1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது ?
போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)
2.பஜ்ர் நேரத்தில் குர் ஆன் ஓதுவதினால் என்ன சிறப்பு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான் ?
பஜ்ர் தொழுகையில் ஒதக்கூடிய குர் ஆன் நமக்கு மறுமையில் சான்று கூறுவதாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.( அல்குர் ஆன் 17 : 78)
"நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.:
3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கண் தெரியாத ஓர் சஹாபி பங்கு சொன்னார்.அவரின் பெயர் என்ன
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலி அவர்கள்
0 comments:
Post a Comment