ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday 5 August 2013

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த உலகத்தலைவர்கள் மூவர்


புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த உலகத்தலைவர்களில் காலஞ்சென்ற சவூதி மன்னர் பைசல் பின் அப்துல் அசீஸ்,பாலஸ்தீனப்பிரதமர் இஸ்மாயில் ஹானியா மற்றும் எகிப்தின் ஜனாதிபதி மொஹம்மத் முர்சி ஆகியோர் அடங்குகின்றனர்.
மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் 1906 இல் ரியாத் நகரில், சவூதியின் நிர்மாணகர்த்தா அப்துர்ரஹ்மான் அஸ் சவுத்திற்கு மகனாகப்பிறந்தார்.இவர் தனது 16 வயதில் புனித திருக்குர்ஆனை மனனஞ்செய்தார்.19 வயதில் படைகளின் தளபதியானார்.1964 முதல் 1975 வரை சவூதியின் ஆட்சியாளராக இருந்தார்.இஸ்ரேலுடன் யுத்தம் செய்த ஒரேயொரு சவுதித்தலைவர் இவர் மட்டும்தான்.இஸ்ரேலுக்கு எதிராக ஜிஹாத்தில் ஈடுபட மக்களை அழைத்தவர்.அமெரிக்கா,நேடோ நாடுகளுக்கு எண்ணை ஏற்றுமதி செய்ய மறுத்தவர்.
1975 மார்ச் 25 ஆம் திகதி, மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக வழமையாகக்கூட்டும் கூட்டத்தில் வைத்து அன்னாரின் தந்தையின் வேரொரு மணைவிற்குப்பிறந்த பைசல் பின் முசைத் எனும் சகோதரனால் கொல்லப்பட்டார். பைசல் பின் முசைத் பின்னர் சிரச்சேதம் செய்யப்பட்டான்.
இஸ்மாயில் ஹானியா பாலஸ்தீனத்தின் பிரதமர்
. புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனஞ்செய்திருக்கும் மற்றொரு உலகத்தலைவர்.இவரின் மகன் அய்த் திருமறையை 35 நாட்களில் மன்னஞ்செய்த பெருமைக்குரியவர்.இஸ்மாயில் ஹானியா அவர்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் ஆவர்.இவர் பாலஸ்தீனின் பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையை நடத்துகின்றார், மேலும் ரமழானில் தராவிஹ் தொழுகை மற்றும் பயான்களையும் நடாத்தி வருகின்றார்.
கலாநிதி முஹம்மத் முர்சி அவர்கள் 
குர்ஆனை மன்னஞ்செய்த முதல் எகிப்தின் தலைவர் .இவரின் முழுப்பெயர் ஈசா முஹம்மத் முர்சி அய்யாத் .இவரின் குடும்பத்தில் இவரின் மணைவி மற்றும் குழந்தைகள் ஐந்துபேரும் குர் ஆனை முழுமையாக மன்னஞ்செய்திருப்பது குறிப்பிடத்தக்கது . சுப்ஹானல்லாஹ்…!
-Rafeeq

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR