ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday 17 March 2014

உங்கள் வேட்பாளர்களை உங்களுக்குப்பிடிக்கவில்லையா?

ஒரு தொகுதியில் போட்டியிடும்
அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும்
முறையான 'நோட்டா' முறை, பாராளுமன்ற
தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக
இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
நோட்டா ( None of the Above – NOTA ; புதிதாக
வாக்கு ) அனைவருக்கும் எதிரான வாக்கு
என்று பொருள். இந்திய அரசியல்
அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான
உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும்.
தான் எந்த ஒரு வேட்பாளருக்கும்
வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும்
இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த
தொகுதியில் நிற்கும்
வேட்பாளரை தான் வெறுக்கிறேன்
என்று அர்த்தம் கொள்ளப்படும்.
இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர்
27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி இப்பட்டன்
வாக்கு எந்திரத்தில் பொருத்தப்பட
உள்ளதாக தேர்தல் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும்
சமூக ஆர்வலர்கள் அயராமல்
போராடியதற்கான வெற்றி இப்போது உச்ச
நீதிமன்றத் தீர்ப்பாகக் கிடைத்திருக்கிறது.
எல்லா வேட்பாளர்களையும்
நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு;
அதை ரகசியமாகத் தெரிவிக்கும் வசதியும்
அவர்கள் உரிமை என்று தெளிவாகச்
சொல்லிவிட்டது நீதிமன்றம்.
இதை வர விடாமல், அரசு மட்டத்திலும்
நீதிமன்றத்திலும் இழுத்தடித்த கட்சிகள்
எல்லாம் இப்போது இதை வரவேற்பதாகப்
பாவனை செய்கின்றன. முன்னர்
வேட்பாளர்கள் சொத்துக்
கணக்கு தெரிவிக்க வேண்டும் என்ற
விதியைத் தேர்தல் ஆணையம்
கொண்டுவந்தபோது, எல்லாக்
கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால், அந்த
விதியும் உச்ச நீதிமன்ற உத்தரவால்தான்
நடைமுறைக்கு வந்தது.
நோட்டை நீட்டி, என் ஓட்டை வாங்க முயற்சிக்கும்
வேட்பாளர்களுக்கெல்லாம் நான்
நோட்டா' போடலாம். ஆக, 'நோட்டா' மக்கள்
கையில் கிட்டியிருக்கும் தோட்டா.
நிராகரிப்பு ஓட்டுகள் இதர வேட்பாளர்களின்
ஓட்டுகளைவிட அதிகமாக இருந்தால்,
மறு தேர்தலுக்குத்தான் உத்தரவிட வேண்டும்.
அந்தத் தேர்தலில், முந்தைய நிராகரிக்கப்பட்ட
வேட்பாளர்கள் மறுபடியும் நிற்கத் தகுதி
இல்லை. அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்.
உங்களது தொகுதி
வேட்பாளர்களை உங்களுக்கு
பிடிக்கவில்லையெனில்… நீங்கள் ஓட்டுப்
போட போகாமலோ அல்லது அங்குப் போய்
உங்களது ஓட்டை செல்லாமலோ
ஆக்குவதென்பதைவிட
உங்களது பொன்னான
எதிர்ப்பை பதிவு செய்யும்
வசதிக்குதான் இந்த நோட்டா!!
உங்கள் வேட்பாளர்களை உங்களுக்குப்
பிடிக்கவில்லையா????? உங்கள்
வாக்கை 'நோட்டா' (NOTA)வில்
பதிவு செய்யுங்கள்.
1) If you are not satisfied with any candidates
2) if you think the present system not working in
welfare of public
3) if you think all politicians are making false
promise
4) if you find any political party field corrupt and
criminal recorded candidates.
5) if you dont have any faith any party
THEN DONT LOOSE YOUR HEART.AFTER 6
DECADES THE GOVT AND EC HAVE GIVEN A REAL
FREEDOM AND GOOD OPPORTUNITY TO SHOW
YOUR DISAPPROVAL BY CASTING YOUR VOTE FOR
NOTA@ LAST BUTTON IN EVM.
Please dont compromise your valuable vote for
others.
ஓட்டுப் பதிவில் சமீபக் காலத்தில்
இடம் பெற்றுள்ள 'நோட்டா – NOTA'
ஓர் வரபிரசாதம்!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR