ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday 25 March 2014

மாயமான மலேசிய விமானம் மர்மம் நீங்கியது

மாயமான
மலேசிய
விமானம்
இந்திய
பெருங்கடலில்
விழுந்திருக்கும்
என்று மலேசிய
பிரதமர்
நஜீப்
ரசாக்
தெரிவித்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்ன
இலைஹி ராஜிவூன்...
மேலும்
விமானத்தில்
பயணம்
செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க
வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில்
பயணம் செய்த பயணிகளின்
உறவினர்களுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்துள்ளார். மேலும், கடலில்
விமானம் விழுந்திருக்கலாம்
என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து விமானத்தை தேடும்
பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மிக முக்கியமான
தினசரி பத்திரிக்கையான "ஸ்டார்"
இன்று வெளியிட்டுள்ள
செய்தித்தாளில் முன்பக்கம்
"ஆர்.ஐ.பி எம்ஹெச்370"
என்று வெளியிட்டுள்ளது.அதன் பின்புறம்
மறைந்த பயணிகளின் பெயர் சிறிய
எழுத்துகளில் அச்சிட்டுள்ளது அந்த
செய்தி பத்திரிக்கை.
நியூ ஸ்ரைட் டைம்ஸ்" என்ற செய்தித்தாள்
முதல் பக்கம் முழுவதையும் கருப்பு நிறத்தில்
அச்சிட்டுள்ளது.மேலும்,அப்பக்கத்தில் "குட் நைட்
எம்ஹெச்370" என்ற வாசகமும் இடம்
பெற்றுள்ளது.அதுதான் மாயமான
மலேசிய விமானத்தில் இருந்து வந்த
கடைசி செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மலாய் மற்றும் சீன
மொழி பத்திரிக்கைகளும் முதல்
பக்கத்தை கருப்பு நிற பின்னணியுடன்
வெளியிட்டுள்ளன.
ஆங்கில பத்திரிக்கையான "சன்"
தனது செய்தித்தாளின்
பெயரை கருப்பு நிறத்தில்
வெளியிட்டுள்ளது. ஸ்டார்
செய்தித்தாள் இதைப்பற்றிய
செய்தியில்,"ஒரு நீண்ட நெடிய
காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது"
என்று கூறியுள்ளது.ஆனால்,இந்த நிமிடம்
வரை விமான மாயத்திற்கான தகவலை எந்த
ஊடகமும் வெளியிட இயலவில்லை.
"எம்ஹெச்370 விமானத்திற்கான
தேடுதல் தொடரும்" என்று மலேசிய
அரசு கூறியுள்ளது. எதிர்கட்சியை சேர்ந்த லிம் கிட்
சியாங் தனது டுவிட்டர்
பக்கத்தில்,"பயணிகளின்
குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது மிகவும்
வருத்தமான செய்தி.
அவர்களுக்கு மட்டும் அல்ல,உலகத்தின்
அனைத்து மக்களையும் இச்செய்தி கண்ணீர்
மழையில் தள்ளி உள்ளது" என்று கூறியுள்ளார்.
மலேசிய விமான பலியானவர்களின்
குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்
நிதி உதவி வழங்க இருப்பதாக மலேசிய
ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்
நிதிஉதவி வழங்குவ தாகவும்
தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும்
டெய்லி டெலிகிராப் என்ற
செய்தித்தாள் காணாமல் போன
மலேசிய விமானம் குறித்து மலேசிய
அதிகாரிகள் அளித்த அறிக்கைகள்
முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த
விசாரணையை திசை திருப்புகிறது.
மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான
தகவல்கலையே வெளியிட்டு உள்ளனர்.விமானம்
குறித்து விசாரணைநடத்தியவர்களிம் எந்த
தகவலியும் அவர்கள் சரிபார்க்கவில்லை
தற்போது இயந்திர கோளாறு காரணமாக
விமானம் வெடித்திருக்கலாம்
அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற
கோணத்தில் திருப்புகிறது. என அந்த
பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து பத்திரிகள் ஏற்கனவே அரசியல்
காரணங்களுக்காக தலைமை பைலட்
ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய
கூறுகள் உள்ளதாக
செய்தி வெளியிட்டு இருந்தன .தலைமை பைலட்
அரசியலில் ஆர்வமாக இருந்தார் எனரும்
எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின்
ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும்
தெரிவித்து இருந்தன.
நொறுங்கிய விமானம் கடலுக்குள் 20
ஆயிரம் அடி ஆழத்தில்
கிடப்பது தெரியவந்தது. கடலுக்குள் விழுந்த
விமானத் தில்
இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள்
(சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக
இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம்
அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தகவல்
தொடர்பு கருவிகளில்
ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின்
கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக் கையில்
அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்
பட உள்ளனர்.
மேலும்  அவர் கூறியதாவது,
இந்த செய்தி நிச்சயம்
ஏற்றுக் கொள்ள முடியாத
ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள்
அறிவோம். எனவே ஊடகங்கள் அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு சகோதரர்களே !...இது மாதிரியான
சந்தர்ப்பங்களிலும் ,
நமது ஒவ்வொரு தொழுகையின்
போதும் கீழ்காணும் இந்த
துஆவை அல்லாஹ்விடத்தில் கேட்டுக்
கொள்வோம் ....
" வாழும்போதும் திடீரென வரும்
ஆபத்துக்களிலிருந்தும் , நோய்களிலிருந்தும் ,
பிரச்சினைகளிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் அது போல
இறக்கும் போதும் ஏற்படும் சோதனைகளிலிருந்தும்
யா அல்லாஹ் நீ
எங்களை பாதுகாப்பாயாக !...
நீயே எங்களுக்கு பாதுகாவலன் .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR