ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday, 11 December 2013

துபாய் வேலைக்கு ......

துபாய் வேலைக்கு முயற்சிப்பவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள லிங்கில் உங்கள்
Resumeவை பதிவேற்றம் செய்து வேலை தேடிக்கொள்ளலாம்.
http://uae.dubizzle.com/jobs/ இது ஒரு இலவச சேவை தளம். நீங்கள் உங்கள்
பெயர்,கல்வி தகுதி,அனுபவம் இதை குறிப்பிட்டு நீங்களே
உங்களுக்கு விளம்பரம் கொடுக்க முடியும்(இலவசம்).வேலை கொடுக்கும்
நிறுவனத்தினர் யாருக்காவது உங்கள் புரஃபைல் கண்ணில் பட்டால் உங்களை தேர்வு
செய்ய/ஆன்லைன் இன்டெர்வியூக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கும். இதில்
ஒவ்வொரு முப்பது நிமிடமும் புதிது புதிதாக வேலை வாய்ப்பு குறித்த
விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.இது 24*7. செய்ய வேண்டியது : *
தினமும் வரும் விளம்பரங்களை பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் துறை
சம்பத்தப்பட்ட விளம்பரம் வரும்போது விண்ணப்பியுங்கள். * வாரம்
ஒருமுறையாவது உங்களுக்கு நீங்களே விளம்பரம் கொடுத்துக்கொள்வது
நன்று. * உங்கள் Resume ல் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடவும். தவிர்க்க
வேண்டியது : * உங்கள் படிப்பு,அனுபவத்திற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு
விண்ணப்பிக்க
வேண்டாம். * வேலை வாய்ப்பு விளம்பரத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்றிருக்கும்,உங்களுக்கோ இரண்டு ஆண்டுகள் மட்டுமே
அனுபவம் இருக்கும்.அப்படி இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்க வேண்டாம். *
சில விளம்பரங்களில் UAE ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக தேவை என
இருக்கும்.அப்படிப்பட்ட வேலைகளுக்கு உங்களிடம் UAE DL இருந்தால் மட்டும்
விண்ணப்பியுங்கள்.இல்லையென்றால் வேண்டாம்.எந்த நிறுவனமாவது DL பற்றி
கேட்டிருந்தால் அவர்கள் உங்களுக்கு கார் கொடுக்க இருக்கிறார்கள்/உங்களிடம்
கார் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். *
இந்தியாவில் இருந்துகொண்டு இங்கு நடக்கும் 'Walk In' இன்டெர்வியூக்கு
விண்ணப்பிக்க வேண்டாம். *'Walk In' இன்டெர்வியூவானது அமீரகத்தில் ஒரு நிறுவனத்தில்
பணிபுரிந்துகொண்டே இன்னொரு நிறுவனத்திற்கு மாற இருப்பவர்களுக்கும்,அங்கு
டூரிஸ்ட் & விசிட் விசாவில் போய் வேலை தேடுபவர்களுக்குமானது. * சில
விளம்பரங்களில் குறிப்பிட்ட நாட்டவர்கள் மட்டுமே வேலைக்கு தேவை என
கேட்டு இருப்பார்கள்.எ.கா: பிலிப்பைன்ஸ் நாட்டவர் தேவை/எகிப்து நாட்டவர்
தேவை என கேட்டிருப்பார்கள்.அது போன்ற நிறுவங்களுக்கு விண்ணப்பம் அனுப்ப
வேண்டாம். எச்சரிக்கை தேவை: * இது இலவச இணையதள சேவை ஆகையால் ஒருசிலர்
போலி நிறுவங்கள் பெயரில்
விளம்பரம் கொடுத்திருப்பார்கள்.அவர்களிடம் எச்சரிக்கையாய்
இருக்கவும்.உங்களிடம் தொலைபேசி/ஆன்லைன் மூலம் சில நேரம் இன்டெர்வியூகூட
நடக்கலாம்.அதுவரை ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு
காரணத்தை சொல்லி உங்களிடம் பணம் கேட்டால் நீங்கள் உஷாராகிவிட வேண்டும். *
ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் உங்களுக்கு விசா கட்டணத்தை
வேலை கொடுக்கும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.ஊரில் இருக்கும் உங்களிடம் எந்த
நிறுவனமும் விசா கட்டணத்தை அனுப்ப சொல்லி கேட்க்காது * சில நிறுவனங்கள்
உங்களுக்கு விமான டிக்கெட் அனுப்பி வைப்பார்கள்.சிலர்
விசா மட்டும் அனுப்பி உங்கள் செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொண்டு வர
சொல்லுவார்கள்.இங்கு வந்ததும் அந்த விமான டிக்கெட் பணத்தை நீங்கள் திரும்ப
பெற்றுக்கொள்ளலாம். * அதை விடுத்து விமான டிக்கெட் எடுக்க ஊரில்
இருக்கும் உங்களிடம் யாரேனும்
பணம் அனுப்ப சொன்னால் அவர்களை நம்ப வேண்டாம்.நிச்சயம் அந்த நிறுவனம்
போலியாக இருக்கும். இது போன்ற போலி நிறுவங்களும்,எமாற்றுக்காரகளும் இங்கு
மிகமிக சொற்பமே.ஒரு
எச்சரிக்கைக்காகத்தான் அதை சொன்னேன்.பயப்படாமல் முயற்சி செய்யுங்கள்!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR