ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday, 27 October 2012

U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை


           U.A.E அமீரகத்தில் வாழும்                                 

          இந்தியர்களுக்கு ஓட்டுரிமை           


வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 


இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும். 


download form:   Embassy of India       கிளிக்  செய்யவும் 

Friday, 26 October 2012

பூமியின் கூரை!

                                          பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere)





நமது பூமி மற்றும் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சி
தறுண்டு போகும் அபாயமாகும். இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர். அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere).
20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் விண்ணில் செலுத்தப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த தொலைநோக்கிகளினாலும், இன்னும் பல அரிய கருவிகளினாலும் ஆராய்ந்ததில், இந்த வாயு மண்டலத்தை, இந்த பிரபஞ்சத்தின் வெற்றுவெளியில் சிதறாமல் காப்பது பூமியின் மேற்பரப்பில் 70,000 கிலோ மீட்டர் வரை பரவியிருக்கும் பூமியின் காந்த மண்டலமே என்று கண்டறிந்தனர். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசைப் போன்ற பல சக்திகளைக் கொண்டுள்ளது.

அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகிறான்:-

“-இன்னும் வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)

“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையோராவோம்” (அல்குர்ஆன்:51:47)
சூரியன் அதிவேகத்தில் சுழல்வதால் அதிலிருந்து ஏற்படும் காந்தசக்தி ஆகாய வெளியெங்கிலும் பரவியுள்ளது. சூரியனின் காந்த சக்தி எல்லைக்குள் இருக்கும் பூமியும் அதிவேகத்தில் சுழல்வதனால் பூமியைச் சுற்றிலும் காந்தசக்தி ஏற்படுகிறது. இது பூமியிலிருந்து உயரே செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒரு நிலையான காந்தசக்தியைக் கொண்டிருக்கும். பூமியின் காந்தசக்தியின் எல்லைக்கப்பால் இருப்பது சூரியனின் காந்தசக்தியாகும். சரி இனி இந்த காந்தசக்தி பூமியின் காற்று மண்டலத்தை எவ்வாறு பாதுக்காக்கின்றது எனப் பார்ப்போம்..

காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் அணுக்கள் சூரியனின் வெப்பக்கதிர்களால் தாக்கப்படுவதோடு அல்லாமல், சூரியனின் ஒளிக்கற்றைகளிலிருந்து மின்சாரத்தையும் பெற்று மின்னூட்டம் பெற்ற அணுக்களாகின்றன. (Electrically Charged Particles) மின்னூட்டம் பெற்ற காற்று மண்டலத்தின் இந்த துகள்களை பூமியின் சக்திவாய்ந்த காந்த மண்டலம் தன்வசம் இழுத்து அவைகள் பரந்து விரிந்த ஆகாய வெற்றுவெளியை நோக்கிச் சென்று சிதறுண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது





மேலும் சூரியனிலிருந்து பூமியை நோக்கி தொடர்ந்து பாய்ந்துக் கொண்டிருக்கும் அழிவுக் கதிர்களையும், அவ்வப்போது சூரியனிலிருந்து வீசும் சூரியப் புயலின் வேகத்தையும் பூமியின் காந்த மண்டலம் தடுத்துக் கொண்டு ஒரு கூரையாக செயல்படுகிறது. (பார்க்கவும் வீடியோ: http://www.youtube.com/watch?v=c-RM-DCJ6K0&feature=player_embedded#!) 

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சிந்தித்துப் பாருங்கள்:-

“இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்”

என்று கூறி நம்மை பாதுகாக்கும் இறைவன் மிகவும் கருனையாளன் அன்றோ?



விண்கற்களினால் பூமிக்கு ஆபத்து!: -

அல்குர்ஆன் 21:32 வசனத்தில் பொதிந்துள்ள மற்றுமொரு சான்றினைப் பார்ப்போம்.

இந்த சூரியக்குடும்பம் உருவான காலகட்டத்தில் அவை மிகப்பெரிய நட்சத்திரம் (Parent Star) ஒன்றிலிருந்து தோன்றியது என வானவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்போது சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் கோள்களுடன் கோடிக்கணக்கான விண்கற்களும் தோன்றின. அக்கற்களும் சூரியனின் ஈர்ப்புச்சக்திக்கு உட்பட்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளில் சிறியதும் பெரியதுமாக சில மில்லி மீட்டர் முதல் பல கிலோ மீட்டர் விட்டமுடைய கற்கள் இருக்கின்றன. இவைகளில் பெரிதாக இருக்கும் கற்களுக்கு (Asteroids) ஆஸ்டெராயிட்ஸ் என்றும், சிறிய கற்களை (Meteoroids) மீட்டியராய்ட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஒரு பெரும் கூட்டமாக செவ்வாய் கிரகத்திற்கும், ஜுபிடர் என்ற கிரகத்திற்கும் இடையில் ஒரு பெல்ட்டைப்போல இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதற்கு ‘ஆஸ்ராயிட்ஸ் பெல்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இவைகளிலிருந்து சில கற்கள் விலகிச் செல்கின்றன. இவ்வாறு விலகிச் செல்லும் இக்கற்களை பூமியானது தன்னுடைய ஈர்ப்பாற்றலால் தன் வசம் இழுப்பதால் அக்கற்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.

மேலும் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படக்கூடிய Comets சென்ற பாதைகளில் ஏராளமான சிறுசிறு கற்கள் கோடிக்கணக்கில் காணப்படுகிறது. பூமி சுழன்று கொண்டே வால்நட்சத்திரம் கடந்து சென்ற பாதைகளில் நகரும்போது அப்பாதைகளில் உள்ள கோடிக்கணக்கான துகள்களும், கற்களும் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு ஷவரிலிருந்து கொட்டும் நீரைப்போல பூமியை நோக்கிக் கொட்டுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் மீட்டியர் ஷவர் என்று (Meteor Shower) கூறுவர்.

இவ்வாறு பல வகைகளில் பூமியை நோக்கி பல கோடிக்கணக்கான கற்கள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியை நோக்கி வருவதாக கணக்கிட்டுள்ளனர். வானத்திலிருந்து கொட்டப்படும் கோடிக்கணக்கான கற்களில் ஒன்றுகூட நம்மீது விழவில்லையே? அவற்றை நம்மீது விழாமல் தடுப்பது எது? என்று ஆச்சரியத்தோடு வினா எழுப்பினால் அதற்கும் விடை தருகிறார்கள் விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமே கூரையாக அமைந்து அக்கற்கள் நம்மீது விழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?

தன் பாதையிலிருந்து விலகிய கற்கள் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தோடி வரும்போது அவைகள் பூமியின் காற்று மண்டலத்தை கடந்து வரவேண்டியதிருக்கிறது. அதிவேகமாக வரும் கற்கள் காற்று மண்டலத்தில் உராயும்போது ஏற்படும் அளவுக்கதிகமான வெப்பத்தினால் அக்கற்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்களே பாதி எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு பூமியில் விழும் கற்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆய்விற்கு பெரிதும் உதவுகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள். வருடத்திற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியின் மீது பாய்ந்தோடி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளிலிருந்து இறைவன் நம்மைக் காப்பதற்காகவும் வளிமண்டலம் எனும் வானத்தை கூரையாக படைத்திருக்கின்றான். மேலும் இறைவன் கூறுகிறான்.

“மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 44:38)

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

ஆள்வதற்கு ஒரு சாம்ராஜ்யம்




                      ஆள்வதற்கு ஒரு சாம்ராஜ்யம் 






பின்லேடன், .அமெரிக்கா அவரை பிடிப்பதற்காக பல நூறு கோடிகளை செலவழித்தது. அவரை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட வேட்டையில் பல நூறு பேர் பலியானார்கள்.

அவர் தலைக்கு ரூ.12 கோடியை விலையாக அமெரிக்கா நிர்ணயம் செய்து இருந்தது. 
இந்த பணத்துக்காக அவரை காட்டிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.

17-வது குழந்தையாக:

54 வயதான பின்லேடன் கோடீசுவர தந்தைக்கு மகனாக சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பிறந்தார். இவர் தந்தை முகமது பின்லேடனுக்கு 22 மனைவிகள் அவர்களில் 11-வது மனைவியான அமிதியா அல் அட்டாஸ்க்கு பிறந்தவர் தான் பின்லேடன். இவரது தந்தைக்கு இவர் 17-வது குழந்தையாக பிறந்தார்.

இவர் தந்தைக்கு குழந்தைகள் பிறந்தனர். பின்லேடன் பிறந்தது 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி ஆகும். ஏமனில் வசித்த போது பின்லேடனின் தந்தை முகமது வறுமையில் திளைத்தார். குடும்பம் நடத்துவதற்கு போதிய அளவு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார்.

பின்லேடன் பிறந்த பிறகு தான் அவர் பிழைப்புக்காக சவுதிஅரேபியாவில் குடியேறினார். அங்கு அவர் கட்டிடம் கட்டும் காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று கோடிகளை குவித்தார். சவுதி அரேபிய மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.

மேற்கத்திய கலாசாரத்தில் ஆர்வம்:

படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிய பின்லேடன் சவுதி அரேபியாவில் உள்ள மதீனா, ஜித்தா போன்ற இடங்களில் பள்ளிக்கூட படிப்பை முடித்தார். பின்பு ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய படிப்பில் சேர்ந்தார்.

தொடக்கத்தில் மேற்கத்திய நாட்டு பண்பாட்டில் திளைத்த ஒசாமா வாழ்க்கையை அனுபவிப்பதற்காக லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தார். அந்த கால கட்டத்தில் தான் அவர் தந்தை சவுதி அரேபியாவில் மதீனா, மக்கா நகரங்களில் உள்ள மசூதிகளை புதுப்பிக்கும் பணிகளை ஏற்றார்.

இறை நம்பிக்கையோடு அவர் அதை செய்ததால் பக்தி மார்க்கத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது தான் பின்லேடனின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவர் இஸ்லாமிய புனித நூல்களை படிக்க தொடங்கினார். பெய்ரூட்டுக்கு போவதை கைவிட்டார். 

22 வயதில் துப்பாக்கி தூக்கியவர்:

பல்கலைக்கழகத்தில் படித்தபோதே துப்பாக்கியை தூக்கி விட்டார் பின்லேடன். அப்போது அவருக்கு வயது 22. மேற்கத்திய கலாசாரம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை தொடாமல் தடுப்பதற்கு புனிதப்போரும், துப்பாக்கியும் அவசியம் என்பதை படிக்கும்போதே உணர்ந்தார். 1979-ம் ஆண்டு ரஷிய ராணுவம் ஆப்கானிஸ்தானில் உள்ள கம்யூனிஸ்டு ஆட்சியை காப்பாற்றுவதற்காக அந்த நாட்டுக்குள் நுழைந்தது.

உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாடு முஸ்லிம் நாட்டை அடிமைப்படுத்தியது முஸ்லிம்களை கலவரப்படுத்தியது. எனவே, ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக புறப்பட்ட புனிதப்போராளிகளுள் ஒருவராக பின்லேடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்தார்.

நிரந்தர தங்குமிடம் பூமியே!


(நபியே) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியை கொடுக்கிறாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புபவரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்! நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன, அனைத்தின் மீதும் நீ நிச்சயமாக அதிக ஆற்றலுடையவனாக இருக்கிறாய்!” – திருக்குர்ஆன் 03:26






நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், அது நிரந்தரமல்லவே! 

பூமியிலிருந்து கொண்டு போன ஆக்சிஜன்,தண்ணீர்,உணவு முதலியவை தீர்ந்த பின் பூமியிலிருந்து தான் அவைகள் திரும்பவும் அனுப்பப் பட வேண்டும். எனவே குர்ஆன் 
சொல்வது போல் ந
ிரந்தர தங்குமிடம் பூமியே!அடுத்து மனிதனை சிந்திக்கச் சொல்கிறது குர்ஆன். அதன்படி அய்ரோப்பியர்கள் சிந்தித்தார்கள். கஷ்டப் பட்டார்கள். அதன் பலனை அனுபவிக்கிறார்கள். முஸ்லிம்களிடம் குர்ஆன் இருந்தும் அதன் அருமை தெரியாமல், சிந்திக்காததனால் பின் தங்கி இருக்கிறார்கள். மேலும் அய்ரோப்பியர்கள் எந்த அளவு உலகுக்கு நன்மை செய்திருக்கிறார்களோ, ஒழுங்கான வழிகாட்டுதல்இல்லாததனால் அதே அளவு தீமைகனையும் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. 




பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175 பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10 இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)



பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!

மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே! சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.


மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

மேற்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலிருந்தும் நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ,புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29


பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175 பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

Thursday, 30 June 2011

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.

யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.


முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.

கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.

ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?. 

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.

ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.

யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)

யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)

உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham - Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.

எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.


நன்றி அதிரை முஜீப்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR