வெள்ளத்தில் கர்ப்பிணி பெண் காப்பாற்றப்பட்டு பிறந்த குழந்தைக்கு காப்பற்றிய இளைஞரின் பெயரை சூட்டிய தம்பதியினர்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லுள்ளங்கள் படைத்த பலர் தாங்களே முன் வந்து உதவிகளை மெற்கொண்டு வருகின்றனர் அவற்றில் ஒன்றாக சென்னை கிரசெண்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் இளைஞர் யூனுஸ், ஊரப்பாக்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மோகன் மற்றும் அவருடய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ரா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இவர்களை இளைஞர் யூனுஸ் காப்பாற்றி பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை சரியான நேரத்தில் தன் நிலையை பொருட்படுத்தாமல் மீட்ட யூனுசுக்கு நன்றி சொல்லும் விதமாக அக்குழந்தைக்கு யூனுஸ் என அக்குடும்பத்தினர் பெயர்சூட்டியுள்ளனர்
0 comments:
Post a Comment