ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday 29 July 2013

ZAMZAM WATER


In All My Dear Brothers And Sisters ...

Do u know the miracles of ZAMZAM
WATER?
ZamZam water level is around 10.6
feet below the surface. It is the
miracle of Allah that when Zam Zam
...was pumped continuously for more
than 24 hours with a pumping rate
of 8,000 liters per second, water
level dropped to almost 44 feet
below the surface,
BUT WHEN THE PUMPING WAS
STOPPED, the level immediately
elevated again to 13 feet after 11
minutes. 8,000 liters per second
means that 8,000 x 60 = 480,000
liters per minute 480,000 liters per
minutes means that 480,000 x 60 =
28.8 Million liters per hour And
28.8 Million liters per hour means
that 28,800,000 x 24 = 691.2
Million liters per day So they
pumped 690 Millions liters of
ZamZam in 24 hours, but it was re-
supplied in 11 minutes only.
There are 2 miracles here, the first
that ZamZam was re-filled
immediately, & the second is that
Allah Holds the extra-ordinaril y
powerful Aquifer for not throwing
extra ZamZam out of the well,
otherwise the world will SINK.
It is the translation of the word
ZamZam, which means Stop!!!!!!!!!!!!
Stop !!!!!!!!!!!!!!! said by Hajirah Alaih
As Salaam.
Zimam is an Arabic word, it is the
rope / REIN attached to bridle or
noseband & it is used / pulled to
stop the running animal.
Zamzam water 
has no colour or smell, but it
has a distinct taste.

சோமாலிய முஸ்லிம்களின் இப்தார்

இது சோமாலிய முஸ்லிம்களின் இப்தார் ( நோன்பு திறக்கும் நேரம்) உணவு.



யா அல்லாஹ் !இவர்களுக்கு நீ நல்ல உணவை அளிப்பாயாக. (ஆமீன்)

இஃதிகாஃப்


இஃதிகாஃப்
2025. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!"
Volume :2 Book :33
2026. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
Volume :2 Book :33
2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.
Volume :2 Book :33
2028. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.
Volume :2 Book :33
2029. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
Volume :2 Book :33
2030. & 2031. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்.
Volume :2 Book :33
2032. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
Volume :2 Book :33
2033. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33
2034. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா(ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், னஸனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பிவிட்டாக்hள். ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33
2035. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்" எனக் கூறினார்கள்.
Volume :2 Book :33
2036. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ஆம்' நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், 'எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்' எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்' என்று விடையளித்தார்.
Volume :2 Book :33
2037. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் மனைவியர்களில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சிலவேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.
Volume :2 Book :33
2038. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அவசரப்படாதே!" நானும் உன்னோடு வருகிறேன்" என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, 'இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!' எனக் கூறினார்கள். அவ்விருவரும் 'ஸுப்ஹானல்லாஹ் - இறைத்தூதர் அவர்களே!" என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்" என்று தெளிவுபடுத்தினார்கள்.
Volume :2 Book :33
2039. அலீ இப்னு ஹுஸைன் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது ஸஃபிய்யா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் திரும்பிச் செல்லும்போது அவருடன் நபி(ஸல்) அவர்களும் நடந்தனர். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் அவர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர் கூர்ந்து பார்த்ததும் அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, 'இங்கே வா! இவர் ஸஃபிய்யா! நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்' எனக் கூறினார்கள்.
ஸஃபிய்யா(ரலி) இரவு நேரத்திலா நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்? என்று நான் சுஃப்யானிடம் கேட்டேன். அதற்கவர் 'இரவல்லாமல் வேறென்ன?' என்று விடையளித்தார் என்று அலீ இப்னுஅப்தில்லாஹ் கூறுகிறார்.
Volume :2 Book :33
2040. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் எங்கள் பொருட்களைச் சேகரித்துக் கொண்டோம். அப்போது எங்களுடன் வந்த நபி(ஸல்) அவர்கள், 'யார் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் தாம் இஃதிகாஃப் இருந்த இடத்திற்குச் செல்லட்டும். நிச்சயமாக நான் இந்த (லைலத்துல் கத்ர்) இரவைக் கனவில் கண்டேன். ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்வதாகக் கண்டேன்' எனக் கூறினார்கள். அவர்கள், தாம் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றதும் வானத்தில் மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! அன்றைய தினம் கடைசி நேரத்தில் வானத்தில் மேகம் திரண்டது. (அன்றைய பள்ளிவாயில் பேரீச்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மூக்கிலும் மூக்கின் ஓரங்களிலும் ஈரமான களிமண்ணின் அடையாளத்தை கண்டேன்.
Volume :2 Book :33
2041. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி தந்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப்(ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபொழுது நான்கு கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாப் இருந்தார்கள்.
Volume :2 Book :33
2042. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்!" என்று உமர்(ரலி) கூறினார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'உம் நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள். உமர்(ரலி) ஓர் இரவு இஃதிகாஃப் இருந்தார்.
Volume :2 Book :33
2043. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் உமர்(ரலி) நேர்ச்சை செய்திருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
Volume :2 Book :33
2044. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33

சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அபாய எல்லைக்குள் நுழைகின்றன


சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா  நாடுகள், எகிப்திய ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்த இராணுவப் புரட்சிக்குத் தமது எண்ணெய் வருமானத்தை அள்ளி இறைத்திருக்கின்றன. இதன் மூலம் இஸ்ரேலிற்கு பிரயோசனம் தருகின்ற விதத்தில், மற்றொரு கொலைக்களமாக எகிப்தை மாற்றுவதற்கு இவை வழி செய்துள்ளன.
புகழ் பூத்த அரபு வசந்தம் மூலம், ஆறு தசாப்த இராணுவ சர்வதிகார ஆட்சிக்கு முடிவு கண்ட பிறகு உருவான மூர்ஸி தலைமையிலான ஜனநாயக    லதீப் பாரூக்
அரசாங்கத்தை, இராணுவம் பதவி கவிழ்த்திருக்கிறது. இராணுவப் புரட்சி நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் சவூதி மன்னர் அப்துல்லாஹ், எகிப்திய பாதுகாப்பமைச்சரும், இராணுவத் தளபதியுமான அப்துல் பதாஹ் அல்- ஸிஸிக்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து நடக்கின்ற நிகழ்வுகள், எகிப்தில் குழப்ப நிலையையும், இரத்தக் களரியையும் உருவாக்குவதற்கான துருப்புச் சீட்டாக எகிப்திய இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளதையே தெளிவுபடுத்துகின்றது.  
இராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால பொம்மை ஜனாதிபதி அத்லி மன்ஸூரிற்கு, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலராகத் தன்னை வர்ணித்துக் கொள்கின்ற சவூதி மன்னர் அப்துல்லாஹ் அனுப்பியுள்ள வாழ்த்துக் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
“எகிப்திய வரலாற்றின் முக்கியமான இக்கட்டத்தில், அதன் தலைமைத்துவத்தைத் தாங்கள் ஏற்றிருக்கிறீர்கள் என்ற வகையில், என் பெயரிலும், சவூதி அரேபிய மக்கள் சார்பிலும், தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வாழ்த்துவதன் மூலம், தங்கள் தோள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவு செய்து, எமது எகிப்திய சொந்தங்களின் எதிர்ப்பார்ப்புக்களை எய்தும் வகையில் செயற்படுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
இதே நேரம், ஜெனரல் அப்துல் பத்தாஹினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இராணுவப் படையினருடனும் நாம் உறுதியாகக் கைகுழுக்கிக் கொள்கின்றோம். இவர்கள் இம்முக்கியமான தருணத்தில், எகிப்தை இருண்ட குகையில் இருந்து பாதுகாத்திருக்கிறார்கள். எகிப்துக்கு ஏற்பட இருந்த அபாயத்தின் பரிமாணத்தையும், அது ஏற்படுத்த இருந்த விளைவுகளையும் இறைவன் மாத்திரமே அறிவான். சகல தரப்பினரது உரிமைகளையும் அரசியல் செயன்முறையின் ஊடாகப் பாதுகாப்பதற்கான ஞானமும், மாற்றமும் இம்மனிதர்கள் மூலமாகவே உருவானது”.         
சவூதியில் சர்வதிகார ஆட்சியை நடாத்திக் கொண்டு, சவூதி மக்கள் சார்பாக பேசுவதாக சவூதி மன்னர் கூறிக்கொள்வதே ஏற்றுக்கொள்ள இயலாதது. முஸ்லிம் நாடொன்றில் குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாம் விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு,    அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக அவர் கூறியிருப்பதும் கேலிக் கூத்தானதுதான்.
இராணுவப் புரட்சி இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள், எகிப்திய இராணுவத் தளபதி, அப்துல் பத்தாஹ் அல்- ஸிஸி, மூர்ஸி தலைமையிலான சட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாநாயக அரசை, இராணுவ சதி மூலம் கவிழ்ப்பதற்குரிய நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கிய சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு இராச்சிய அதிபர் கலீபா பின் ஸைத் நஹ்யானிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் மிகவும் வருத்தம் தருகின்ற விடயம் யாதெனில், இஸ்லாம் மற்றும் ஜனநாயகத்திற்கெதிரான சதி, இரண்டு புனிதத் தளங்களின் காவலர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவரினால், நிதி வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமைதான்.
இது தொடர்பில், DEBKA என்ற வாராந்தப் பத்திரிகை கடந்த 04.07. 2013 வியாழக்கிழமை அன்று பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “சவூதி மற்றும் டுபாய் என்பவற்றின் புலனாய்வு மற்றும் நிதி ரீதியான உதவிகள் இல்லாமல், எகிப்திய இராணுப்புரட்சி சாத்தியமாகி இருக்காது. சவூதியும், ஐக்கிய அரபு இராச்சியமும் பணத்தை எகிப்திய இராணுவ ஜெனரல்களின் கால்களில் குவித்தனர். லிபியா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அரபு வசந்தத்தை இவை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போன பிறகு, அரபு வசந்தம் குறித்து இவ்வாறுதான் இவை முதன் முதலில் கதைத்திருக்கின்றன”.                            
கெய்ரோவில் வெற்றிகரமான இராணுவப் புரட்சியை மெற்கொண்டதன் மூலம், 2011 இல் தனது நண்பர் ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டமைக்காக தற்போத் சவூதி மன்னர் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். சவூதி அரேபியாவும், வளைகுடா நாடுகளும், தமது அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைத் திருப்தி செய்வதற்காக இஸ்லாத்தை ஒடுக்கவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக செயற்பட்டும் வருகின்றன.
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சகோதரத்துவ அரசாங்கம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டமை, நீண்டகால ரீதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.
கிட்டிய எதிர்காலத்தில் தெற்கெல்லையில் இருந்து வருகின்ற, இராணுவ ரீதியான அபாயங்களை தற்போதைக்கு இஸ்ரேல் சந்திக்காது என்று சொல்லலாம். சகோதரத்துவ அமைப்பின் அதிகாரத்தின் மூலம் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றிருந்த ஹமாஸ் அமைப்பு, தற்போது சீரியஸான பின்னடைவுகளை சந்தித்துள்ளது.
எவ்வாறாயினும், நீண்ட காலத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க, இஸ்ரேல், சவூதி, மற்றும் வளைகுடா நாடுகள் பல்வேறு அபாயகரமான விளைவுகளையே சந்திக்கப் போகின்றன.
சவூதி மற்றும் வளைகுடா நாடுகள் தமது செல்வச் செருக்கில் மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றன. இறையருளின் மூலம் கிடைத்த தமது எண்ணெய் வளங்களை இத்தகைய நாசகரமான நடவடிக்கைகளுக்கே அவை உபயோகிக்கின்றன. வறுமையில் வாடி, வதங்கிய தமது கடந்த காலத்தை அவை மறந்து விட்டன. அறுபது ஆண்டு கால சர்வதிகாரத்திற்குப் பிறகு மிக அண்மையில்தான், எகிப்தியர்கள் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். தற்போது மீண்டும் ஓர் இராணுவ ஆட்சிக்குள் தம்மைத் தள்ளிவிட்ட இச்சக்திகளை எகிப்து மக்கள் மன்னிப்பார்களா என்பது சந்தேகமே!
சவூதியும், வளைகுடா நாடுகளும் இதன் மூலம் தமக்கு அபாயகரமானதொரு அத்தியாத்தை  திறந்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அறை நூற்றாண்டுக்கு முன், அரபுலகில் மசகு எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. அரபிகள் கல்வியறிவின்றி, ஏழ்மையிலும், மிகவும் பின் தங்கிய நிலையிலும் உலகின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சுத்தமான குடிநீரோ, பாதைகளோ, பாடசாலைகளோ, வீதிகளோ, ஏனைய அத்தியவசியப் பண்டங்களோ அவர்களுக்கு போதியளவில் கிடைக்கவில்லை.  
இயற்கையாக, இறையருளால் கிடைத்த எண்ணெய் வளத்தின் மூலமே அரபுலகு இன்றிருக்கின்ற வளர்ச்சியை எய்தியது. இதற்காக அவர்கள் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இத்தகைய அருள்களை வழங்கிய இறைவனை இன்று அவர்கள் மறந்து செயற்படுவதாகவே தோன்றுகிறது.
சவூதி அரேபியா இன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அடிவருடி நாடாகத் திகழ்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய- இஸ்ரேலிய சக்திகளின் முஸ்லிம் உலகின் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கும், மில்லியன் கணக்கானவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் சவூதி அரேபியா சோரம் போய் இருக்கிறது.
எகிப்தின் தற்போதைய நிகழ்வுகளால் பிரயோசனம் அடையப் போகின்ற பிரதான சக்தி இஸ்ரேல்தான். டோம் ஹெய்டன் குறிப்பிட்டது போன்று, தற்போதைய நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளை அபாயம் சூழந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள இவை, தமது வரையறைகளைத் தாண்டியமைக்கான விலையை விரைவில் கொடுக்கத்தான் போகின்றன.
 
gsm ziad
-------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait

creation of Human-- power point show



 A journey of faith through
creation of Human
power point show
Must see it!



 டவுன்லோட் செய்ய...
தமிழில்

Friday 26 July 2013

துவாக்கள்

திருக்குர்ஆனில் உள்ள துவாக்கள்


திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசையங்களும்,துவாக்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும் வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற  துவாக்கள் உள்ளன அவற்றுள் சில


துவாக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" .  (2:127)


رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا  وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."  (2:128)



رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் 

தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. 

இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் 

காத்தருள்வாயாக!". (2:201)

 رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِين

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!"  (2:250)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! (25:74) 

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

 "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"  (2:286)


رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ 

الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!  (3:8)

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த 

சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். 

நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்".  (3:9)


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ


"எங்கள் இறைவனே!  நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; 

எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் 

வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!" (3:16)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!"  (3:53)


 ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا 

عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் 

வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை

 உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக 

எங்களுக்கு நீ உதவி புரிவாயாக".  (3:147)


رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" .  (3:191)

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை

 நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி 

செய்வோர் எவருமில்லை!" .  (3:192)


رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا 

فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!".  (3:193)

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ 

تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.  (3:194)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" .  (7:23)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" .  (7:47)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."  (14:38)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் 

கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" .  (14:41)

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" .  (18:10)

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள்

 குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! 

கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" .  (23:109)


رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا 
سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!  (40:7)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا 

غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

 "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" .  (59:10)

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"  (60:4)

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ



"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி

 வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் 

பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" .  (66:8)


رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் (7:89)

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! 

நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் (44:12)

நபிகள் நாயகம் செய்த துவாக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு…….
ஏகஇறைவனின் திருப்பெயரால் ….
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
இதன் பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ 3355
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
இதன் பொருள் :
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.
இதன் பொருள் வருமாறு:
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: நஸயீ 1327
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165

சாப்பிடும் போதும், பருகும் போதும்
பி(இ)ஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா
இதன் பொருள் :
தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ஆதாரம்: புகாரி 5858
அல்லது
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்
இதன் பொருள் :
உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல. ஆதாரம்: புகாரி 5459
அல்லது
அல்ஹம்து லில்லாஹ்
என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915
உணவளித்தவருக்காக
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
இதன் பொருள் :
இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 3805
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396
அல்லது
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்: புகாரி 5165, 3283
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
பி(இ)ஸ்மில்லாஹ்
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3280, 5623
கோபம் ஏற்படும் போது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்
இதன் பொருள் :
ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282
அல்லது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3276
கழுதை கணைக்கும் போது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3303
கெட்ட கனவு கண்டால்
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 6995
நோயாளியை விசாரிக்கச் சென்றால்
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி முத்ஹிபல் ப(இ)ஃஸி இஷ்பி(எ) அன்தஷ் ஷாபீ(எ) லா ஷாபி(எ)ய இல்லா அன்(த்)த ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.
இதன் பொருள் :
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742
அல்லது
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி அத்ஹிபில் ப(இ)ஃஸ இஷ்பி(எ)ஹி வஅன்தஷ் ஷாபீ(எ) லாஷிபா(எ)அ இல்லா ஷிபா(எ)வு(க்)க ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 6743
அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து
பி(இ)ஸ்மில்லாஹ்
என்று மூன்று தடவை கூறி விட்டு
அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு
என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள் :
நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4082
அல்லது
லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
இதன் பொருள் :
கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்
எனக் கூறலாம். ஆதாரம்: புகாரி 3616
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(எ)னீ இதா கான(த்)தில் வபா(எ)(த்)து கைரன் லீ
இதன் பொருள் :
இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5671, 6351
இழப்புகள் ஏற்படும் போது
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 1525
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா
இதன் பொருள் :
நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525
கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது
அல்லாஹும்மக்பி(எ)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(இ)ன் ஹஸனதன்
இதன் பொருள் :
இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1527
மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
அல்லாஹும்மஸ்கினா
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
அல்லது
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
அல்லாஹும்ம அகிஸ்னா
எனக் கூற வேண்டும்.
பொருள்:
இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014
அளவுக்கு மேல் மழை பெய்தால்
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
அல்லது
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி
இதன் பொருள் :
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1013, 1016
அல்லது
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(இ)லி வல் ஆகாமி வபு(இ)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி ஆதாரம்: புகாரி 1017
மழை பொழியும் போது
அல்லாஹும்ம ஸய்யிப(இ)ன் நாபி(எ)அன்
இதன் பொருள் :
இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! ஆதாரம்: புகாரி 1032
போர்கள் மற்றும் கலவரத்தின் போது
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ), ஸரீஅல் ஹிஸாபி(இ), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(இ), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.
இதன் பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்: புகாரி 2933, 4115
அல்லது
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ) வமுஜ்ரியஸ் ஸஹாபி(இ) வஹாஸிமல் அஹ்ஸாபி(இ) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.
இதன் பொருள் :
இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்! ஆதாரம்: புகாரி 2966, 3024
புயல் வீசும் போது
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(எ)ஹா வகைர மா உர்ஸிலத் பி(இ)ஹி. வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(எ)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(இ)ஹி
இதன் பொருள் :
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496
பயணத்தின் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
அல்லாஹு அக்ப(இ)ர் – அல்லாஹு அக்ப(இ)ர் -
அல்லாஹு அக்ப(இ)ர்
எனக் கூறுவார்கள். பின்னர்
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி
எனக் கூறுவார்கள்.
இதன் பொருள் :
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 2392
பயணத்திலிருந்து திரும்பும் போது
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
இதன் பொருள் :
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். ஆதாரம்: முஸ்லிம் 2392
வெளியூரில் தங்கும் போது
அவூது பி(இ) (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
இதன் பொருள் :
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882
பிராணிகளை அறுக்கும் போது
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(இ)ர்
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.
என்று கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5565, 7399
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்
மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்
அல்லாஹு அக்ப(இ)ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3348, 4741
மேட்டில் ஏறும் போது
உயரமான இடத்தில் ஏறும் போது
அல்லாஹு அக்ப(இ)ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994
கீழே இறங்கும் போது
உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது
ஸுப்(இ)ஹானல்லாஹ்
அல்லாஹ் தூயவன்.
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(இ)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(இ)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(எ)ள்லி(க்)கல் அளீம். ப(எ)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(இ) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(எ) தீனீ வ ம

Friday 12 July 2013

ரமலான் மாத நிகழ்வுகள்

இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்.

ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.”
ஆம்! இது நோன்பின் மாதம்
இரவு வணக்கத்தின் மாதம்
தவ்பாவின் மாதம்
தர்மத்தின் மாதம்
பொறுமையின் மாதம்
இரத்த உறவின் மாதம்
சகோதரத்துவத்தின் மாதம்
மறைஞானம் மண்ணுக்கு அருளப்பட்ட மாதம்
வெற்றியின் மாதம்
முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கிய குர்ஆனிய சமூகம் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதம்.
இஸ்லாம் எழுச்சி பெற்று ஜாஹிலிய்யா சரிந்து வீழ்ந்த மாதம்.
சத்தியத்திற்கு உயிர் கொடுத்த மாதம்.
உலகை அடக்கியாண்ட அக்கிரம சக்திகளை துவம்சம் செய்து மானிட சமூகத்திற்கு விடுதலை வழங்கிய மாதம்.

வெற்றிகள்:

1. கி.பி. 610ல் விண்ணுலகில் வீற்றிருந்த குர்ஆன் மண்ணுலகம் இறக்கப்பட்டது.
2. ஹிஜ்ரி 2: பிறை 12ல் குர்ஆனை எதிர்த்து நின்று குலப் பெருமை பேசிய குறைஷிப் படையை தலைகுனியச் செய்து பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
3. ஹிஜ்ரி 5: அரபுத் தேசமே அணி திரண்டு இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட அகழ் யுத்தத்தில் எதிரிகளுக்கு மரண பயம் உண்டாக்கி, கத கலங்க வைத்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
4. ஹிஜ்ரி 8: பிறை 18ல் மக்கா வெற்றி அடைந்தது. அஞ்ஞான அரசோச்சி அரபு தேசம் ஆண்ட மக்கா மறை ஞானத்தின் மத்திய தலமாக மாறியது. அதே ஆண்டு யமன், ஈமானிய தேசமாக மாறியது. அதே ஆண்டு உஸ்ஸா என்ற சிலை உடைக்கப்பட்டது.
ஹிஜ்ரி 9: லாத் சிலை உடைக்கப்பட்டது. தாயிப் மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அதே ஆண்டு தபூக் சென்று ரோம சாம்ராஜ்யத்தின் கதவுகள் தட்டப்பட்டன.
ஹிஜ்ரி 15: பாரசீகர்களைத் தோற்கடித்து காதிஸிய்யாவில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
ஹிஜ்ரி 21: அரேபியாவைக் கடந்து இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில் இஸ்லாம் கால் பதித்தது. அன்று ஸ்பெயின் உட்பட ஐரோப்பாவே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.
ஹிஜ்ரி 92: தாரிக் பின் ஸியாத் ரொட்ரிக் மன்னனை வெற்றி கொண்டு கிழக்கு இஸ்லாமிய சூரியன் உதித்தது.
ஹிஜ்ரி 584: ஸப்த் கோட்டையைக் கைப்பற்றி சிலுவை வீரர்களிடமிருந்து ஃபலஸ்தீனைப் பாதுகாக்கும் முயற்சியில் ஸலாஹுத்தீன் அய்யூபி வெற்றி வாகை சூடினார்கள்.
ஹிஜ்ரி 658: இஸ்லாமிய தேசமெங்கும் நாசம் விளைவித்து பாலைவனங்களை செம்மண்ணாக மாற்றிய தார்த்தாரியர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்த எகிப்து சுல்தான் வெற்றி வாகை சூடினார்கள்.

ஏனைய நிகழ்வுகள்:

1. ஹிஜ்ரி 3ல் பிறை 15ல் அண்ணல் நபிகளாரின் அருமைப் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
லைலத்துல் கத்ர் என்னும் புனித இரவில் லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் பேழையிலிருந்து திருக்குர்ஆன் இறங்கியது.

திருமணங்கள்:

1. ஹிஜ்ரி 3ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
2. ஹிஜ்ரி 10ல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.

மரணங்கள்:

1. அண்ணலாரின் அருமை மனைவி கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரின் 50வது வயதில் பிறை 11ல் மரணமடைந்தார்கள்.
2. ஹிஜ்ரி 2ல் பத்ருப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அண்ணல் நபிகளாரின் அருமைப் புதல்வி ருகையா (ரலி) அவர்கள் தங்கள் 23வது வயதில் மரணமடைந்தார்கள்.
3. ஹிஜ்ரி 11ல் அண்ணலாரின் அருமைப் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் பிறை 3ல் (அண்ணலாரின் மறைவுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு) தங்கள் 29வது வயதில் மரணமடைந்தார்கள்.
4. ஹிஜ்ரி 32ல் பிறை 12ல் அண்ணலாரின் மாமா அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்கள் 88வது வயதில் மரணமடைந்தார்கள்.
5. ஹிஜ்ரி 40ல் பிறை 27ல் நான்காவது கலீஃபா அலீ (ரலி) அவர்கள் தங்கள் 57வது வயதில் மரணமடைந்தார்கள்.
6. ஹிஜ்ரி 50ல் அண்ணலாரின் அருமை மனைவி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தங்கள் 50வது வயதில் மரணமடைந்தார்கள்.
7. ஹிஜ்ரி 58ல் அண்ணலாரின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் 65வது வயதில் மரணமடைந்தார்கள்.

 நன்றி;thoothu online

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR