இந்து மதவெறியர்கள் இன்றும் அரசியல் ரீதியான செல்வாக்கோடுதான் உள்ளனர். இதையெல்லாம் அன்றே சொன்னது புதிய ஜனநாயகம். படித்துப் பாருங்கள், இந்துமதவெறியை நிர்மூலமாக்க தோள் கொடுங்கள்!
                                                                            நன்றி:வினவு இணையதளம்
இடிக்கப் பட்டது பாபர் மசூதி அல்ல; இந்தியாவின் கலாச்சாரம்,ஒருமைப்பாடு,இறையாண்மை,பன்முகத்தன்மை

அயோத்தி பாபரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.
பாபரி மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.
ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.
பாபரி மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!
இந்துமதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்கதள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.
2005ஆம் ஆண்டு புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் வெளியிட்ட ஒரு நூலில் பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத் அமைப்புகளால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறுகிறார்.
ஆக முதலில் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பது உறுதி. இது பலரும் அறிந்ததே, ஆனால் இதன் காலம் பத்து மாதங்கள் என்பது அப்பட்டமான பொய்யாகவே பார்க்க முடிகின்றது. பாபர் மசூதி இடிப்பும், அங்கு இராமர் கோவில் கட்டும் திட்டமும், ‘ரஃகுபீர் தாஸ்’ என்பவர் 1885 ஜனவரி-16 அன்று தொடுத்த வழக்கிலிருந்தே அறியப்படுகின்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்து முயற்சித்தும், பின்னர் 1934-ம் ஆண்டு மசூதியின் முகப்பு சுவர்களை இடித்தும் தொடர்ந்தது இந்துத்துவாக்களின் குரோதச் செயல்கள். இதனடிப்படையிலே தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி அவர்களின் வெகு ஆண்டுகாலத் திட்டமாக இருந்த மசூதி இடிப்பின் மத்தியச் செயல்தான், 1949-ம் ஆண்டு சிலைகளை உள்ளே வைத்து, அங்கு இராமர் அவதாரமாக தோன்றியுள்ளார் என்பது. அதன் நீட்சியாகவும், உச்சமாகவும் நிகழ்ந்ததுதான் உலக வரலாற்றிலே கருப்பு தினமாகக் காணப்படும் டிசம்பர்-6 1992 அன்று காவி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்ட பாபரி மசூதி தகர்ப்பு. இப்படி நூற்றாண்டுகளுக்கும் மேல் திட்டமிட்டு செய்யப்பட்டு ஒன்றுதான் இந்த மசூதி இடிப்பு என்பதனை உணர வேண்டும்.
“பாபர் மசூதி தீர்ப்பானது, இந்து-முஸ்லீம் பிரச்சனை அல்ல. மாறாக இது அமைதியினை விரும்பக்கக் கூடிய, மதச்சார்பின்னைமையினை போற்றக் கூடிய, அரசியல் சட்டங்களை மதிக்கக் கூடியவர்களுக்கும், சட்டத்தை காலில் போட்டு மிதிக்கக் கூடிய, நாசகர செயலை செய்கின்றவர்களுக்கும், அநீதியாள‌ர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகும்” என்று இதன் தன்மையினை விவரித்துக் கூறுகின்றார், சிறந்த சமூக ஆர்வலரான திரு.ஹர்ஷ் மந்திர் அவர்கள்.
ஆகவே, இசுலாமற்ற தோழர்களே! பாப்ரி மசூதி இடிப்பிற்கு ஆதரவு தரும் எவரும் உண்மை தேசியவாதிகள் இல்லை என்பதனையும், மாறாக அவர்களே தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்பதனையும் நீங்கள் உணர்ந்து, நாட்டை நலம் காணச் செய்ய வேண்டும்.

மழை உருவாக்கிய ஹீரோ

வெள்ளத்தில் கர்ப்பிணி பெண் காப்பாற்றப்பட்டு பிறந்த குழந்தைக்கு காப்பற்றிய இளைஞரின் பெயரை சூட்டிய தம்பதியினர்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லுள்ளங்கள் படைத்த பலர் தாங்களே முன் வந்து உதவிகளை மெற்கொண்டு வருகின்றனர் அவற்றில் ஒன்றாக சென்னை கிரசெண்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் இளைஞர் யூனுஸ், ஊரப்பாக்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மோகன் மற்றும் அவருடய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ரா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இவர்களை இளைஞர் யூனுஸ் காப்பாற்றி பத்திரமாக‌ பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை சரியான நேரத்தில் தன் நிலையை பொருட்படுத்தாமல் மீட்ட யூனுசுக்கு நன்றி சொல்லும் விதமாக அக்குழந்தைக்கு யூனுஸ் என அக்குடும்பத்தினர் பெயர்சூட்டியுள்ளனர்

Friday, 4 December 2015

மீண்டும் ஒரு தாத்ரி!

மீண்டும் ஒரு தாத்ரி!
இப்போது
பால்வால்(ஹரியானா)!!
மாட்டின் பெயரால், மனிதனை
கொல்லும் நரபலிக் கூட்டம்!!!
மோடியின் ஆட்சியில் இந்தியாவில்
"சகிப்புத் தன்மை" மட்டுமில்லை,
வதந்தியைக் கொண்டே மக்களை
கருவறுக்கத் துடிக்கும்
"ஹிந்துவா" தீவிரவாதிகளின்
செயல் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டு
வருகின்றது.
இறைச்சி ஏற்றி வந்த லாரியை
மடக்கிய "ஹிந்துத்துவா"
தீவிரவாதிகள், அதில் மாட்டுக்கறி
இருப்பதாகவும், அது தங்களின் மத
உணர்வுகளை புண்படுத்துவதாகக்
கூறி, லாரியை நிறுத்தியுள்ளனர். லாரி ஓட்டுனர் தப்பித்து
விட்டாலும், உதவியாளர்
கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
போலிஸ் வருவதற்குள், லாரியை
சேதப்படுத்திவிட்டனர். போலிசை
கண்ட வெறியர்கள், அவர்களையும்
கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த
கலவரம் 5 மணி நேரம் நடந்ததாக
மாஜிஸ்டிரேட் மீனா
அறிவித்துள்ளார்.
போலிஸ் வன்முறை
தொடர்பாகவும், மேலும் அனுமதி
இல்லாமல் இறைச்சி ஏற்றி
வந்ததற்காகவும் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
இறைச்சியை சோதனை செய்து
பார்த்ததில், அது "ஒட்டகக்" கறி என்று
உறுதிசெய்யப்பட்டுள்ளது.
-----
"ஹிந்துத்துவா" தீவிரவாதிகளிடம்
நாம் கேட்பது:
- உங்களின் மதத்தை
புண்படுத்துவதாக பொய்யைக்
கூறி, நீங்களே சட்டத்தை கையில்
எடுக்கலாம் என்றால், இந்தியாவின்
இறையாண்மையை மதிக்காத நீங்கள்
தேச பக்தர்களா அல்லது
துரோகிகளா?
- வதந்தியைக் கொண்டு,
போலீசையும், மற்றவர்களையும்
தாக்கும் ஒரு கூட்டம், இந்தியாவின்
சகிப்புத் தன்மைக்கு
அளவுகோலா?
- பொது சொத்தை நாசம் செய்து,
இந்தியாவின் பொருளாதாரத்தை
அழிக்கும் நீங்கள் தான் , தேச
பக்தர்களா?
Ref:TheHindu/IndiaTimes

http://www.firstpost.com/video-views-home/india-video-views-home/dadri-again-haryanas-palwal-district-erupts-in-violent-clashes-over-beef-2532562.html

Thursday, 3 December 2015

சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளில் களத்தில் இறங்கிய சமுதாய சொந்தங்கள்

சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளில் களத்தில் இறங்கிய சமுதாய சொந்தங்கள்













 சென்னை பூந்தமல்லி பெரிய மசூதியில் அனைத்து தரப்பினருக்கும் 
ஜெனரேட்டர் மூலம் தண்ணீர்  வழங்கப்பட்டு வருகிறது
பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இரவு நேரத்தில் உணவு வழங்கியபோது.


இவர்கள் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்தணை புரிவோம்..

"ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
(அல்குர்ஆன் 5:32)

Wednesday, 2 December 2015

தியாகங்கள் காவி துணிகளால் மறைக்கப்படுகிறது.

DON'T FORGET TO WATCH AND SHARE


click to watch : IN YOUTUBE

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR