ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday 2 March 2014

குர்ஆனில் பேசும் எறும்புகள்!

நபி சுலைமானிடம் பேசிய எறும்பு..
இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)
அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது
எறும்பு பேசியது:
அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ‘எறும்புகள் பேசியதாகவும்,அது
கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை)
அவர்கள் சிரித்ததாகவும்’ இங்கே கூறப்படுகிறது.
அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு
முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த
அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது
நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி
விரிவாகக் காண்போம்.
எறும்பும் அதன் வகைகளும்
எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப்
பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த
அறிவியலார் ‘உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு
பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும்
எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான்
வாழ்கின்றன.
பாதை மாறாது திரும்பும் அதிசயம்
நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.
அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு
தமது வசிப்பிடங்களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும்
போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு
புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன்
அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான்
எனபதைப் பார்ப்போம்.
துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு
இன எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து
வருகின்றன.
காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது
டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில்
தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.
அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது
கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும்
ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக
அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய
பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத
பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது
என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள்
பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே
பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு
சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை
சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி என
சிந்தித்தாலே தலை சுற்றுகிறது
நன்றி: குலசை சுல்தான்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR