ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 30 May 2014

இன்றைய தகவல்-தொழுகை.

முஸ்லிம்கள் அவசியம்
தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நம்பிக்கை கொண்டோர்
மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட
கடமையாகவுள்ளது" (அல்-குர்ஆன் 4:103).
நபி (ஸல்) கூறினார்கள் : முஸ்லிமுக்கும்
காஃபிருக்கும் இடையே உள்ள
உடன்படிக்கையே தொழுகை தான்.
அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன்
காஃபிராகி விட்டான். (ஆதாரம்:
அஹ்மத் , திர்மிதி)

தொழுகையில் ஓதக் கூடிய சிறிய அத்தியாயங்கள் சில(குறைந்தது 10) பொருளுடன்


A) குறிப்பு: தொழுகையில்
ஓதுவதற்கு ஏதுவாக
அரபி தெரியாதவர்களுக்காக
குர்ஆனின் பத்து சிறிய
அத்தியாயங்களை தமிழில் தந்திருக்கிறோம்.
தயவு செய்து சரியான
அரபி உச்சரிப்பை அரபியில் ஓத
தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்
கொள்ளவும்.
அத்தியாயம் – 103 ஸூரத்துல்
அஸ்ரி (காலம்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வல்அஸ்ர். இன்னல் இன்ஸான
லஃபீஹூஸ்ர். இல்லல்லதீன
ஆமனு வஆமிலூஸ்
ஸாலிஹாத்தி வதவாஸவ்
பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆரம்பம் செய்கின்றேன். காலத்தின்
மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன்
நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள்
ஈமான் கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக்
கொண்டு ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து மேலும்
பொறுமையைக் கொண்டும்
ஒருவருக்கொருவர்
உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர
(அவர்கள் நஷ்டத்திலில்லை)
அத்தியாயம் – 105 ஸூரத்துல் ஃபீல்
(யானை)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அலம்தர
கைஃப ஃபஅல ரப்புக பிஅஸ்ஹாபில் ஃபீல்.
அலம் யஜ்அல் கய்தஹூம் பீ தஃழ்லீலின்.
வஅர்ஸல அலைஹிம் தைய்ரன் அபாபீல்.
தர்மீஹிம் பிஹிஜாரதிம் மின்ஸிஜ்ஜீல்.
fபஜஅலஹூம் கஅஸ்ஃபிம் மஃகூல்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 105:1 (நபியே!) யானை(ப் படை)க்
காரர்களை உம் இறைவன் என்ன
செய்தான் என்பதை நீர்
பார்க்கவில்லையா? 105:2 அவர்களுடைய
சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்
கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள்
மீது அவை எறிந்தன. 105:5 அதனால்,
அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்
போல் அவன் ஆக்கி விட்டான்.
அத்தியாயம் – 106 ஸூரத்து குறைஷின்
(குறைஷிகள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
லிஈலாஃபி குரைஷின். ஈலாஃபிஹிம்
ரிஹ்லதஷ்ஷிதாயி வஸ்ஸய்ஃப்.
fபல்யஃபுதூ ரப்பஹாதல் பைத். அல்லதீ
அத்அமஹூம் மின்ஜூஇவ் வஆமனஹூம்
மின்ஹவ்ஃப்
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 106:1 குறைஷிகளுக்கு விருப்பம்
உண்டாக்கி, 106:2 மாரி காலத்துடையவும்
கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில்
அவர்களுக்கு மன
விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- 106:3
இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள்
வணங்குவார்களாக. 106:4 அவனே,
அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும்
அவர்களுக்கு அச்சத்திலிருந்தும்
அபயமளித்தான்.
அத்தியாயம் – 108 ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இன்னா அஃதய்னா கல்கவ்தர்.
fபஸல்லி லிரப்பிக வன்கர். இன்னஷானிஅக
ஹூவல் அப்தர்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 108:1 (நபியே!) நிச்சயமாக
நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை)
கொடுத்திருக்கின்றோம். 108:2 எனவே, உம்
இறைவனுக்கு நீர் தொழுது,
குர்பானியும் கொடுப்பீராக. 108:3
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ)
அவன்தான் சந்ததியற்றவன்.
அத்தியாயம் – 109 ஸூரத்துல் காஃபிரூன்
(காஃபிர்கள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்யா அய்யுஹல் காஃபிருன.
லா அஃபுது மா தஃபுதூன். வலா அன்தும்
ஆபிதூன மாஅஃபுது. வலாஅனா ஆபிதும்
மாஅபத்தும். வலா அன்தும் ஆபிதூன
மாஅஃபுது. லகும் தீனுகும் வலியதீன்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 109:1 (நபியே!) நீர்
சொல்வீராக: காஃபிர்களே! 109:2
நீங்கள் வணங்குபவற்றை நான்
வணங்கமாட்டேன். 109:3 இன்னும், நான்
வணங்குகிறவனை நீங்கள்
வணங்குகிறவர்களல்லர். 109:4 அன்றியும்,
நீங்கள் வணங்குபவற்றை நான்
வணங்குபவனல்லன். 109:5 மேலும், நான்
வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள்
அல்லர். 109:6 உங்களுக்கு உங்களுடைய
மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.'
அத்தியாயம் – 110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இதாஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹூ.
வரஅய்தன்னாஸ யத்ஹூலூன
fபீதினில்லாஹி அஃப்வாஜா. fபஸப்பிஹ்
பிஹம்தி ரப்பிக வஸ்தஃபிர்ஹூ.
இன்னஹூ கான தவ்வாபா
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 110:1 அல்லாஹ்வுடைய
உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள்
அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள்
காணும் போதும், 110:3 உம்முடைய இறைவனின்
புகழைக் கொண்டு (துதித்து)
தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம்
பிழை பொறுக்கத் தேடுவீராக –
நிச்சயமாக அவன்
'தவ்பாவை' (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்
கொள்பவனாக இருக்கின்றான்.
அத்தியாயம் – 111 ஸூரத்துல் லஹப்
(ஜுவாலை)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
தப்பத்யதா அபீலஹபின் வதப்.
மா அக்gனா அன்ஹூ மாலுஹூவமா கஸப்.
ஸயஸ்லா னாரன் தாதலகபின்.
வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப். fபீ
ஜிதிஹா ஹப்லுன் மிம்மஸத்
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 111:1 அபூலஹபின்
இரண்டு கைகளும் நாசமடைக; அவனும்
நாசமாகட்டும். 111:2 அவனுடைய
பொருளும், அவன் சம்பாதித்தவையும்
அவனுக்குப் பயன்படவில்லை. 111:3 விரைவில்
அவன் கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் புகுவான். 111:4
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்
கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
அத்தியாயம் – 112 ஸூரத்துல்
இஃக்லாஸ் (ஏகத்துவம்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ்
ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம்
யகுல்லஹூ குஃபுவன் அஹத்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 112:1 (நபியே?!) நீர்
கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:2
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3
அவன் (எவரையும்) பெறவுமில்லை;
(எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அத்தியாயம் – 113 ஸூரத்துல் fபலக்
(அதிகாலை)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்அவூது பிரப்பில் fபலக். மின்
ஷர்ரிமா ஹலக். வமின் ஷர்ரி ஹாஸிகின்
இதா வகப். வமின் ஷர்ரின்னஃப்
fபாதாத்தி பில்உகத்.
வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 113:1 (நபியே!) நீர்
சொல்வீராக: அதிகாலையின்
இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின்
தீங்கை விட்டும்- 113:4 இன்னும், முடிச்சுகளில்
(மந்திரித்து) ஊதும் பெண்களின்
தீங்கை விட்டும், 113:5
பொறாமைக்காரன்
பொறாமை கொள்ளும்
போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல்
தேடுகிறேன்).
அத்தியாயம் : 114 – ஸூரத்துந் நாஸ்
(மனிதர்கள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
குல்அவூது பிரப்பின்னாஸ். மலிகின்னாஸ்.
இலாஹின்னாஸ். மின்ஷர்ரில்
வஸ்வாஸில் ஹன்னாஸ். அல்லதீ
யூவஸ்விஸூ fபீசுதூரின்னாஸ். மினல்
ஜின்னதி வன்னாஸ்.
இதன் பொருள்: அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
(துவங்குகின்றேன்) 114:1 (நபியே!) நீர் கூறுவீராக:
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல்
தேடுகிறேன். 114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;
114:3 (அவனே) மனிதர்களின் நாயன். 114:4
பதுங்கியிருந்து வீண்
சந்தேகங்களை உண்டாக்குபவனின்
தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல்
தேடுகிறேன்). 114:5 அவன் மனிதர்களின்
இதயங்களில் வீண்
சந்தேகங்களை உண்டாக்குகிறான். 114:6
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும்
இருக்கின்றனர்.

Thursday 29 May 2014

மல்லிபட்டினத்தில் நேற்று இரவு மர்ம கும்பல் நடத்திய பயங்கர கொலை வெறி தாக்குதல்

மல்லிபட்டினத்தில் நேற்று இரவு மர்ம கும்பல்
நடத்திய பயங்கர
கொலை வெறி தாக்குதலை அடுத்து
பதற்றமாக காணப்படும் மல்லிபட்டினம்
பகுதியில் ஏராளமான் போலீசார்
பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ரோட்டில் நின்று கொண்டிருந்த
ஊனமுற்ற சகோதரர் உட்பட
நாலுபேருக்கு வெட்டு.
ஊனமுற்ற சகோதரர் சீரியஸ்.
பைக் நம்பரை கண்டுபிடித்ததாகவும்,
நாளை காலைக்குள் கைது செய்வதாக
டிஎஸ்பி குழந்தை சாமி தகவல்.
எவ்வித அசம்பாவிதமும்
நடைபெற்றாமல் தடுக்க மல்லிபட்டினம்
பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில்
ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday 27 May 2014

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள்



- 

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்! அநீதிகள். அநீதிகள்.

கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷாஅப்துர் ரஹீம்ஆயிஷா சித்தீக்காஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர்.

தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
"தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?''
கீற்று பிரியா

"நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி புரிந்துணர்வு இல்லாமல் சமுதாயம் இருக்கிறது.

முஸ்லிம்கள் தங்குவதற்கு வீடுகளைத் தருவது கூட பல்வேறு இடங்களில் மறுக்கப்படுகிறது.

என்னுடைய சொந்த வாழ்வில் நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் நம்பிக்கையான அவர் இரவு மணிக்கு மேல் ஆட்டோ வேண்டுமென்று சொன்னால் வருவதற்கு மறுத்து விடுவார்.

ஏன் என்று கேட்டால், "ஏற்கனவே காவல்துறை சுமத்திய பொய் வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்திருக்கிறேன்.

இரவு நேரத்தில் வண்டி ஓட்டினால் அவர்களால் பெரிய தொந்தரவுகள் ஏற்படும்என்று கூறி மறுத்து விடுவார்.

ஒருமுறை கிருஷ்ணகிரியில் இருந்து வந்த எங்கள் உறவினரை அழைத்து வருமாறு மிகவும் வற்புறுத்தி இரவு 11 மணிக்கு அவரை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்.

உறவினரை அழைத்துக் கொண்டு வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எங்கள் உறவினர் ஆட்டோ டிரைவரை தன்னுடைய நண்பர்தான் என்று காவல்துறையினரிடம் தெரிவித்து ஆட்டோவை போக அனுமதிக்குமாறு சொல்கிறார்.

அதற்கு அந்த காவல்துறையினர் தாடி வைத்திருக்கிற இந்த ஆள் உங்களுக்கு எப்படி நண்பராக இருக்க முடியும் என்று ஆரம்பித்து தடித்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

இதனை எங்கள் உறவினர் எங்களுக்கு போன் மூலம் தெரிவித்தவுடன் நாங்களும் அந்தக் காவல்துறையினரிடம் பேசினோம்.

'அந்த ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு மிகவும் தெரிந்தவர். அதனால் தான் உறவினரை அழைத்து வர அனுப்பினோம்என்று சொன்ன பின்பும் சட்டை செய்யாத போலீசார்அந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரை விசாரணை என்ற பெயரில் மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் உட்கார வைத்த பிறகு தான் அனுப்பினார்கள்.

அடுத்த சம்பவம்டிசம்பர்-அன்று காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

மற்றவர்களை சாதாரணமாக சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர்முக்காடு போட்ட ஒரு முஸ்லிம் பெண்ணை மட்டும் கடுமையாக சோதனை செய்தனர்.

எந்த அளவிற்கு என்றால் வேலைக்குப் போகிற அப்பெண்ணின் கைப்பையில் இருந்த டிபன் பாக்ஸை பிரித்து அதில் இருந்த சாதத்தையும் கிளறிப் பார்த்தனர்.

இதில் காவல்துறையினரின் ஏளனப் பேச்சு வேறு. 
அந்தப் பெண் அழுது கொண்டே சாப்பாட்டை ஒரு ஓரமாக கொட்டிவிட்டு சென்றார்.

இந்தச் சம்பவமும் மற்றவர்களை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரிய வில்லை.
அவர்கள் எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக இருந்தனர். அப்போது எங்களோடு வந்த ஒருவர் தன்னுடைய முஸ்லிம் நண்பரைப் பார்த்து உங்களால் தான் இந்தத் தொந்தரவு என்று சொன்னதைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நாங்கள் "கீற்றுஇணைய தளத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்தவுடன் எங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் (ஃபீட் பேக்) பெரும் அதிர்ச்சியை அளித்தது.

'முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்

இவர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்குத்தான் கஷ்டம்.

போலீஸ் தொந்தரவு. அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டியதுதானேஎன்பது போன்ற பேச்சுக்கள்! 

இது ஏதோ பாமரனின் பேச்சு என்று ஒதுக்கி விட முடியாது.

படித்த இளைய தலைமுறையின் கருத்துத் தான் இது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்கும் பெரும் இன்னல்களை,இடைஞ்சல்களை சந்தித்தோம்.

இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட காரணத்தாலேயே காவல்துறையினர் மிகவும் சிரமத்தைத் தந்தனர்.

இதற்கு முன்னால் மூன்றுநான்கு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அப்போது எல்லாம் காவல் நிலையத்திலே அனுமதி வாங்கித்தான் நடத்தினோம்.

இந்த நிகழ்ச்கிக்காக அனுமதி கேட்ட போது இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் என்னால் அனுமதி தர முடியாது.

ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அனுமதி வாங்குங்கள் என்று சொல்லிவிட்டனர்.

ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கேயும் அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்கவில்லை.

தெரிந்த நண்பர்களை வைத்து அதிகாரிகளிடம் பேசிய பின்பும் முதல் நாள் காலை மணிக்கு வரச் சொன்னவர்கள் மாலை மணி வரை காக்க வைத்த பிறகு தான் அனுமதி அளித்தார்கள்.

அதன் பிறகு இங்கே அரங்கத்திற்கு வந்தபோது இங்குள்ள ஊழியர்களிடம் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம் கொடுத்தீர்கள்?என்று காவல் துறையினர் விசாரித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சம்பந்தமான பேனரை அரங்கத்தின் முன்னால் காலையில் கட்டி வைத்திருந்தோம்.

கட்டி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே அந்த பேனர் கிழிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் புதிய பேனர் தயாரித்து இப்போது நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கடைசி நிமிடம் வரை நிகழ்ச்சி நடக்குமா என்று பதட்டத்துடனே நடமாட வைத்து விட்டார்கள் காவல் துறையினர்"கவலையுடன் தெரிவித்தார் பிரியா.
"நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள் - என்னால் அடி தாங்க முடியவில்லை'' - -ஹாரூண் பாஷா (கோவை)

2006 சட்டமன்றத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன்.

இதற்காக காவல் துறையினர் மதத்துவேஷத்தைத் தூண்டியதாக வழக்குப் போட்டார்கள்.

வழக்கு மன்றத்திலே காவல் துறையின் பொய் வழக்கை முறியடித்தேன்.

அதன் பிறகு என்னுடைய மகனின் பிறந்த நாளன்று நள்ளிரவில் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்த போலீசார் வீட்டை சோதனையிட்டனர்.

பிறகு என்னை கைது செய்து அழைத்துப் போன போலீசார் இரவு முழுவதும் ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றி கொண்டு சென்றனர்.

அதீக் ரஹ்மானுக்கு நீங்கள் வெடிகுண்டு கொடுத்ததாக அவர் சொல்லியுள்ளார்.

அதற்காக விசாரிக்கிறோம் என்று சொன்னார் கள்.

நான் எதையும் அதீக் ரஹ்மானிடம் கொடுக்கவில்லை.

வேண்டுமானால் அதீக் ரஹ்மானை அழைத்து வந்து நேருக்கு நேர் வைத்துக் கேளுங்கள் என்று சொன்னேன்.

போலீசார் அதீக் ரஹ்மானை நேரில் அழைத்து வந்த போது நான் நேரடியாக அவரிடம்எப்போது நான் வெடிகுண்டுகொடுத்தேன்ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அதீக் ரஹ்மான், "நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள்என்னால் அடி தாங்க முடியவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே போலீசார் இழுத்துச் சென்று விட்டனர்.

எங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த இஸ்லாமிய பிரசுரங்களுடன் மேப் ஒன்றையும் வைத்திருந்த போலீசார் அது பற்றிய விவரங்களைக் கேட்டனர்.

மேப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன்இது கமிஷனர் ஆபிஸ் மேப்.

வெடிகுண்டு வைப்பதற்காக மேப் வைத்திருந்ததாக ஒத்துக் கொள்.

இல்லாவிட்டால் வீட்டில் நீயும் உன் மனைவியும் மட்டும் இருக்கீறீர்கள்.

நீ ஒத்துக் கொள்ளாவிட்டால் உன் மனைவியை சிறைக்கு அனுப்புவோம்.

அதனால் ஒத்துக் கொள் என்று மிரட்டினர்.

72 நாள் சிறை வாசத்திற்குப் பின் வந்த என்னை உறவினர்கள் யாரும் சேர்ப்பதில்லை.

சிறைக்குச் செல்லும்போது தீவிரவாதிகள் என்று பிரசுரித்த பிரபலப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகி வெளியே வந்தபோது பிரசுரிக்கவில்லை.

முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்போடு இருக்க வேண்டுமென்றால் பத்திரிகைகள் உண்மையை எழுத வேண்டும்.
சில பேருக்குத்தான் ஜட்டி இருக்கும் - எல்லோரையும் நிர்வாணப்படுத்தித் தான் அடிப்பார்கள்
தடா அப்துல் ரஹீம்

17 ஆண்டு கால சிறை வாழ்க்கையை பத்து நிமிடத்தில் சொல்லி விட முடியாது.

சேத்துப்பட்டு ஆர். எஸ். எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்ததாகக் கூறி என்னைக் கைது செய்தார்கள்.

நீதிமன்றத்தில் 60 நாள் விசாரணையை காவல் துறையினர் கேட்டு வாங்கினார்கள்.

ஒரே அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். பல நாட்கள் இரவு - பகல் எதுவென்றே தெரியவில்லை.

அதிகாரிகளின் முகத்தையும்தோற்றத்தையும் வைத்து யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

சிறையில் இருந்த விடுதலைப் புலிகளில் சிலர் தப்பித்த காரணத்திற்காக ஹெல்மெட் போட்ட காவல்துறையினர் எங்கள் மீது வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள்.

சிறையில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி எங்களை நிர்வாணப்படுத்தி அடிப்பார்கள்.

அப்போது சிலருக்கு மட்டுமே ஜட்டி போட அனுமதி அளிக்கப்படும்.

நாங்கள் சிறைக்கு எதிராக ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே பேசவில்லை.

ஆர்எஸ்எஸ் பார்ப்பன சக்திகளின் கொடுமையை எதிர்த்து மட்டும் தான் போராடினோம்.

சிறை வாழ்க்கையின்போது தாயைதந்தையை,மனைவியைகுழந்தையைகுடும்பத்தை இழந்த நிலையில் சகோதரர்கள் இருக்கிறார்கள்.

எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை.

புகழேந்தி சங்சரசுப்புப.பா.மோகன்பெலிக்ஸ் போன்ற வழக்கறிஞர்கள் தான் எங்களுக்கு உதவி புரிந்தார்கள்.

ஆண்டுகள் கூட நிறைவு பெறாத ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அரசு, 14ஆண்டுகள் கழித்த முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதில்லை.

எத்தனை செம்மொழி மாநாடுகள் நடைபெற்றாலும்அண்ணா பிறந்த நாள் வந்தாலும் இதே நிலைதான்.

முஸ்லிமல்லாத சகோதரர்கள் எங்கள் குரல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள்.

உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!
ஆயிஷா - 

என் பெயர் சங்கீதா என்கிற ஆயிஷா சித்தீக்கா.

இப்படி அழைத்தால் யாருக்கும் தெரியாது.

மனித வெடிகுண்டு ஆயிஷா என்பது தான் எனக்கு வழங்கப்பட்ட பட்டம்.


1997-ஆம் ஆண்டு 19 வயது நிறைவு பெற்ற நான்,இஸ்லாத்தை - ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு விருப்பமானவரை திருமணம் முடித்தேன்.


குடும்ப எதிர்ப்பின் காரணமாக சென்னைக்கு வந்தேன்.

எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்னுடைய உறவினரை தேடி வந்தவர்கள் எங்களையும் விசாரிப்பதாக சேர்த்து விட்டார்கள்.

நான் கோவைக்கே போகவில்லை.

கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடுவதாகச் சொன்னார்கள்.


100 கிலோ வெடிகுண்டை கட்டிக் கொண்டு அத்வானியை கொலை செய்யப் போனேனாம்.

என்னுடைய மொத்த எடையே 40 கிலோதான்.

கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடப்படுவதாக போலீஸ் ஸ்டேஷன்பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களிலே என்னுடைய படத்தை ஒட்டியிருந்தார்கள்.

ஆனால் கோவை வெடிகுண்டு வழக்கு குற்றப் பத்திரிகையிலே என்னுடைய பெயர் கிடையாது.


இவ்வளவு பிரபலப்படுத்திய காரணத்தால் வெடிகுண்டு வழக்கிலே தேடப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள்.


தனிமைச் சிறையின் கொடுமைகளை என்னுடைய குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய மாமியாரிடம் கொடுத்திருந்தேன்.

சிறையை விட்டு வெளியே வந்த போது என்னுடைய குழந்தை என்னிடம் வரவில்லை.

இதை விட பெரிய கொடுமை ஒரு தாய்க்கு என்ன இருக்க முடியும்?
சிறையிலிருந்து ஒரு வாரத்திற்கு கடிதங்கள் என்னுடைய கணவருக்கு எழுதுவேன்.

மூன்றரை வருடத்தில் அவருக்கு கிடைத்த கடிதங்கள் மொத்தம் 17தான்.


நான் பாதிக்கப்படும்போது பத்திரிகைகளுக்கு தீனியாக்கினார்கள்.

என்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பதற்கு பத்திரிகைகள் தான் முழு முதற்காரணம்.


இழந்த சுயமரியாதையை மீட்பதற்காக போராடி வருகிறேன்.

உண்மைக்காகப் போராடுவேன்.

பாகிஸ்தானுக்கு ஓடிப் போக மாட்டேன்.

வாழ்ந்து காட்டுவேன்.

என்னைப் போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு வாதாடுவதற்காக என் மகனை சட்ட வல்லுநராக்குவேன்.

அப்பாவிகளுக்கு குரல் கொடுங்கள்,எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள்.

சமூக ஆர்வலர்கள்மீடியாக்கள் இதனை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
புதன் கிழமை கைது செய்தார்கள்! வெள்ளிக்கிழமை கைது செய்ததாக கோர்ட்டிலே சொன்னார்கள்! - ஜக்கரிய்யா உசேன்.  

நோன்பு மாதத்திலே சஹர் உணவுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது என்னைக் கைது செய்து கண்ணைக் கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

புதன்கிழமை கைது செய்தவர்கள்,வெள்ளிக்கிழமை வரை அன்-ரெக்கார்டாக வைத்திருந்தார்கள்.

ஆந்திராவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தம் இருப்பதாகக் கூறி விசாரித்தவர்கள்எங்களுக்கும் - அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தவுடன் கொடுங்கையூர் பாலத்தினருகே குண்டுகளோடு சென்றபோது பிடித்ததாக வழக்குப் போட்டார்கள்.
காவல்துறை சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துகிறது! பத்திரிகை பிரச்சாரப்படுத்துகிறது!! - 
வழக்கறிஞர் புகழேந்தி  

1996-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மன்றத்திலே குணங்குடி ஹனீஃபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.

மறுநாள் தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை.

அதனால் அவர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கத்திகளை வழங்கினார்கள் என்று தெரிவித்திருந்தது.

காவல்துறையினர் இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று பத்திரிகையாளர் மன்றத்திலே விசாரிக்காமல் பிரிவு-75 சிட்டி போலீஸ் ஆக்டில் வழக்குப் பதிகிறார்கள்.

இந்த வழக்கை ஒத்துக் கொண்டாலே 150 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் காவல்துறையினர் 12 ஆண்டு காலம் இழுத்தடித்து விடுதலை செய்தார்கள்.

தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலே ரஹீம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கிலே 151 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள்.

சாட்சிகளில் ஒருவர் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முபாரக் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

சின்னத் தம்பி தெருவில் இருந்த ஜிகாத் கமிட்டி அலுவலகத்தில் தொடர் வண்டியில் குண்டு வைப்பதற்காக சதி செய்திருந்ததாகத் தெரிவித்தார்கள்.

அதற்காக அந்த தெருவில் மூட்டை தூக்கும் இருவரை சாட்சிகளாக போட்டிருந்தார்கள்.

சாட்சி சொன்னவர்கள்ஆகஸ்டு கடைசி வாரம் நாங்கள் அங்கே போனபோது அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் ஆகஸ்டு முதல் வாரம் போன போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அது எப்படி கடைசி வாரம் போனதற்கு பின்னால் முதல் வாரத்திற்கு போக முடியும்

1999-ஆம் ஆண்டு வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி அதை வைத்ததாக சிலரை கைது செய்தார்கள்.

பேனா விற்கும் 18 வயது ஜலீல்பாவாடை விற்கும் ஹக்கீம்சமோசா விற்கும் ஷேக் ஆகிய பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் மீது வழக்குப் போட்டு துன்புறுத்தினார்கள்.

கோவை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசினார்கள் என்று வழக்குப் போடப்பட்டது.

இந்த வழக்கில் 8-ஆவது குற்றவாளியாக உள்ள அமானி சம்பவம் நடக்கும் போது சிறையில் இருந்தார்.

மஹாராஷ்டிராவின் கார்க்கரேகோவை பாலன்,தென்காசி இன்ஸ்பெக்டர் போன்ற நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் இருக்கிறார்கள்.

ஏர்வாடி காசிம் என்பவரை நீதிமன்றம் கண்டிஷன் பெயலில் விடுவிக்கிறது.

பூந்தமல்லியை விட்டு வெளியே போகக் கூடாது என்பது கோர்ட் உத்தரவுஅவருக்கு வீடு கொடுத்தவரை காவல்துறை தொல்லை கொடுப்பதாக தகவல்கள் வருகிறது.

வழக்குகளை வேகமாக நடத்த வேண்டும்.

வழக்குகளை தேவைக்கு அதிகமான காலம் நீட்டிப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான்.

வழக்குகளை நீட்டிப்பதன் மூலம் சட்டத்தை தவறுதலாக அரசும்காவல் துறையும் பயன்படுத்துகிறது.

பத்திரிகைகள் அதனை பிரச்சாரப்படுத்துகின்றன.

நீதிமன்றமும் உதவுகின்றது.

அநீதிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நின்று தட்டிக் கேட்க வேண்டும்.

இதுபோன்று நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் உண்டு.

Thursday 15 May 2014

Rights of Parents -


>  
>
>
> As'salaamu Alaikum,
>
>  
Rights of Parents (Duties of children)
>  
> (1) Right to be respected and be kind to them
>        (1a) Respect parents even if they are non muslims
>             (Surah Luqman 31/14)
>        (1b) What are the Best deeds-Be good and dutiful to your parents
>              (Muslim)
>        (1c) Who is more entitled to be treated best YOUR MOTHER
>             (Bukhari 8/2)
>        (1d) You have an ambition to go to Paradise, but how?
>                (Tirmizi, Ahmad..)
>
> (2) Right to be Obedient to parents
>         (2a) Allah has preferred obeying and honoring the parents to Jihad!
>            (Bukhari)
>         (2b) Showing Disrespect to One's Parents  (Surah Al-Ahqaf 46/17)
>        (2c) MAJOR SINS among them Disobedience to parents
>             (Bukhari 8/290, M
>        (2d) Major sin - Any one abuses other person's parents he abuses
>               his own parents (Bukhari 8/15, Al-Hakim, Ahmad)
>         (2e) Only place when you can't obey them (Surah Al-Ankabut 29/8)
>
> (3) Right to be helped financially (give money to parents)
>     (3a) Pious people's families would all be in Paradise
>          (Surah Al-Ra'd 13/22-24)
>
> (4) Rights of Inheritance (things, property,money distribution
>      (Surah 2/180)
>
> (5) Parents have the right to scold and sometimes beat their children
>
> (6) After parents Death
>     (6a) To hold muslim parents funeral prayers and complete the burial
>       per shariah method, for non-muslim parents no burial prayers
>            (Surah Al-Tauba 9/84)
>      (6b) Ask Forgiveness to Allah to pardon my parents
>            (Quran Surah Ibrahim 14/41; Al-Israa 17/24 ;  Ash-Shuaraa 26/86, At-Tauba 9/114 ; Al-Ahqaf
> 46/15;  An-Naml 27/19)
>       (6c) The child must pay debts of parents or fulfill any promises or
>              oaths they made to anyone in their life
>             (Bukhari 4/780, Muslim 17/1085 ; 20/4649)
>       (6d) The child must observe Ramdhan fast the unfasted days of her
>               dead mother (Muslim 6/2555)
>       (6e) The child must perform Hajj if her dead mother vowed for Hajj
>                (Bukhari 3/77; 9/419)
>        (6f) To pay due regards to bonds of relationship from parents side.
>         Cut off relations of kinship will not enter paradise
>        More wealth should keep good relations of relatives
>
> (7) The optional (not obligatory) acts after death of parents
>       (7a) Distribute charity on behalf of dead parents
>        (7b) Meet parents friends in humble way
>      
>  “ Three supplications are surely acceptable”
> The Messenger of Allah (pbuh) said, "Three supplications are surely acceptable: the supplication of the oppressed, the traveler and the parents for their children.”(At- Tirmidhi, Abu Dawud & Ib Majah)
>
> One who cuts off relations of kinship will not enter paradise
> Narrated Jubair bin Mut'im
> ________________________________
>  (RA): That he heard the Prophet saying, "The person who cuts the bond of kinship will not enter Paradise."
> Who wants more wealth should keep good relations of relatives
>
> Narrated Abu Huraira(RA): I heard Allah's Apostle (pbh) saying, "Who ever is pleased that he be granted more wealth and that his lease of life be prolonged, then he should keep good relations with his Kith and kin."  (Bukhari 8/14)
>
> Narrated Anas bin Malik(RA): Allah 's Apostle (pbh) said, "Whoever loves that he be granted more wealth and that his lease of life be prolonged then he should keep good relations with his Kith and kin."  (Bukhari 8/15)
>
> Narrated Abu Huraira: The Prophet said, "Allah created the creations, and when He finished from His creations, Ar-Rahm i.e., womb said, "(O Allah) at this place I seek refuge with You from all those who sever me (i.e. sever means break or disunite the ties of Kith and kin). Allah said, 'Yes, won't you be pleased that I will keep good relations with the one who will keep good relations with you, and I will sever the relation with the one who will sever the relations with you.' It said, 'Yes, O my Lord.' Allah said, 'Then that is for you ' " Allah's Apostle added. "Read (in the Qur'an) if you wish, the Statement of Allah: 'Would you then, if you were given the authority, do mischief in the land and sever your ties of kinship?' (47.22)   (Bukhari 8/16)
>
 
 (Prophet (Sallallahu-A’layhi-Wasallam) said Ameen thrice when Jibreel (A.S.) came and said..)

Kaab Ibn Ujrah (RA) relates that Rasulullah (S.A.W.) said Come near to the mimbar and we came near the mimbar. When he (S.A.W.) climbed the
 
first step of the mimbar, he (S.A.W.) said "Aameen", When he (S.A.W.) ascended the
 
second step, he (S.A.W.) said "Aameen", When he (S.A.W.) climbed the
 
third step, he (S.A.W.) said "Aameen" When he (S.A.W.) came down. We said "O Rasool of Allah (S.A.W.), we have heard from you today something which we never heard before" he said When I climbed the
 
first step, the angel Jibraeel (A.S.) appeared before me and said
"Destruction to him who found the blessed month of Ramadhan and let it pass by without gaining forgiveness"
upon that I said 'Aameen'. When I climbed the
 
second step, he said,
"Destruction to him before whom your name is taken and then he does not make Dua for Allah's blessing on me (by saying, for example S.A.W)."
I replied 'Aameen'. When I climbed the
 
third step, he said
"Destruction unto him in whose lifetime his parents or either one of them reaches old age, and (through failure to serve
 them) he could not earn Jannah".
I said 'Aameen

Wednesday 14 May 2014

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும

தயவு செய்து படிக்கவும் மிகவும்
முக்கியமான செய்தி
இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்
என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும்
முக்கியமானதாக உள்ளது.அதில் நாம்
பதிவு செய்திருக்கும் எண்கள்
யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த
ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக
நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம்
சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில்
இருக்கும்.
மக்கள் உங்களுக்கு உதவி செய்ய
நேரிடும்போது அவர்கள் உங்கள்
கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல்
சொல்ல
நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான
எண்களில் எந்தஎண் உங்கள்
வீட்டினுடையது என்று தெரியாது.ஆனால்
"ICE" என்று பதிவுசெய்து இருந்தால்
உங்கள் வீட்டிற்கு,
உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல்
சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய
நோக்கம் அவசர நேரங்களில்
மக்களை காப்பாற்றுவதாகு
ம்.இன்று ஏறத்தால அனைவரிடமும்
கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.இந்த
முறையானது பாராமெடிக் (PARAMEDIC)
ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள்
விபத்து ஏற்பட்டவர்களுக்
கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும்
கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள்
குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என
ஆராய்ந்து இந்த முறையை
அமல்படுத்தினர்.
இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 ,
ICE3………….etc
எனவும்
பதிவு செய்துகொள்ள்ளாம்.
இன்றே, உங்கள் கைபேசியில்
பதிவுசெய்யுங்கள் இந்த
முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உ
ங்கள் மற்றும் நண்பர்களின்
வாழ்வை காப்பாற்றுங்கள்.

Wednesday 7 May 2014

....::: The Holy Quran :::... - And whoever desires the Hereafter and strives for it

> ....:: 17. Al-Israa-The Night Journey,Children of Israel ::....
>  
>
>
>
> Waman arada alakhirata wasaAAa laha saAAyaha wahuwa muminun faolaika kana saAAyuhum mashkooran
>  
> [17 : 19]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும்.
>
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> ആരെങ്കിലും പരലോകം ഉദ്ദേശിക്കുകയും, സത്യവിശ്വാസിയായിക്കൊണ്ട് അതിന്നു വേണ്ടി അതിന്‍റെതായ പരിശ്രമം നടത്തുകയും ചെയ്യുന്ന പക്ഷം അത്തരക്കാരുടെ പരിശ്രമം പ്രതിഫലാര്‍ഹമായിരിക്കും.
>
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> And whoever desires the Hereafter and strives for it, with the necessary effort due for it (i.e. do righteous deeds of Allah's Obedience) while he is a believer (in the Oneness of Allah Islamic Monotheism), then such are the ones whose striving shall be appreciated, thanked and rewarded (by Allah).
>
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> और जो आख़िरत चाहता हो और उसके लिए ऐसा प्रयास भी करे जैसा कि उसके लिए प्रयास करना चाहिए और वह हो मोमिन, तो ऐसे ही लोग है जिनके प्रयास की क़द्र की जाएगी
>
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>
>
>
> Visit | Join
>
> THARJUMA READERS SURVEY 2013
>

> © Since 2004 | http://www.tharjuma.com  | http://www.quranintamil.com | http://www.tamiltafsir.com 
>  
> Powered by RMDA-RIMD
>  
>                                                                                                                       
>
>
>
>

....::: The Holy Quran :::... - Your Lord knows best what is in your inner-selves


> ....:: 17. Al-Israa-The Night Journey,Children of Israel ::....
>  
>
>
>
> Rabbukum aAAlamu bima fee nufoosikum in takoonoo saliheena fainnahu kana lilawwabeena ghafooran
>  
> [17 : 25]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.
>
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> നിങ്ങളുടെ രക്ഷിതാവ് നിങ്ങളുടെ മനസ്സുകളിലുള്ളത് നല്ലവണ്ണം അറിയുന്നവനാണ്‌. നിങ്ങള്‍ നല്ലവരായിരിക്കുന്ന പക്ഷം തീര്‍ച്ചയായും അവന്‍ ഖേദിച്ചുമടങ്ങുന്നവര്‍ക്ക് ഏറെ പൊറുത്തുകൊടുക്കുന്നവനാകുന്നു.
>
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> Your Lord knows best what is in your inner-selves. If you are righteous, then, verily, He is Ever Most Forgiving to those who turn unto Him again and again in obedience, and in repentance.
>
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> जो कुछ तुम्हारे जी में है उसे तुम्हारा रब भली-भाँति जानता है। यदि तुम सुयोग्य और अच्छे हुए तो निश्चय ही वह भी ऐसे रुजू करनेवालों के लिए बड़ा क्षमाशील है
>
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>
>
>
> Visit | Join
>
> THARJUMA READERS SURVEY 2013
>

> © Since 2004 | http://www.tharjuma.com  | http://www.quranintamil.com | http://www.tamiltafsir.com 
>  
> Powered by RMDA-RIMD
>  
>                                                                                                                       
>
>
>
>

Tuesday 6 May 2014

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

இனிய இஸ்லாமிய சொந்தங்களுக்கு 
இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மதுக்கூரில் 
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)நடத்தும்
வாருங்கள் நன்மையை நாடி...
ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

நாள் : 25/05/2014 ஞாயிற்றுக்கிழமை (இன்ஷா அல்லாஹ்..)
நேரம் : காலை 9:30 முதல் இரவு 9:00 மணி

சிறந்த மார்க்க அறிஞர்களின் பல்வேறு தலைப்புகளின் பயனுள்ள உரைகள்..
இந்தியாவில் இஸ்லாம் கண்காட்சி
மூடப்பழக்க ஒழிப்பு மேஜிக் நிகழ்ச்சி
இஸ்லாமிய பட்டி மன்றம்
இன்னும் ஏராளம்...
இத்தனையும் எங்கள் ஊரில் மாநாட்டிற்கு குடும்பத்துடன் வாரீர்.

(எங்கள் எண்ணங்கள் நிறைவேற ஏக நாயன் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்)
இயன்றால் பொருளாதார உதவி செய்யுங்கள்..

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்

Friday 2 May 2014

தமிழ்நாட்டில் 1.50 கோடி "நோட்டா"

தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்னுடைய இந்த தலைப்பு மிகவும்
வியப்பாக இருக்கும்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் யாருக்கும் வாக்களிக்காதவர்களுக்காக
நோட்டா என்ற ஒன்றை அறிமுகபடுத்தியது .இந்த பட்டனை, எந்த வேட்பாளரையும்
விரும்பாத வாக்காளர்கள் வாக்கு சாவடி வரை வந்து இந்த நோட்டா என்ற பட்டனை
அழுத்த வேண்டும். இது ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரங்கள் விழும் ஆனால்
1.50 கோடி எப்படி வரும் என்று ஒரு கேள்வி வரும். அதற்கு என்னுடைய
விளக்கமும் காரணமும்.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை வாக்கு சாவடிக்கு வந்து நோட்டா பட்டனை
அழுத்தும் போது அந்த ஓட்டு நோட்டா என்ற அங்கீகாரம் அடைகிறது. ஆனால்,
என்னுடைய கணக்கு வாக்கு சாவடிக்கே வராமல் விடுமுறையாக இருந்தும் வீட்டில்
பொழுதை கழிக்கும் ஒவொவொரு வாக்காளரும் நோட்டா தான். அந்த அடிப்படையில்
தமிழ் நாட்டில் 5.50 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஓட்டு
போட்டவர்கள் 75% மட்டுமே. மீதம் 1.37 கோடி பேர் ஓட்டு போடவில்லை . அதோடு
அங்கீகாரம் பெற்ற நோட்டா 40 தொகுதிக்கும் குறைந்தது 40,000 நோட்டா
கண்டிப்பாக இருக்கும் ஆக மொத்தம் 1.50 கோடிக்கு மேல் கணக்கு வருகிறது
.இதில் நடக்க முடியாத அளவுக்கு நோயாளிகள், வெளிநாட்டில் இருப்பவர்கள்,
அவசரமாக வெளி ஊர் சென்றவர்களை கழித்தால் என்னுடைய நோட்டா கணக்கு 1.50
கோடியை மிஞ்சி விடும். இப்போது நோட்டா என்ற நிலைக்கு வாக்காளர்கள்
தள்ளப்பட்ட காரணங்களை ஆராய்வோம்.
நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வாக்காளர்களாக இருக்கலாம்
ஆனால், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் காஸ்மீரில் பேசும் ஒரு தேசிய
தலைவரின் உரையை கேட்கமுடியும். குஜராத்தில் ஒரு கட்சிகாரர் பேசுகிறார்.
மோடியை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் தேர்தல் முடிந்தவுடன் பாகிஸ்தான்
செல்ல வேண்டும் அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று இன்னொருவர்
உத்தரபிரதேசத்தில் பேசுகிறார் முசாபர் நகர் கலவரத்துக்கு பழிவாங்க இந்த
தேர்தல் சரியான ஆயுதம் என்று. இப்படி பல பல பேச்சுக்களை கேட்ட மக்கள்
அரசியல் கட்சிகளை வெறுத்து இருக்கலாம்.
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குற்றவாளியை தூக்கிலிட்டு அந்த உடலை
பாகிஸ்தானுக்கு அனுப்ப முன் வந்த இந்த அரசு, ஒரு இந்தியனை தூக்கிலிட்டு,
அந்த செய்தியை அவனது குடும்பத்துக்கு தாமதமாக தெரிவித்ததோடு அவசர அவசரமாக
அந்த மனிதரை சிறை வளாகத்திலேயே சமாதி கட்டியதை மனித நேயம் உள்ள எந்த
சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. காரணம் குற்றம் நிருபிக்கப்படாத அவருக்கு
இந்த நிலை. மறுபுறம் பாரத பிரதமரையே கொன்றவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக
உயிரோடு இருக்கிறார்கள். அடுத்ததாக வானமே இடிந்தாலும் பேசாத பிரதமர். இது
போன்ற காரணங்களால் மக்கள் ஆளும் அரசை வெறுத்து இருக்கலாம். இது தேசிய
நிலவரம் .
தமிழகத்தில் முதல்வரை காணும் இடங்களில் எல்லாம் காலில் விழும்
அமைச்சர்கள், கூனிகுருகி நிற்கும் வேட்பாளர்கள் என்று தினம் தினம்
பார்த்த மக்கள், சுயமரியாதையை இழந்த இவர்களுக்கு ஓட்டு போட்டு நாம் ஏன்
சுயமரியாதையை இழக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.
இன்னொரு கட்சி இருக்கிறது 2ஜி முறைகேட்டில் இந்தியாவையே அதிர
வைத்தவருக்கு மீண்டும் சீட்டு. அமைச்சராக இருந்து தன்னுடைய அதிகாரத்தை
சுயநலத்துக்கு பயன்படுத்திய ஒருவருக்கு மீண்டும் சீட்டு. இப்படியான கேலி
கூத்துகளை மக்கள் விரும்பாமல் இருக்கலாம்.
இன்னொரு அரசியல்வாதி சொன்னார் நீங்கள் ஓட்டுக்கு 200 ருபாய் பணம்
வாங்கினால் (அதை ஐந்து வருடங்களுக்கு வகுத்தால் ஒரு நாளுக்கு 10 பைசா
வருகிறது) அது பிச்சையை விட கேவலம் என்று சொல்லாமல் சொன்னதால் மக்களுக்கு
ரோசம் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் பதிவாகியுள்ள 75% ஓட்டும் நோட்டாவாக ஆவதற்கு முன்னால்
ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் திருந்தி கொள்ளுங்கள் என்று
சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
- நெயினார் முகம்மது (கலீல்), வீரசோழன்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR