ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday 18 August 2014

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு-1


இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம்.
இந்தப் போரில் எண்ணற்றவர்கள்
சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர்
தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
இத்தியாக வேள்வியில் ஈடுபட்ட வர்களில்
முஸ்லிம்களின் பங்கு மகத்தானது.
இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம்
தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி'
என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர்
குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன்
எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச்
சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம்
செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக
எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய
மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட
விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின்
விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப்
பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில்
கூறப்பட்டுள்ளது.
அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத்
திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான்
என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப்
பற்றிச் சங்க இலக்கியங்கள்
புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப்
போன்று கடற்போர் பல செய்தவர்
குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம்
நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன்
இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை
விரட்டியடிக்க கடற்போர் பல செய்த
குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய
விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில்
சாகசங்கள் புரிந்த இந்த வீரத்
தளபதியை வெற்றி கொள்ள
முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக்
கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம்
பெற்றது. ஆனால்,
அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம்
என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும்
'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம்' என்று பாடினார்
மகாகவி பாரதியார். அந்த
அளவுக்கு அவரது மனதில்
நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம்
ஆண்டு தொடங்கிய
பெராஸி இயக்கமும் அதன் பின்
தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும்
என்று கூறலாம்.
வஹாபி இயக்கம்
என்று வரலாற்றாசிரியர்களால்
குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர்
சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ்
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல
போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம்
நடத்தியது. வங்கத்தில்
வரி கொடா இயக்கம்
நடத்தி நாடியா மாவட்டத்தில் 24
பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச்
சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம்
அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன்
அமரகவி பாரதி பாடியதற்கு இந்த
வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம்
என்று உகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில்
ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து,
பிறகு அவர் களுக்கு எதிராக மாறியவர்
கான்சாஹிப்.. இவர் யூசுப்கான்,
நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப்,
கும்மந்தான், கம்மந்தான்
சாகிபு என்று பல்வேறு பெயர்களால்
அழைக்கப்பட்டார். யூசுப் கான்
சாஹிபு மதுரையில் ஆங்கிலே யரின்
கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச்
சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப்
பிரகடனம் செய்தவர்.
இவர் தொழுகை நடத்திக்
கொண்டிருந்த போது சொந்த
நாட்டுத் துரோகிகளால் காட்டிக்
கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர்
அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
தொடரும் ..

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR