
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்... மேலும்
விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மலேசியாவின் மிக முக்கியமான தினசரி பத்திரிக்கையான "ஸ்டார்" இன்று வெளியிட்டுள்ள செய்தித்தாளில் முன்பக்கம் "ஆர்.ஐ.பி எம்ஹெச்370" என்று வெளியிட்டுள்ளது.அதன் பின்புறம் மறைந்த பயணிகளின் பெயர் சிறிய எழுத்துகளில் அச்சிட்டுள்ளது...