ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday 12 November 2012

நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்

        நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை 

              கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்




இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”


” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்...
தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை”
 
திருக்குர்ஆன் 26:121.).“அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்”.

(திருக்குர்ஆன் 29:15.)” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.

(திருக்குர்ஆன் 54:13-15.)இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.

இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன.
 


16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.

மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.

‘அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம்; சிந்திப்பவர் உண்டா?’ என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது .
திருக்குர்ஆன், “இறைவனின் வேதம்” என்பதற்கு இது சான்றாகவுள்ளது.


இந்த சம்பவங்கள் மூலம் இஸ்லாம் எவ்வாறான மார்க்கம் என்றும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்றும் அறிய முடிகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR