ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday 5 July 2014

திருக்குர்ஆன் ஓத புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்

புனித
ரமழான் மாதத்தில் குர் ஆனை 12
மொழிகளில் வாசிப்பதற்கான
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்
விற்பனைக்கு வந்துள்ளது.
முதல் முறையாக இந்தியாவில்
இத்தொழில்நுட்பம்
அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக "டைம்ஸ் ஒப்
இந்தியா" பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈ-
பென், இயர்போன்
வசதிகளை கொண்டதாக 3500
ரூபாவுக்கு (இந்திய ரூபாய்கள்) இந்த
டிஜிட்டல் குர்ஆன் கிடைக்கின்றது.
இளம் தலைமுறையினரை கவரும் விதத்தில்
இது உள்ளது. இந்த இலத்திரனியல்
குர்ஆனை பயன்படுத்துபவர் பேனையினால்
சாதாரணமாக தொடுவதன் மூரம்
விரும்பிய குர்ஆன்
வாசகங்களை எந்தவொரு பக்கத்திலும்
வாசிக்கக்கூடியதாக இருக்கும்.
ஹிந்தி, ஆங்கிலம், உருது, மராட்டி, தமிழ் மற்றும்
பல மொழிகளில் பேனையினால்
வசனங்களை மொழி பெயர்க்ககூடியதாக
இருக்கின்றது.
வாசிப்பவர்களுக்கு இலகுவானதாக இந்த
புனிதநூலின் டிஜிட்டல் வடிவம்
அமைந்திருக்கின்றது. அரபு அல்லது பாரசீக
மொழிகளை அறிந்திராதோர் இந்த
டிஜிட்டல் கருவியை பயன்படுத்துவதன் மூலம் குர்ஆனை வாசிக்க முடியும்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR