1.பிர் அவ்னின் உடலை மறுமை நாள் வரையில் பாதுகாப்பேன் என அல்லாஹ் கூறும் வசனம் எது.
"உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். ( Al Quran 10 :92 ) "
2.இல்லிய்யின் என்றால் என்ன ?
இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?அது (செயல்கள் )எழுதப்பட்ட ஏடாகும்." ( Al Quran 83: 18-20 )
3.உங்கள் வீடு அல்லாத மற்றவர்களுடைய வீட்டில் நுழையும் போது எவ்வாறு நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! 'திரும்பி விடுங்கள்!' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.(Al Quran 24 : 28)
யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.(Al Quran 24 : 29 )
யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.(Al Quran 24 : 29 )
0 comments:
Post a Comment