ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday 1 July 2014

அல்லாஹ்வின் இரக்கம்

 
''
அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா படைப்பினங்களைப் படைத்தபொழுது தன்னிடமுள்ள லவ்ஹுல் மஹ்பூள் என்னும் ஏட்டில் 'என் கருணை (ரஹ்மத்) என் கோபத்தை மிகைத்துவிட்டுதுஎன்று எழுதியுள்ளான். இந்த வார்த்தைகள் அவனுக்கு முன்னால் அர்ஷின் மீது எழுதப்பட்டுள்ளது.'' என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (முஸ்லிம்)
‘‘அல்லாஹுதஆலாவிடம் நூறு அருள்கள் உள்ளன. ஆவற்றில் ஒன்றை மட்டும் ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள்,புழுப்பூச்சிகளுக்கிடையே இறக்கி வைத்துள்ளான். அந்த ஒரு பங்கின் காரணமாகத் தான் ஒருவர் மற்றவரிடம் மென்மையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்கின்றனர் அதன் காரணமாகவே காட்டு விலங்குகள்தமது குட்டிகளிடம் பாசம் கொள்கின்றன. மீதமுள்ள தொண்ணூற்றொன்பது அருள்களை கியாமத்நாளில் தனது அடியார்களிடம் மீது பொழிவதற்காகத் தன்னிடம் வைத்துள்ளான்’’ என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹுதஆலா கியாமத் நாளில் இந்த ரஹ்மத்துகளோடு உலகத்தார்களுக்கு தொடுத்த ரஹ்மத்தையும் சேர்த்து முழுமையாக ஆக்கிவிடுவான் (பிறகு நூறு ரஹ்மத்துகளின் மூலம் தன் அடியாhர்களின் மீது அருள் மாரி பொழிவான்) என்று மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது. 
(முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்
 அல்லாஹ் (படைப்புகளைப்படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலேஎன் கருணை என் கோபத்தை முந்திவிட்டது'. என்று எழுதினான்என அபூஹுரைரா(ரலிஅறிவித்தார்.
. புகாரி ஹதீஸ் 7422
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான்அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்ஒன்றையே பூமியில் இறக்கினான்இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம்காட்டுகின்றனஎந்த அளவிற்கென்றால்மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்தகைதிகள் சிலர் நபி (ஸல்அவர்களிடம் வந்தார்கள்அவர்களிடையே இருந்த ஒருபெண்ணின் மார்பில் பால் சுரந்ததுஅவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தைகிடைக்கவில்லைஎனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும்அதை (வாரிஎடுத்து(ப் பாலூட்டினாள்.தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்அப்போதுஎங்களிடம் நபி (ஸல்அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளாசொல்லுங்கள்!” என்றார்கள்.நாங்கள், ‘இல்லைஎந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம்அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்புவைத்துள்ளான்” என்று கூறினார்கள்.
புஹாரி :5999 உமர் (ரலி).
1752. (முந்தைய காலத்தில்நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து,அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள்ஏனெனில்இறைவன்மீதாணையாகஎன் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால்உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன்எனக்கு அளித்து விடுவான்” என்று சொல்லி(விட்டு இறந்துவிட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல்தூவப்பட்டது.) பிறகுஅல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான்.தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான்பிறகு, ‘நீ எதற்காக இப்படிச் செய்தாய்?’என்று கேட்டான்அதற்கு அவர், ‘உன் அச்சத்தினால் தான்நீ நன்கறிந்தவன்” என்று சொல்லஅவரை அல்லாஹ்மன்னித்துவிட்டான் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7506 அபூஹுரைரா (ரலி).
1753. உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்ஒருவர் இருந்தார்அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான்.அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், ‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்என்று கேட்டார்அவர்கள், ‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர்அதற்கு அவர், ‘நான் நற்செயல்எதையும் செய்யவேயில்லைஎனவேநான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள்பிறகு என்னைப் பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்என்னைத் தூவி விடுங்கள்” என்று கூறினார்அவர்களும்அவ்வாறே செய்தனர்அவரை (அவரின் உடல் அணுக்களைஅல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும்அளித்து) ‘இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான்அவர், ‘உன் (மீதுஎனக்குள்ளஅச்சம் தான் (இப்படி உத்திரவிட என்னைத் தூண்டியது)” என்று
கூறினார்உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3478 அபூ ஸயீத் (ரலி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR